தீங்குயிர்கொல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓரு பயிர் தெளிப்பான் உயிர்கொல்லி மருந்தினை வயலில் தூவும் காட்சி
A Lite-Trac four-wheeled self-propelled crop sprayer spraying pesticide on a field

தீங்குயிர்கொல்லிகள் அல்லது பீடைகொல்லிகள் எனப்படுபவை தீங்குயிர்/பீடைகளைக் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விலகச் செய்யும் (repelling) அல்லது அவற்றின் தாக்கத்தைத் தணித்து வைக்கும் தன்மை கொண்ட சில பொருட்களின் கலவையாகும்[1]. இவை ஒரு உயிர்க்கொல்லி வர்க்கத்தை சார்ந்தவையாகும். பூச்சிக்கொல்லிகளும், களைக்கொல்லிகளும் ஒருவகைப் பீடைகொல்லிகளே. இவை நச்சுத்தன்மை வாய்ந்த சில வேதிப்பொருட்களால் ஆனவை. இவை உயிர்களைக் கொல்லும் அல்லது அவற்றிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் படைத்தவையாகும். இவை வேளாண்மையில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

வரைவு[தொகு]

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு பீடைகொல்லிகளை பின்வருமாறு வரையறுக்கிறது:

மனித உணவு, விலங்கு உணவு, ஏனைய விவசாயத் தயாரிப்புக்கள் போன்றவற்றின் உற்பத்தி, அவற்றின் பதப்படுத்துதல், சேமிப்பு, இடமாற்றம் அல்லது விற்பனையில் குறுக்கிடும் தேவையற்ற தாவர, விலங்கு இனங்கள் உட்பட்ட அனைத்துப் பீடைகளையும் தடைசெய்யும், அழிக்கும், விலகச் செய்யும் அல்லது கட்டுப்படுத்தும், அத்துடன் விலங்குகளில் வாழும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்துப் பொருட்களும், கலவைகளும் பீடைகொல்லிகளாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. US Environmental (July 24, 2007), What is a pesticide? epa.gov. Retrieved on September 15, 2007.
  2. "Definitions for the Purposes of the Codex Alimentarius". Agriculture and Cnsumer Protection Department. FAO. பார்த்த நாள் சூன் 14, 2015.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தீங்குயிர்கொல்லி&oldid=2222493" இருந்து மீள்விக்கப்பட்டது