தில்யார் ஏரி

ஆள்கூறுகள்: 28°52′44″N 76°38′09″E / 28.87889°N 76.63583°E / 28.87889; 76.63583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்யார் ஏரி
Tilyar Lake
தில்யார் ஏரி Tilyar Lake is located in அரியானா
தில்யார் ஏரி Tilyar Lake
தில்யார் ஏரி
Tilyar Lake
அரியானாவில் ஏரியின் அமைவிடம்
தில்யார் ஏரி Tilyar Lake is located in இந்தியா
தில்யார் ஏரி Tilyar Lake
தில்யார் ஏரி
Tilyar Lake
தில்யார் ஏரி
Tilyar Lake (இந்தியா)
அமைவிடம்ரோத்தக் மாவட்டம், அரியானா,  இந்தியா
ஆள்கூறுகள்28°52′44″N 76°38′09″E / 28.87889°N 76.63583°E / 28.87889; 76.63583
பூர்வீக பெயர்तिलयार झील Error {{native name checker}}: parameter value is malformed (help)
முதன்மை வரத்துநன்னீர்
முதன்மை வெளியேற்றம்இல்லை
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு132 ஏக்கர்கள் (0.53 km2)
சராசரி ஆழம்10 அடி (3.0 m)
இணையதளம்www.haryanaforest.gov.in

தில்யார் ஏரி (Tilyar Lake) என்பது அரியானா மாநிலத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் திகழும் ஓர் ஏரியாகும். இது இந்தியாவின் தலைநகரமான தில்லி - பாசில்கா நெடுஞ்சாலையில், டெல்லியிலிருந்து எழுபது (70) கி.மீ. தொலைவில் அரியானாவில் உள்ள ரோத்தக் நகருக்கு அருகில் உள்ளது.[1]

டெல்லியின் எல்லையிலிருந்து தில்யார் ஏரி வளாகம் நாற்பத்திரண்டு (42) கி.மீ. தூரத்தில் உள்ளது. தில்யார் ஏரியின் வளாகத்தில் தில்யார் அல்லது ரோத்தக் உயிரியல் பூங்கா உள்ளது.[2] தில்யார் ஏரிக்குச் செல்ல கட்டணம் எதுவுமில்லை. குடும்பமாகப் பார்வையிடச் சிறந்த இடமான தில்யார் உயிரியல் பூங்காவின் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் பத்து (10), சிறியவர்களுக்கு ரூபாய் ஐந்து (5).[3] ஏரியில் மீன்பிடிக்க அனுமதிக் கட்டணம் ரூபாய் இருநூறு (200).[4]

இந்த ஏரி 132 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில், சுற்றியுள்ள பகுதிகளை ஒப்பிடும்போது மிகவும் பசுமைநிறைந்த பரப்பாக, ஒருங்கிணைந்த சுற்றுலா அமைவின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதனருகில் பல வசதிகளுடன் கூடிய தங்குமிடங்கள், ஓய்வறைகள் உள்ளன. பரந்த புல்வெளிகளும் இயற்கைக் காட்சிகளும் கொண்ட இந்த இடம் ஓய்வெடுக்கச் சிறந்த ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்வதால் மும்பை போன்ற தொலைதூர இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். ஏரியின் நடுவில் உள்ள சிறிய தீவில் தங்கும் பறவைகளை நோக்கச் சிறந்த இடமாகவும் திகழ்கிறது.[5]

மேற்கோள்[தொகு]

  1. Page 149, India: A Travel Guide, By B.R. Kishore, published 2001, Diamond Pocket Books (P) Limited, ISBN 81-284-0067-3
  2. Destination of the week : Tilyar Zoo Rohtak - by Indrajit Gehlot
  3. India Mapped: Tilyar Zoo
  4. http://myjourneythroughindia.wordpress.com/tag/tilyar-zoo-rohtak-haryana/ My journey through India
  5. "An official website of Haryana Tourism". Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்யார்_ஏரி&oldid=3637688" இலிருந்து மீள்விக்கப்பட்டது