திலீப் (தமிழ் நடிகர்)
Appearance
(திலீப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திலீப் | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
இறப்பு | 25 மே, 2012 மைசூர், கர்நாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | திலீப் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1980 - 2012 |
வாழ்க்கைத் துணை | ஹேமா[1] |
பிள்ளைகள் | பவ்யா, மவுரியா [1] |
திலீப் (இறப்பு: மே 25, 2012) இந்திய நடிகர், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். 1980-களில் உச்சத்தில் இருந்த இவர், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த வறுமையின் நிறம் சிகப்பு மற்றும் தூங்காதே தம்பி தூங்காதே முதலியவை மிகவும் பிரபலமானவையாகும். 1990-களில் ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளிவந்த வள்ளி திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் நடித்த ஞான் ஏகனன்னு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அத்திரைப்படத்தின் பாடல்கள் இன்று வரையிலும் கேரளாவில் பிரபலமாக உள்ளது. பெரும்பலான திரைப்படங்களில் இவர் கதையின் நாயகனுக்கு நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமலிருந்தார்.
குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
1980 | வறுமையின் நிறம் சிகப்பு | |
1982 | ஞான் ஏகனன்னு | மலையாளம் |
1983 | தூங்காதே தம்பி தூங்காதே | |
1988 | சொல்ல துடிக்குது மனசு | |
சம்சாரம் அது மின்சாரம் | ||
பெண்மணி அவள் கண்மணி | ||
மாப்பிள்ளை |
மரணம்
[தொகு]2012-ம் ஆண்டு மே மாதம், 25-ம் திகதி மாரடைப்பு காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்". நக்கீரன். 25, மே 2012. http://www.nakkheeeran.com/Users/frmNews.aspx?N=76340. பார்த்த நாள்: மே 25, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் திலீப்
- முன்னணி நடிகர் திலீப் மரணம் பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்
- நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம் பரணிடப்பட்டது 2012-05-28 at the வந்தவழி இயந்திரம்