திருவாலங்காடு ( நாகப்பட்டினம்)

ஆள்கூறுகள்: 11°02′25″N 79°31′05″E / 11.040362°N 79.51817°E / 11.040362; 79.51817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாலங்காடு
திருவாலங்காடு
இருப்பிடம்: திருவாலங்காடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°02′25″N 79°31′05″E / 11.040362°N 79.51817°E / 11.040362; 79.51817
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். லலிதா, இ. ஆ. ப
ஊராட்சி தலைவர்
மக்கள் தொகை 7,093 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


திருவாலங்காடு (Thiruvalangadu) என்பது தென்னிந்தியா, தமிழ் நாடு, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள 55 வருவாய் கிராமங்களுள் ஒன்றாகும்.

'திருவாலங்காடு' காவிரி ஆற்றின் தென்கரையில், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் அமைந்திருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ. தூரத்திலும் இவ்வூர் அமைந்திருக்கிறது. திருவாலங்காட்டில் பிரசித்திப் பெற்ற வட ஆரண்யேசுவரர் சிவன் கோயில் அமைந்திருக்கிறது. அம்மன் பெயர் வண்டார் குழலி. இங்கு காவிரி ஆற்றிலிருந்து 'விக்கிரமனாறு' என்ற புதிய கிளை ஆறு பிரிகிறது.

இங்கு காவிரி ஆற்றின் கரையில்தான், அப்பைய தீக்ஷிதரின் அதிஷ்டானம் இருக்கிறது.

திருவாலங்காட்டில் மாரியம்மன் கோவில், காளி கோயில், கன்னியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் இருக்கின்றனர்.

நிருவாகத் தகவல்[தொகு]

மாவட்டம்: மயிலாடுதுறை
வட்டம்: குத்தாலம்[3]
அஞ்சல்: திருவாலங்காடு மக்கள் தொகை: 2011 கணக்கெடுப்பின்படி திருவாலங்காட்டில் 1567 குடும்பங்களைச் சேர்ந்த 7093 நபர்கள் (3389 ஆண்கள் + 3704 பெண்கள்) வசிக்கிறார்கள்.[4]

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்[தொகு]

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும்.[5]

அமைவிடம்[தொகு]

இந்த ஊர் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[6]

அண்மையிலுள்ள நகரங்கள்[தொகு]

மயிலாடுதுறை, கும்பகோணம் குத்தாலம், ஆடுதுறை, திருவாவடுதுறை, கோவிந்தபுரம், திருவிடைமருதூர், திருபுவனம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "குத்தாலம் வட்டம் வருவாய் கிராமங்கள்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-16 அன்று பார்க்கப்பட்டது.
  4. View Population details
  5. ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
  6. திருவாலங்காடு அமைவிடம்

இவற்றையும் காண்க[தொகு]

திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் திருவாலங்கடு காவிரி ஆற்றை பற்றிய இந்த சிறு வீடியோவையும் பாருங்கள். https://www.youtube.com/watch?v=GBgoEjr4RgU மேலும் விரிவான தகவலுக்கு இந்த வலைத்தளத்தை பார்க்கவும்: http://thiruvalangadu.blogspot.in/