திருக்காவு துர்கா பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்காவு துர்கா பகவதி கோயில், இந்தியாவின் கேரள மாநிலம், மலபுரம் மாவட்டம், பொன்னானியில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயிலாகும் . இக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானதாகும். இதன் மூலவர் துர்கா தேவி ஆவார். கோயிலின் காலத்தைப் பற்றிய தெளிவான கிடைக்கவில்லை. எனினும், கேரளாவில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 துர்க்கை கோயில்களில் ஒன்றாக இக்கோயில் கருதப்படுகிறது. [1] திருக்காவு என்ற பெயரானது "திருக்காணி காடு" என்பதிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. வெட்டும் என்ற பகுதியில் கேரளாதீஸ்வரம், திருக்கண்டியூர், திருப்பிரங்காடு ஆகிய பழமையான மற்றும் புனிதமான கோயில்களுக்கு திப்பு சுல்தான் ஏற்படுத்திய சீரழிவுகள் பயங்கரமானதாகும். [2]

மூலவர்[தொகு]

இங்குள்ள மூலவர் சக்கரம், சங்கு, வரத முத்திரை மற்றும் இடுப்பில் ஒரு கையை வைத்த நிலை என்ற வகையில் நான்கு கைகளுடன் உள்ளார். இவர் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவர் என்ற வகையில் "சர்வபீஷ்டபிரதாயினி" என்று கருதப்படுகிறார். பகவதி பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று வெவ்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறார். .

மூலவரைத் தவிர, கோயில் வளாகத்தில் கிருஷ்ணர்,மகாகணபதி, சாஸ்தாவு, சித்தி விநாயகன், அனுமன், பிரம்ம ராட்சஸர்கள் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கோயில் குளத்தின் அருகில் மூல கணபதி சன்னதி உள்ளது. நாக ராஜா, நாக யக்ஷி, நாகர்களும் அருகே உள்ளனர்.

திருவிழாக்கள்[தொகு]

முக்கிய திருவிழா நவராத்திரி ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. நவராத்திரியின் விஜயதசமி நாளில் முறையான கல்வியின் ஆரம்பத்தைக் குறிக்கின்ற வித்யாரம்பம் நிகழ்த்தப்பெறுகிறது. அன்றைய தினம் இந்தக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் வந்து செல்கின்றனர். விருச்சிக மண்டலத்திருவிழாமண்டல பருவம் முழுவதும் இங்கு கொண்டாடப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]