திருக்காரியூர் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்காரியூர் மகாதேவர் கோயில்

திருக்காரியூர் மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் நகரில், மூவாட்டுப்புழா ஆற்றின் கிளை நதியான கோதையாற்றின் வடகரையில் அமைந்துள்ள கோயிலாகும். கேரளாவில் உள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றான இக்கோயில் பரசுராம முனிவரால் நிறுவப்பட்ட கடைசி திருக்காரியூர் கருதப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவத்திற்காகவும், புராணங்களுக்காகவும் இது முக்கியத்துவம் பெறுகிறது. திருக்காரியூரில் பல நூற்றாண்டு கால பழமையான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன

கோயில் அமைப்பு[தொகு]

திருக்காரியூர் மகாதேவர் கோயில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயிலாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் இரண்டு கோபுரங்கள் உள்ளன. கிழக்குக் கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் பெரிய ஆனைக்கொட்டிலைக் காணலாம். தேக்கு மரத்தால் ஆன கொடிமரம் செம்பு பூசப்பட்டு, மிகவும் பழமையாக உள்ளது. கிழக்குக் கோயில் கோபுரத்தின் எதிரில் பெரிய குளம் உள்ளது. இந்தக் குளத்தை எதிர்நோக்கி கோயில் உள்ளது.

மூலவர் சன்னதி செவ்வக வடிவில் இரண்டு தளங்களுடன் உள்ளது. இது கேரளாவில் உள்ள பெரிய செவ்வக மூலவர் சன்னதிகளைக் கொண்டதாகும். அழகிய ஓவியங்கள் மற்றும் மரச் சிற்பங்களால் கருவறை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]