திருக்கடவூர் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கடவூர் மகாதேவர் கோயில்

திருக்கடவூர் மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் திருக்கடவூரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது.[1][2]

புராணங்கள்[தொகு]

இக்கோயில் கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் ஒன்றாகும். தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரம் உள்ளது. மிருகண்டனும் அவன் மனைவி மருத்மதியும் (மனஸ்வினி) குழந்தைப்பேற்றிற்காக சிவனை வழிபட்டு வரத்தை நாடினர். அவர்களுக்குக் குறைந்த வாழ்நாளுடன் அதிக புத்திசாலிக் குழந்தை அல்லது அதிக வாழ்நாளுடன் குறைந்த அறிவு உள்ள குழந்தை என்ற வகையில் வரம் கிடைத்தது. மிருகண்டன், முந்தையதைத் தேர்ந்தெடுத்தார். 16 வயதில் இறக்க வேண்டிய சூழலில் உள்ள வகையில் ஒரு முன்மாதிரியான மகனான மார்கண்டேயரைப் பெற்றார்.[3][1]

மார்கண்டேயர் ஒரு சிறந்த சிவபக்தராக வளர ஆரம்பித்தார். அவர் இறக்கும் நாள் வரை சிவலிங்கத்தை தொடர்ந்து வணங்கிவந்தார். அவனுடைய பக்தியின் காரணமாக யமனின் தூதர்களால் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க முடியவில்லை. யமன் நேரில் வந்து கயிற்றை வீசியபோது அது சிவலிங்கத்தைச் சுற்றி விழுந்தது. சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவன் யமனைத் தாக்கி, கோபத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவனுக்கு வாழ்வாங்கு வாழ வரம் தந்தார். இது திருக்கடவூரில் நடந்ததாக கூறுவர்.

பிற தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். இக்கோயிலில் அய்யப்பன், விநாயகர், பிரம்மராட்சசர், யக்ஷினி, நாகராஜா உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன. கிருஷ்ணர் சன்னதி வெளியே தனி கருவறையில் உள்ளது. [3]

விழாக்கள்[தொகு]

ஆண்டுதோறும் ஸ்ராட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்துகொள்கின்றனர். 10 நாட்கள் திருவிழாவான திருவாதிரை ஆறாட்டு திருவிழா கும்பம் மாதத்தில் (பிப்ரவரி/மார்ச்) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "തൃക്കടവൂർ ശ്രീ മഹാദേവ ക്ഷേത്രം - ജന്മഭൂമി.കോം". Archived from the original on 2014-02-25. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
  2. "തൃക്കടവൂർ മഹാദേവർ ക്ഷേത്ര ഉത്സവത്തിന് കൊടിയേറി". mathrubhumi. 2013-03-04.
  3. 3.0 3.1 "തൃക്കടവൂർ ശ്രീ മഹാദേവ ക്ഷേത്രം". templedarsan.

வெளி இணைப்புகள்[தொகு]