திபெத்திய கூம்பலகு சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத்திய கூம்பலகு சில்லை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பிரிங்கில்லிடே
பேரினம்:
கார்போடகசு
இனம்:
கா. ரோபோரோவ்சுகி
இருசொற் பெயரீடு
கார்போடகசு ரோபோரோவ்சுகி
(பிர்சீவால்சுகி, 1887)

திபெத்திய கூம்பலகு சில்லை (Tibetan rosefinch)(கார்போடகசு ரோபோரோவ்சுகி), என்பது ரோபோரோவ்சுகி சில்லை என்றும் அழைக்கப்படுகிறது. இது சில்லைக் குடும்பமான பிரிங்கில்லிடேயில் உள்ள கூம்பலகன் சிற்றினமாகும். இது சில சமயங்களில் கோசுலோவியா என்ற ஒற்றை உயிரலகு பேரினத்தில் வைக்கப்படுகிறது. இது திபெத்திய பீடபூமியில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடம் மாண்டேன் தூந்திரம்ஆகும்.

பரவலும் வாழிடமும்[தொகு]

திபெத்திய கூம்பலகு சில்லை வடகிழக்கு திபெத்தில், புக்கான் போடா ஷான், அம்னே மச்சின் மற்றும் குன்லன் மலைகளில் கிங்ஹாய் மாகாணத்தில் காணப்படுகிறது. இந்த பறவைகள் பாறைகள் நிறைந்த புல்வெளிகள் மற்றும் அல்பைன் மேய்ச்சல் நிலங்களில், அரிதான தாவரங்கள் உள்ள பகுதிகளில் வாழ்கின்றன. இதன் பாழடைந்த வாழ்விடத்தின் காரணமாக, திபெத்திய கூம்பலகு சில்லை பிராண்டின் மலை பிஞ்சுகளைத் தவிர வேறு சில பறவைகளுடன் பகிர்ந்து கொள்கிறது.[2]

நடத்தை[தொகு]

திபெத்திய கூம்பலகு சில்லை பகலாடி வகையினைச் சார்ந்தது. இவை பெரும்பாலும் தரையில் வாழ்கின்றன. உணவைத் தேடி விரைவாகப் பறந்து செல்லும்.

உணவுமுறை[தொகு]

திபெத்திய கூம்பலகு சில்லை தரையில் இரை தேடுபவை. இவை முக்கியமாக விதைகள் மற்றும் லூஸ்வார்ட் (பெடிகுலரிசு) உள்ளிட்ட பூக்களின் துண்டுகளை உண்கின்றன[3]

ஓசை[தொகு]

திபெத்திய கூம்பலகு சில்லை அமைதியாகக் காணப்படும் பறவையாகும். இதன் அழைப்பானது, குறிப்பாகப் பறக்கும் போது அதிக சத்தத்துடன் கூடிய சுருக்கமான சீட்டிகளைக் கொண்டுள்ளது.[3][4] இது எப்போதாவது ஹிஸ்ஸிங் ஒலிகளை எழுப்புகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Carpodacus roborowskii". IUCN Red List of Threatened Species 2016: e.T22720616A94675837. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22720616A94675837.en. https://www.iucnredlist.org/species/22720616/94675837. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Clement, P.; Harris, A.; Davis, J. (2010). Finches and Sparrows. Helm Identification Guides. Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-3530-3. https://books.google.com/books?id=8XitjjeymKQC. பார்த்த நாள்: 2019-09-01. 
  3. 3.0 3.1 3.2 Clement, P (2019). Tibetan Rosefinch (Carpodacus roborowskii). Lynx Edicions, Barcelona. doi:10.2173/bow.tibros1.01. https://www.hbw.com/species/tibetan-rosefinch-carpodacus-roborowskii. பார்த்த நாள்: 1 September 2019. 
  4. "Tibetan Rosefinch (Carpodacus roborowskii) :: xeno-canto". xeno-canto. 2016-06-16. பார்க்கப்பட்ட நாள் 2019-09-03.