திண்ட்லு

ஆள்கூறுகள்: 13°04′22″N 77°34′05″E / 13.072749°N 77.568091°E / 13.072749; 77.568091
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்ட்லு
ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் வீரபத்திரர் கோயில்
ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் வீரபத்திரர் கோயில்
திண்ட்லு is located in கருநாடகம்
திண்ட்லு
திண்ட்லு
ஆள்கூறுகள்: 13°04′22″N 77°34′05″E / 13.072749°N 77.568091°E / 13.072749; 77.568091
நாடு India
மாநிலம்கருநாடகம்
பெருநகரம்பெங்களூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்[1]
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்560097

திண்ட்லு (Thindlu) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் பெங்களூர் நகர மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். ஒரு காலத்தில் பழமையான கிராமமாக இருந்த இந்த ஊர் தற்போது பெங்களூர் வடக்கு பகுதியின் ஒரு அங்கமாக உள்ளது. திண்ட்லு அதன் பண்டைய கோயிலான வீரபத்திரர் ( சிவனின் ஒரு வடிவம்) கோயிலுக்கு பிரபலமானது. தற்போது இப்பகுதி பல புதிய கட்டுமானங்களுடன் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. திண்ட்லு பைடராயனபுரா தொகுதியின் வித்யாரண்யபுரா வார்டுக்கு உட்பட்டது. பெங்களூரின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்றாக பைடராயனபுரா உள்ளது. அண்மைக் காலமாக பல புதிய குடியிருப்புகள் இங்கு உருவாகியுள்ளன. திண்ட்லு வித்யாரண்யபுரத்தின் கிழக்கேயும் சககார நகருக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கிராமப்புறமாக இருந்த இது, இப்போது பெங்களூர் நகரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பல புதிய குடியிருப்புகள் மற்றும் மக்கள் குடியேற்றத்தால் இந்த பகுதி தற்போது கிராமம் போல் இல்லை. இருப்பினும் சில பகுதிகளில் இன்னும் கிராம பாணியிலான பழைய வீடுகள் உள்ளன. பெங்களூரு ஊரக மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் கால்நடை வளர்ப்பு குறைந்துவிட்டாலும், இங்கும் இன்றும் காணலாம்.

கோயில்கள்[தொகு]

திண்ட்லுவில் உள்ள குரு சனீசுவரர் கோயில்
திண்ட்லுவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலின் ஒரு தோற்றம்

இந்த பகுதியில் குரு சனீசுவரர், அனுமன், வீரபத்திரர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல பழைய இந்து கோவில்கள் உள்ளன. அனுமன் சிலை பல நூறு ஆண்டுகளாக இருந்ததாகவும், அண்மையில்தான் கோயில் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. ஆஞ்சநேயர் கோவில் வீரபத்ரர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது. மற்றும் நஞ்சப்பா சதுக்கத்துக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. வீரபத்திரர் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டு அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. [2] வித்யாரண்யபுரத்தில் உள்ள புகழ்பெற்ற காளிகா துர்கா பரமேசுவரி கோயில் திண்ட்லு சதுக்கத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தொலைவில் உள்ளது. திண்டுலு சதுக்கத்தில் தொடம்மா தேவி கோயிலும் உள்ளது. அது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பழங்கால மரபுகளான தேர்த்திருவிழா, தீ மிதித்தல் போன்றவை திண்ட்லுவில் உள்ள வீரபத்ரர் கோயிலில் சமய விழாக்களில் நடைமுறையில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

பெங்களூரின் முக்கிய பகுதிகளை திண்ட்லுவிற்கு இணைக்கும் வகையில் பல பேருந்துகள் உள்ளன. பெங்களூர் மாநகரபோக்குவரத்துக் கழக வழித்தட எண் 288H திண்ட்லுவில் இருந்து ஆர்.கே. மார்க்கெட் வரை செல்கிறது. பின்னர் நேர்மாறாகவும் மற்று வழித்தடத்திலும் 288H எண் பேருந்து திண்ட்லுவில் இருந்து கெம்பே கவுடா பேருந்து நிலையம் வரை செல்கிறது. 288E வழித்தட எண்ணானாது பழமையான பெ.மா.போ.க வழித்தடங்களில் ஒன்றாகும். பெ.மா.போ.க. வழித்தட எண் 288E வித்யாரண்யபுரத்திலிருந்து சிவி ராமன் நகரை திண்ட்லு வழியாக இணைக்கிறது. கீழே உள்ள அட்டவணையில், திண்ட்லுவைக் கடந்து செல்லும் முக்கியமான பேருந்து வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல பேருந்துகள் வித்யாரண்யபுரத்திலிருந்து நஞ்சப்பா சதுக்கம் வழியாக நகரின் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. இது திண்ட்லுவிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது. திண்ட்லு சதுக்கத்திலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் கொடிகேஹள்ளி தொடருந்து நிலையம் உள்ளது. இந்த நிலையம் அண்மையில் மின்மயமாக்கப்பட்டு இரட்டை பாதையாக மாற்றப்பட்டது. பயணிகள் தொடருந்துகள் பல இங்கு நிற்கின்றன. அத்தகைய ஒரு தொடருந்து சிக் பல்லாபூர் - பெங்களூர் பயணிகள் வண்டி ஆகும், இது நந்தி மலையில் நிற்கிறது. இந்த அழகிய மலையை பார்வையிட கொடிகேஹள்ளியில் இருந்து இந்த தொடருந்தில் ஏறலாம். அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, இந்த தொடருந்து நிலையத்துக்கு செல்ல கொடிகேஹள்ளி-திண்ட்லு பிரதான சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. [3]

பிஎம்டிசி தடம் எண் துவக்கம் இலக்கு பாதை
288 ஆர்.கே. மார்கெட் திண்ட்லு மெஜஸ்டிக், மேக்ரி சதுக்கம், கங்காநகர், ஹெப்பால், கொடிகேஹள்ளி
288H மெஜஸ்டிக் திண்ட்லு மெஜஸ்டிக், மேக்ரி வட்டம், கங்காநகர், ஹெப்பல், கொடிகேஹள்ளி
288F மெஜஸ்டிக் கொடிகேஹள்ளி மதிகெரே, பிஇஎல் சதுக்கம், திண்ட்லு
288E/ 314 சி.வி.ராமன் நகர் வித்யாரண்யபுரா திண்ட்லு, ஹெப்பல், ஆர்டி நகர், சிவாஜிநகர்
401H யெலகங்கா யஷ்வந்த்பூர் ஜிகேவிகே, கொடிகேஹள்ளி, திண்ட்லு, பிஇஎல் சதுக்கம், மத்திகெரே
288M வித்யாரண்யபுரா கெம்பேகவுடா பேருந்து நிலையம் திண்ட்லு- சககாரா நகர்
276B திண்ட்லு (விருபாக்ஷபுரா) கெம்பேகவுடா பேருந்து நிலையம் நஞ்சப்பா வட்டம், பிஇஎல் வட்டம், மல்லேசுவரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 8 July 2016. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "SRI VEERABHADRA SWAMY TEMPLE, Thindlu, Vidyaranyapura Post, Bengaluru". Archived from the original on 2019-05-22.
  3. "Traffic curbs around Kodigehalli railway gate". Archived from the original on 27 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்ட்லு&oldid=3750094" இலிருந்து மீள்விக்கப்பட்டது