திடியூர் கண்டேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு கண்டேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:திடியூர், பாளையங்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாங்குநேரி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:கண்டேஸ்வரர்
தாயார்:அறம்வளர்த்த நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை திருவிழா,சிவராத்திரி திருவிழா, கிருஷ்ண ஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:வெள்ளத்தில் அடித்துச் சென்ற நந்தி சிலையை கிருஷ்ணக்கோனார் என்பவர் கண்டெடுத்தார்

திடியூர் கண்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், திடியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் முல்லை நிலம் சூழ்ந்த காட்டுப்பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது. கால்நடை மேய்ச்சல் தொழிலே பிரதான தொழிலாக இருந்து உள்ளது. மேய்சலுக்கு செல்பவர்கள் இங்குள்ள காட்டாற்றைக் கடந்து அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே மேய்ச்சலில் ஈடுபட முடியும். அவ்வாறு செல்பவர்களுக்கு காட்டாற்று வெள்ளத்தாலும் வனவிலங்குகளாலும் பெரும் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. அதனால் மேய்ச்சலுக்கு செல்பவர்கள் இத்தல இறைவனை வழங்கினால் அவர் தம்மை காப்பதாக ஐதீகம். அவ்வாறு ஒருநாள் மேய்ச்சல் முடிந்து கால்நடைகள் திரும்பிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளை காக்க வேண்டி மக்கள் இத்தல இறைவனிடம் கண்ணீர் மல்க வேண்டியுள்ளனர். மக்களின் வேண்டுதலுக்கு மனருகிய ஈசன் கால்நடைகளை வெள்ளம் அடித்துச்செல்லாமல் இருக்க வெள்ளத்தை இரண்டாக பிரித்து கால்நடைகளை கண்டத்திலிருந்து காத்துள்ளார். அன்று முதல் மேய்சலுக்கு செல்பவர்கள் இக்கோவில் முன் தங்களது கால்நடை மந்தைகளை கூடச்செய்து ஈசனுக்கு பூசை நடத்தி இத்தல இறைவனின் அனுமத்யுடனேயே மேய்ச்சல் பயணத்தை தொடங்கியுள்ளனர். இன்றளவும் மேய்ச்சலுக்கு செல்பவர்கள் இத்தல இறைவனை வணங்கி செல்வதை இங்கு காணலாம். மேய்சலுக்கு செல்வது முதல் வீடு திரும்பும் வரை எதிர் வரும் கண்டங்களில் இருந்து கால்நடைகளையும் மக்களையும் காப்பதால் இத்தல இறைவன் கண்டேஸ்வரர் என போற்றப்பட்டார். காலப்போக்கில் காட்டாற்று வெள்ளத்தில் கோவிலின் சில பகுதிகள் அடித்துச்செல்லப்பட்டது. கோவிலில் மூலவர் மட்டுமே வழிபடப்பட்டார். இவ்வூரை சேர்ந்த கிருஷ்ணக்கோனார் என்பவர் தனது மாடுகளை இவ்வூருக்கு அருகில் உள்ள குளத்தில் மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது தனது அரசக்கோள் எனப்படும் மேய்ச்சல் கபம்பு தேயாமலிருக்க கம்பின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உலோகத்தால் ஆன வளையத்தில் பாறை ஒன்று தட்டி ஓசை எழுப்பியதை கவணித்தார். மறுநாளும் அவ்வாறு இடித்து ஓசை எழ தன்னுடன் மேய்ச்சலில் ஈடுபட்டவர்களை அழைத்து அவ்விடத்தை தோண்டினார். தோண்டிய அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நந்தி சிலையை இறைவன் காட்டியுள்ளார். உடனே கிருஷ்ணக்கோனார் மற்றும் அங்கு இருந்தவர்கள் சேர்ந்து நந்தி சிலையை கோவிலுக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து பராமரித்து வந்தனர். தன்னை நம்பிவரும் பக்தர்களை எத்தகைய கண்டத்தில் இருந்தும் ஸ்ரீ கண்டேஸ்வரர் காத்து வாழ்வில் செழிப்புற செய்வார் என்பது நம்பிக்கை. பில்லி சூனியம், செய்வினை,குழந்தையின்மை,திருமண தோஷங்கள், இல்வாழ்க்கை பிரச்னை, தொழில் நட்டப்பிரச்னை ஆகியவை இத்தல இறைவனை மனமுருக வணங்கினால் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் இத்தலத்தின் கோபுரத்தில் விஷ்ணு வாசம் செய்வதாக கூறப்படுகிறது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் மூலவர் கிழக்கு நோக்கியும் தாயார் தெற்கு நோக்கியும் காட்சிதருகின்றனர். கருவறைக்கு வெளியில் மூலவருக்கு வலபுறம் விநாயகரும் இடபுறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமியும் காட்சி தருகின்றனர். கோவில் சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. ஈசான மூலையில் பைரவர் மற்றும் நவகிரகங்கள் அமைந்துள்ளது. கோவில் கோபுரத்தில் விஷ்ணு வாசம் செய்கிறார். வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் கார்த்திகை திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. இக்கோவிலில் சைவ, வைணவ ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி முப்பதும் திருப்பாவை திருவெம்பாவை முற்றோதல் நடைபெறுகிறது. சிவராத்திரி விழாக்கள் பிரசித்தி பெற்றது. பிரதோஷம், மாத சிவராத்திரி, சித்திரை மாதப்பிறப்பு, தை மாதப்பிறப்பு, சித்திரா பவுர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

மேற்கோள்கள்[தொகு]