தாவீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவீ
ထားဝယ်မြို့
டாவோய்
Skyline of தாவீ
தாவீ is located in மியான்மர்
தாவீ
தாவீ
Location in Myanmar (Burma)
ஆள்கூறுகள்: 14°05′0″N 98°12′0″E / 14.08333°N 98.20000°E / 14.08333; 98.20000
நாடு மியான்மர்
பிரிவுதாநின்தாரி பிரதேசம்
மாவட்டம்தாவீ மாவட்டம்
நகராட்சிதாவீ நகராட்சி
தலைநகரம்தாவீ
மக்கள்தொகை (2005)
 • மதங்கள்தேரவாத பௌத்தம் பௌத்தம்
நேர வலயம்MMT (ஒசநே+6.30)
தொலைபேசி குறியீடு59 [1]

தாவீ (முன்னர் டாவாய்) மியான்மரின் தென் கிழக்கில் உள்ள ஒரு நகரம் மற்றும் தாநின்தாரி பிரதேசத்தின் தலைநகராக உள்ளது. யங்கோனில் இருந்து தெற்கில் 614.3 கிமீ (381.7 மைல்கள்) மற்றும் தாவீ ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 139,900. தாவீ ஆற்றின் முகத்துவாரம் அருகில் இருப்பதால் ஒரு துறைமுகம் 30 கிமீ (18.6 மைல்கள்) அந்தமான் கடலில் இருக்கிறது மேலும் இதன் புவியல் அமைப்பால் மழை[ பருவகாலங்களில் இந்நகரத்தில் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது.

பர்மாவில் இருக்கும் 135க்கும் மேற்பட்ட இனமக்களில் தாவீ மக்களும் ஒரு இனமாகும்.

வரலாறு[தொகு]

தாவீ ஆற்றின் கரையோரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக தாவீ, மொன், காயின் மற்றும் தாய் மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். 11 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை, பாகன் பேரரசின் ஒரு பகுதியாக தாவீ இருந்தது. 1287 முதல் 1564 வரையான காலப்பகுதியில், தாவீ சுக்கோத்தாய் இராச்சியத்தின் பகுதியாகவும், அதனது ஆட்சியாளரான அவுத்தியா இராச்சியத்தின் (சியாம்) பகுதியாகவும் மாறியது.

1564 முதல் 1594 வரை, பர்மாவின் டோங்கூ இராச்சியத்தின் ஒரு பகுதியாக தாவீ இருந்தது. பின் 1594 மற்றும் 1614 க்கு இடையில் தற்காலிகமாக சியாம் இராச்சியத்தின் வசம் தாவீ திரும்பியது. 1614 முதல் 1740 வரை, பர்மிய அதிகாரத்தின் கீழ் தெற்கு நகரமாக இருந்தது, மேலும் ஒரு பர்மிய கேர்ரிசன் மூலம் பாதுகாக்கப்பட்டது. 1740-1757 வரையிலான பர்மிய உள்நாட்டு யுத்தத்தின் போது 1740 களின் பிற்பகுதியில், வடக்கு தென்நாசிரிம் கடற்கரையுடன் தாவீ, சியாமால் கைப்பற்றப்பட்டது. முதல் ஆங்கிலோ-பர்மிய போருக்குப் (1824-1826) பின்னர் தென்நாசிரிம் கடற்கரையானது பிரிட்டிஷ் வசம் சென்றது.

போக்குவரத்து[தொகு]

சமீபத்தில் தான் தாவீ நகரம் சாலை மற்றும் இரயில் வழியாக மியான்மர் முழுவதும் இணைக்கப்பட்டுள்ளது. தாவீயில் ஆழமான துறைமுகத்தை அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளன. [2] நவம்பர் 2010 இல், மியான்மர் துறைமுக அதிகாரசபை தாவீயில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இத்தாலிய-தாய் அபிவிருத்திக்கான் US $ 8.6 பில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. [3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீ&oldid=3557770" இருந்து மீள்விக்கப்பட்டது