உள்ளடக்கத்துக்குச் செல்

தாரிகா (அசுரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படையணிக்கு தாரிகா கோலம்

தாரிகா (Darika) என்பது முடியெட்டு என்ற கேரளாவைச் சேர்ந்த பாரம்பரிய சடங்கு நாடகத்தின் ஒரு பாத்திரம் ஆகும். [1] பகவதி அல்லது பத்ரகாளி வழிபாட்டிற்கான சடங்கு நடனம், பொதுவாக கேரளாவின் காளி கோவில்களில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. [2] இந்தக் கதை தாரிகா வதம் அல்லது தாரிகா கொலை என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கதையில், பிரம்மா, கொடூரமான அசுரர்களான தாரிகா மற்றும் தனவேந்திரன் ஆகிய இருவருக்கும் எந்த ஒரு ஆணின் கையிலும் மரணம் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளித்தார். ஆனால் இவர்களை ஒரு பெண்ணால் கொன்றுவிடமுடியும் என்ற சாபம் இருந்தது. இருவரும் சக்திவாய்ந்தவர்களாகி, தெய்வங்களுக்கும் தெய்வீக மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறினர். தேவர்கள் அவர்களைத் தோற்கடிக்க பல முயற்சிகளுக்குப் பிறகு, சிவபெருமான் நாரதர் அளித்த வடிவமைப்பைப் பின்பற்றி பத்ரகாளியை உருவாக்கினார். அனைத்து தேவர்களும் தங்கள் சிறப்பு ஆயுதங்களை தானமாக அளித்தனர், பத்ரகாளி கடுமையான போருக்குப் பிறகு அசுரர்களை அழிப்பதில் வெற்றி பெற்றார். [3]

சமீபத்தில் இக்கதையுடன் தொடர்புடைய "பள்ளிவாலு பத்ரவடகம்.." என்ற பாடல் பிரபலமானது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரிகா_(அசுரர்)&oldid=3824034" இலிருந்து மீள்விக்கப்பட்டது