உள்ளடக்கத்துக்குச் செல்

தாரா (இந்து தெய்வம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரா
Taraka
பிரகசுபதி தாராவுடன், சுரேந்திரப்புரி நவக்கிரக கோயிலில்
அதிபதிமகிழ்ச்சி மற்றும் புனிதத்தன்மைக்கான கடவுள்
வகைதேவி
துணைபிரகசுபதி
குழந்தைகள்கச்சா & புதன்[1]

தாரா (Tārā) என்பவர் மகிழ்ச்சி மற்றும் புனிதத்தன்மையின் இந்து தெய்வம். இவர் வியாழன் கிரகத்தின் கடவுளான பிருகசுபதி எனும் இந்துக் கடவுளின் மனைவி ஆவார். சில புராணங்களின்படி, தாரா சந்திரன் மூலம் புதனின் கடவுளான புதன் என்ற குழந்தையைப் பெற்றாள் பிருகசுபதி மூலம் கசன் என்ற மகனையும் பெற்றாள்.

கதை

[தொகு]

தாரா தேவர்களின் குருவான பிருகசுபதியின் மனைவி. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இவரது கணவர் தனது பெரும்பாலான நேரத்தைத் தேவர்களின் பிரச்சினைகள் மற்றும் விடயங்களில் செலவழித்ததால், இவர் தனது கணவரால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தார். ஒரு நாள், சந்திரன், தாராவைச் சந்தித்தார். தாராவைக் கண்டு அவளது அழகில் மயங்கினான். சந்திரா தாரா மீது இப்னாசிசைப் பயன்படுத்தினார்.[2]

பிரகசுபதி கோபமடைந்து, சந்திரனிடம் தனது மனைவியைத் திருப்பித் தருமாறு கோரினார். தாரா தன்னுடன் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பதாக பிருகசுபதியிடம் சந்திரன் கூறினார். ஒரு முதியவர் எப்படி இளம் பெண்ணுக்குக் கணவனாக முடியும் என்று விசாரித்தார். இதனால் பிருகசுபதி மேலும் கோபமடைந்து, சந்திரனை போருக்கு எச்சரித்தார். இந்திரனும் மற்ற தேவர்களும் போருக்குக் கூடினர். சந்திரன் தாராவைத் திரும்பக் கொடுக்கத் தயாராக இல்லை. மேலும் அவர் அசுரர்கள் மற்றும் அவர்களின் ஆசான் சுக்ராச்சாரியாரிடமிருந்து உதவியைப் பெற்றார். தேவர்களுக்குச் சிவனும் அவரது தோழர்களும் உதவினர். தேவர்களும் அசுரரும் போரை நடத்தவிருந்தனர். ஆனால் படைப்பாளி கடவுளான பிரம்மா, அவர்களைத் தடுத்து, தாராவைத் திருப்பித் தருமாறு சந்திரனை சமாதானப்படுத்தினார். சில பதிப்புகளில், சிவன் போரை நிறுத்தினார் என உள்ளது.

சிறிது காலம் கழித்து, தாரா கர்ப்பமாக இருப்பதை அறிந்த பிருகசுபதி, குழந்தையின் தந்தை யார் என்று அவரிடம் விசாரித்தார். ஆனால் தாரா அமைதியாக இருந்தாள். ஆண் குழந்தை பிறந்த பிறகு, சந்திரன் மற்றும் பிருகசுபதி இருவரும் தாம் தான் அந்தக் குழந்தையின் தந்தை என்று தெரிவித்தனர். ஆனால் இக்குழந்தை சந்திரனின் மகன் என்பதைத் தாரா வெளிப்படுத்தினார்.[3] பையனுக்குப் புதன் என்று பெயரிட்டனர்.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dalal, Roshen (18 April 2014). Hinduism: An Alphabetical Guide. Penguin UK. ISBN 9788184752779.
  2. Patel, Utkarsh (2020-06-05). "Tara and Chandradev: If a Dissatisfied Partner Has An Affair, Who Is To Be Blamed?". Bonobology.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-08-14.
  3. "Budha". 17 February 2016.
  • தவ்சனின் இந்து புராணங்களின் செவ்வியல் அகராதி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_(இந்து_தெய்வம்)&oldid=3899402" இலிருந்து மீள்விக்கப்பட்டது