உள்ளடக்கத்துக்குச் செல்

தாரா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரா சிங்
ਦਾਰਾ ਸਿੰਘ
தாரா சிங்
தாரா சிங்
பிறப்புதீதர் சிங் ரந்த்வா
ਦੀਦਾਰ ਸਿੰਘ ਰੰਧਾਵਾ

(1928-11-19)19 நவம்பர் 1928
தாரு சக் அம்ரித்சர் மாவட்டம், பஞ்சாப்
இறப்பு12 சூலை 2012(2012-07-12) (அகவை 83)
மும்பை, இந்தியாஇந்தியா
தேசியம்இந்தியர்
பணிமல்யுத்த வீரர், நடிகர்
வலைத்தளம்
dara-singh.com

தாரா சிங் (பஞ்சாபி மொழி: ਦਾਰਾ ਸਿੰਘ; 19 நவம்பர் 1928 – 12 ஜுலை 2012) ஒரு பஞ்சாபி மல்யுத்த வீரராக இருந்து பிறகு நடிகரானவர். 1952-ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், இந்தியாவின் ராஜ்ய சபாவிற்கு முதலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஆகஸ்ட் 2003 – ஆகஸ்ட் 2009 வரை பணியாற்றினார்.[1][2]

இவர் ஜுலை 12, 2012-ம் நாள் காலை 7.30 மணிக்கு அவருடைய மும்பை வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.[3][4]

ஆரம்ப கால வாழ்க்கையும் தொழிலும்

[தொகு]

தாரா சிங், சூரத் சிங் மற்றும் பல்வந்த் கவுர் என்ற் சீக்கியர்களுக்கு[5] மகனாக நவம்பர் 19, 1928-ல் அமிர்தரஸ் மாவட்டத்தில் உள்ள தர்முசக் கிராமத்தில் பிறந்தார்.

மல்யுத்தம்

[தொகு]

இவர், 132 கிலோ எடையும், 6'2" அடி உயரமும் இருந்தார். இவர் ஆரம்பகாலத்தில் கரலாகட்டை என்னும் பெலவானி வகை மல்யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பல்வேறு அரசர்கள் முன்னிலையிலும், வெளிநாடுகளிலும் மல்யுத்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.

விருதுகளும் அங்கீகாரமும்

[தொகு]
  • 1947-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் பங்குபெற்றும், மலேசியாவில் நடைபெற்ற போட்டியிலும் கோப்பையை வென்றுள்ளார்.
  • 1960 ஆம் ஆண்டு உலக மல்யுத்தப் பட்டம்[6]

திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும்

[தொகு]

1952-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் (சாங்க்திள்) நடிக்க ஆரம்பித்தார்.[1] 1960 முதல் 69 வரை முன்னனி நடிகராக இருந்த இவர் அதன் பிறகு பிற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர் சுமார் 140 திரைப்படங்களில் நடித்துள்ளார். 6 தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் இராமாயன் தொடரில் நடித்த அனுமான் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

தாரா படப்பிடிப்பகம்

[தொகு]

1978-முதல் பெரிய அளவில் மொஹாலியில் உள்ள தாரா படப்பிடிப்பகத்தின் உரிமையாளரும் இவரே.[7] அனைத்து வசதிகளுமுடைய இப்படப்பிடிப்பகத்தினை சிறிய நகரம் என்றும் கூறுவர்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Dara Singh taken home". News on death. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (மும்பை). July 12, 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Dara-Singh-taken-home/articleshow/14835762.cms. பார்த்த நாள்: July 12, 2012. 
  2. "Hema garam, won't canvass for Dharam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. June 18, 2009. http://timesofindia.indiatimes.com/india/Hema-garam-wont-canvass-for-Dharam/articleshow/626780.cms. பார்த்த நாள்: February 15, 2010. 
  3. Dara Singh Dead : Breathed His Last at 7.30 AM
  4. Dara Singh passes away - Entertainment - DNA
  5. Bhandari, Prakash (2009-06-18). "‘Dara Singh, president of Jat Mahasabha'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (The Times Group). http://timesofindia.indiatimes.com/india/Hema-garam-wont-canvass-for-Dharam/articleshow/626780.cms. பார்த்த நாள்: 2010-02-15. 
  6. "பிரபல நடிகரும், மல்யுத்த வீரருமான தாரா சிங் காலமானார்". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2013.
  7. "Dara Studio". பார்க்கப்பட்ட நாள் 2011-12-11.
  8. "Dara Studio map". பார்க்கப்பட்ட நாள் 2011-12-11.

^Wrestler-actor Dara Singh passes away Wrestler-actor Dara Singh passes away

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_சிங்&oldid=3095299" இலிருந்து மீள்விக்கப்பட்டது