தான்னே தேவி கோயில்

ஆள்கூறுகள்: 27°33′00″N 83°50′13″E / 27.550°N 83.837°E / 27.550; 83.837
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தான்னே தேவி கோயில்
தான்னே தேவி கோயில் is located in நேபாளம்
தான்னே தேவி கோயில்
நேபாளத்தில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாவட்டம்:நவல்பராசி மாவட்டம்
அமைவு:தும்கிபாஸ், பர்தாகாட் நகராட்சி
ஆள்கூறுகள்:27°33′00″N 83°50′13″E / 27.550°N 83.837°E / 27.550; 83.837
கோயில் தகவல்கள்

தான்னே தேவி கோயில் ( Daunne Devi Temple) என்பது நேபாளத்தின் நவல்பராசி மாவட்டத்தில் அமைந்துள்ள துர்கையின் ஆலயமாகும். பர்தாகாட்டில் இருந்து தும்கிபாஸ் செல்லும் பாதையில் 1033 மீ.மீ. உயரத்தில் மலைப்பாதையில் இந்த கோயில் அமைந்துள்ளது.[1] இக்கோயிலில் சிவாலயமும் உள்ளதால், சிரவண மாதத்தில் (ஆடி அல்லது ஆவணி) பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.[2] இக்கோயில் ஜங் பகதூர் ராணா என்பவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. [2]

தான்னே மலை பழங்காலத்தில் " திரிகூட வர்வதம்" என்று அழைக்கப்பட்டது. இது வால்மீகி தியானம் செய்ய வந்த இடமாகும்.[2][3] கௌதம புத்தரின் தாய் மாயா தியானத்திற்காக வருகை தந்த இடமாகவும் நம்பப்படுகிறது..[4]

இக்கோயிலில் நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சியில் கோயிலுக்கு அருகில் மூன்று கல்வெட்டுகளும், பண்டைய நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Daunne Devi Temple Nawalparasi Nepal - Khojnu.com". பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  2. 2.0 2.1 2.2 "धार्मिक पर्यटकीय गन्तव्य : दाउन्ने मन्दिर". Saurahaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  3. "धार्मिक–पर्यटकिय नवलपुरको चिनारी". SouryaOnline. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  4. "Lumbini Development Trust- Birthplace of Buddha, Historical Place of Nepal, The World Heritage SiteLumbini Development Trust". பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்னே_தேவி_கோயில்&oldid=3816917" இலிருந்து மீள்விக்கப்பட்டது