தாடிபத்திரி

ஆள்கூறுகள்: 14°55′N 78°01′E / 14.92°N 78.02°E / 14.92; 78.02
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாடிபத்திரி
நகரம்
தாடிபத்திரி நகராட்சி அலுவலக கட்டிடம்
தாடிபத்திரி நகராட்சி அலுவலக கட்டிடம்
அடைபெயர்(கள்): Tadpatri
தாடிபத்திரி is located in ஆந்திரப் பிரதேசம்
தாடிபத்திரி
தாடிபத்திரி
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தாடிபத்திரி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°55′N 78°01′E / 14.92°N 78.02°E / 14.92; 78.02
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
பரப்பளவு[1]
 • மொத்தம்7.46 km2 (2.88 sq mi)
ஏற்றம்229 m (751 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்1,08,171
 • அடர்த்தி15,000/km2 (38,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்515411
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AP
வாகனப் பதிவுAP - 25
இணையதளம்tadipatri.cdma.ap.gov.in/en

தாடிபத்திரி (Tadipatri or Tadpatri) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். [2] தாடிபத்திரி நகரம், கர்னூல் மாவட்டம் மற்றும் கடப்பா மாவட்டம் ஆகியவற்றின் எல்லையில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ளது.

மாவட்டத் தலைமையிடமான அனந்தபூருக்கு வடகிழக்கே 56 கிமீ தொலவில் தாடிப்பத்திரி நகரம் அமைந்துள்ளது.[3] தாடிபத்திரி நகரத்தில் பெண்ணாற்றின் தென்கரையில், ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த தொன்மை வாய்ந்த சிந்தல வெங்கடரமணர் கோயில் புகழ்பெற்றது.

மக்கள்தொகையியல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தாடிபத்திரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,08,171 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 54,015 ஆகவும், பெண்கள் 54,156 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் 68,750 (71.39 %) ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 11,869 அகவுள்ளனர்.

தாடிபத்திரி நகர மக்கள்தொகையில் இந்துக்கள் 78,102 (72.20%) ஆகவும், இசுலாமியர் 28,757 (26.58%) ஆகவும், மற்றவர்கள் 1.22% ஆகவும் உள்ளனர். [4]

உள்ளாட்சி நிர்வாகம்[தொகு]

7.46 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முதல் நிலை நகராட்சியான தாடிபத்திரி நகராட்சி 1920ல் நிறுவப்பட்டது. இந்நகராட்சி 34 நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டது.[5]

போக்குவரத்து[தொகு]

மூன்று நடைமேடைகள் கொண்ட தாடிபத்திரி தொடருந்து நிலையத்தில் நாள்தோறும் 43 தொடருந்துகள் நின்று செல்கிறது. [6] [7]

சிந்தல வெங்கடரமணர் கோயில்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tadipatri
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாடிபத்திரி&oldid=3557600" இருந்து மீள்விக்கப்பட்டது