சிந்தல வெங்கடரமணர் கோயில்
சிந்தல வெங்கடரமணர் கோயில் | |
---|---|
Location within Lua error in Module:Location_map at line 526: "{{{pushpin_map}}}" is not a valid name for a location map definition. | |
பெயர் | |
பெயர்: | சிந்தல வெங்கடரமணர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தாடிபத்திரி |
மாவட்டம்: | அனந்தப்பூர் |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வெங்கடரமணர் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |


சிந்தல வெங்கடரமணர் கோயில் அல்லது சிந்தலராயசுவாமி கோயில் (Chintalarayaswamy Temple or Sri Chintala Venkataramana Temple) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்திரி எனும் நகரத்தில் திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைணக் கோயில் ஆகும். [1] [2]
தாடிப்பத்திரி நகரத்தில் பாயும் பென்னா ஆற்றின் கரையில் இக்கோயில் உள்ளது. [1] இக்கோயில் கருங்கல் சிற்பங்களால் புகழ்பெற்றது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை ஆந்திராவின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இக்கோயிலின் கருட மண்டபம், கருங்கல் சக்கரங்கள் கொண்ட தேர் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
பெயர்க் காரணம்
[தொகு]இங்கு கோயிலின் மூலவரான வெங்கடேஸ்வரர் புளிய மரத்தில் கீழ் கோயில் கொண்டுள்ளதால், சிந்தல வெங்கடேஸ்வர் எனப்பெயர் பெற்றார். தெலுங்கு மொழியில் சிந்தா என்பதற்கு புளியமரம் எனப்பொருளாகும்.[2]
வரலாறு
[தொகு]இக்கோயில் 16-ஆம் நூற்றாண்டின் நடுவில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. [3] கிருஷ்ணதேவராயரின் அமைச்சர் இரண்டாம் பெம்மசானி திம்மைனயுடு என்பவர் இக்கோயிலை கட்டினார்.[4][5] இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.[3]
படக்காட்சிகள்
[தொகு]-
விமானங்களுடன் கூடிய சிந்தலராய கோயில்
-
தூணில் யாளியை ஓட்டும் மனிதச் சிற்பம
-
சிற்பங்களுடன் தூண்
-
நடன முத்திரை
-
யானைச் சிற்பங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Poverty Alleviation Through Self-Help Groups in Anantapur District of Andhra Pradesh. Anchor Academic Publishing. 2017.
- ↑ 2.0 2.1 Guide to Monuments of India. Viking. 1989.
- ↑ 3.0 3.1 Architecture and Art of Southern India: Vijayanagara and the Successor States 1350-1750. Cambridge University Press. 1995.
- ↑ Sriramamurty, Y. (1973), "The Pemmasani Family" (PDF), Studies in the History of the Telugu country during the Vijayanagara period 1336 to 1650 A D, Karnatak University/Shodhganga, p. 272
- ↑ Ramaswami, N.S (1975), Temples of Tadpatri, Govt. of Andhra Pradesh, p. 10-11