தமிழமுதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

This template is misplaced. It belongs on the talk page: பேச்சு:தமிழமுதன்.

கவிஞர் தமிழமுதன்
பிறப்புஜெ.தணிகாசலம்
சென்னை, தமிழ்நாடு இந்தியா
பெற்றோர்த. ஜெயராமன்
ஜெயலட்சுமி

கவிஞர் தமிழமுதன் ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். தமிழ்நாடு திரைப்படப் பாடலசிரியர்கள் சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழமுதன் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சாத்தனூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது பெற்றோர் த. ஜெயராமன், ஜெயலட்சுமி.இவரது இயற்பெயர் தணிகாசலம். இவர் சென்னையில் சாமராவ் துவக்கப்பள்ளி மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றவர். ஓவியர் ஆக வேண்டும் என்பதே இவரது துவக்கக் கால விருப்பமாக இருந்தது. கவிதைகள் எழுதி பள்ளியில் பரிசுகள் வாங்கியதால், அதிலேயே தொடர்ந்து இயங்க ஆரம்பித்தார். இவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் மீதுள்ள பற்றின் காரணமாக தமிழமுதன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.

கவிதைகள்[தொகு]

இவரது முதல் கவிதை பாக்யா சித்திரைச் சிறப்பிதழில் வெளியானது. கண்ணதாசன் பதிப்பகம், கவிதை உறவு, உரத்த சிந்தனை இணைந்து நடத்திய கவிதைப்போட்டியில், ‘மதக்கலவர களத்தில்/ செருப்புகள் மட்டும்/ ஒன்றாகக் கிடந்தன/ மனிதர்கள் பிரிந்து பி...ரி...ந்து’ என்ற கவிதைக்கு முதல் பரிசு மட்டுமல்லாமல், ‘வைரவரிக் கவிஞர்’ என்று காந்தி கண்ணதாசன் அளித்த விருதும் கிடைத்தது. அரைக்கம்பத்தில் என்ற முதல் புதுக்கவிதை நூலுக்கு ஸ்டேட்பேங்ஆப்இந்தியா ‘சிறந்த புதுக்கவிதை நூல்’ என்ற முதல் பரிசு பெற்றிருக்கிறார்.[2]

எழுதிய கவிதை நூல்கள்[தொகு]

 1. அரைக்கம்பத்தில்
 2. புன்னகைப்பிரதேசம்
 3. அறிவுச் சூர்யன் அண்ணல் அம்பேத்கர் (புதுக்கவிதையில் அம்பேத்கர் வரலாறு)
 4. நீர் மத்தாப்பு (ஹைகூ கவிதைகள்)
 5. எந்த முகத்தோடு வருவாய்
 6. ஐந்துணையாவது
 7. மௌன அம்புகள்

திரைப்பட பாடலாசிரியராக[தொகு]

 • எழில் இயக்கிய ‘அமுதே’ படத்தில் அனைத்துப் பாடல்களும்

1.அன்பே அது ஒரு காலம்

 உன்னிமேனன்

2.வளையல் காடு

 கார்த்திக்,மால்குடி சுபா

3.என்ன என்ன நான்

 சொர்ணலதா

4.மதுர ஜில்லா

 மாணிக்கவிநாயகம்,பிரியா

5.போட்டுத்தள்ளுடா

 கிருஷ்ணராஜ்
 • கலக்குற சந்துரு படத்தில் அனைத்துப் பாடல்களும்

1.சொல்லவா நான் 2.ஈச்சம்பாயி

 • கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் படத்தில் மூன்று

பாடல்கள் 1.முதல்முறை

 கார்த்திக்

2.வளைவுகளாலே

 அனிதா 

3.கோகிலம்மா

 சுர்முகி

களவாணியே களவாணியே மதுமிதா, ரஞ்சித்

 • [[கோரிப்பாளையம்

(திரைப்படம்)| கோரிப்பாளையம்]]

 • மிளகா
 • நேற்று இன்று நாளை
 • கரிசல்பட்டியும் காந்திநகரும்

மேற்கோள்கள்[தொகு]

 1. பாட்டுக்கு ஒரு சங்கம்!. குங்குமம். 15 சூலை 2016.
 2. "சங்கம் வளர்க்கும் சினிமாக் கவிஞர்!". கட்டுரை. வண்ணத்திரை. 4 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழமுதன்&oldid=3577438" இலிருந்து மீள்விக்கப்பட்டது