கண்ணதாசன் பதிப்பகம்
Appearance
கண்ணதாசன் பதிப்பகம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தகங்களை வெளியிடும் நிறுவனமாகும். இந்நிறுவனம் காந்தி கண்ணதாசனால் 1977இல் கீதா சமாஜம் என்ற பெயரில் தொடங்கப்பட்டதாகும். இவர் கவிஞர் கண்ணதாசனின் மகன் ஆவார். [1]
இப்பதிப்பகத்தின் முதல் நூல் துன்பங்களிலிருந்து விடுதலை ஆகும். [2] இப்பதிப்பகத்தில் கவிஞர் கண்ணதாசனின் நூல்களும், ஏனைய எழுத்தாளர்களின் நூல்கள் அச்சு நூல், மின்நூல், ஒலி நூல் என பல்வேறு வடிவங்களில் விற்கப்படுகின்றன.