தனுசு எ*

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தனுசு எ*
Gcle.jpg
தனுசு எ* (மையத்தில்) மற்றும் இரண்டு சமீபத்திய வெடிப்புகளின் எதிரொளி (Light Echo) (வட்டமிடப்பட்டது)
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை தனுசு விண்மீன் குழாம்
வல எழுச்சிக் கோணம் 17h 45m 40.0409s
நடுவரை விலக்கம் −29° 0′ 28.118″ [1]
விவரங்கள்
திணிவு(4.31 ± 0.38) × 106 M
(4.1 ± 0.6) × 106 M
வான்பொருளியக்க அளவியல்
தூரம்25,900 ± 1,400 ஒஆ
(7,940 ± 420[2] பார்செக்)

தனுசு எ* (Sagittarius A*) என்பது பால் வழி விண்மீன் பேரடையின் (galaxy) மையத்திற்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் ஒரு வானியல் ரேடியோ மூலம் ஆகும். இது விருச்சிக விண்மீன் குழாமத்திற்கும் மற்றும் தனுசு விண்மீன் குழாமத்திற்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இது தனுசு எ (Sagittarius A) என்ற ரேடியோ மூலத்தின் ஒரு பகுதி ஆகும்.சுருள் விண்மீன் பேரடை மற்றும் நீள்வட்ட வடிவமான விண்மீன் பேரடைகளின் மையமாக அதித நிறை கொண்ட கருந்துளை (supermassive black hole)[3] கருதப்படுகிறது, பால் வழி விண்மீன் பேரடையின் அதித நிறை கொண்ட கருந்துளைக்கு மிக நெருக்கமாக தனுசு எ* அமைந்துள்ளது.எஸ்2 என்ற விண்மீன் தனுசு எ* சுற்றிவருவதைக் கண்காணிப்பின் முடிவுகள் காண்பிக்கிறது. எனவே தனுசு எ* வின் இயக்கத்தை வைத்து பால் வழியின் மையத்தில் அதித நிறை கொண்ட கருந்துளை உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு முடிவுகள்[தொகு]

பூமிக்கும் தனுசு எ* வுக்கும் இடையில் தூசுக்களும் வாயுக்களும் அதிக அளவில் இருப்பதால் வானியலாளர்களால் கட்புலனாகும் நிறமாலையின் மூலம் தனுசு எ*வை கண்காணிக்க முடியவில்லை.[4] இப்போது உள்ள அதிகப்படியான கணினித்திரை பிரிதிறன் (Resolution) உதவியுடன் அளந்ததில் அதன் அலை நீளம் 1.3 மி.மீ.இது 37 பாகைத்துளி கோணவிட்டம் உடையது.சுமார் 26000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.மேலும் 44 மில்லியன் கிமீ விட்டம் உடையது.தனுசு எ* வின் சீரான இயக்கம், தோரயமாக வருடத்திற்கு -2.70 பாகைத்துளி வல எழுச்சிக் கோணம் (Right ascension) மற்றும் வருடத்திற்கு -5.6 பாகைத்துளி சரிவு (Declination).[5]

சான்றுகள்[தொகு]

  1. Reid and Brunthaler 2004
  2. Eisenhauer et al. 2003, § 3.1
  3. Reynolds 2008
  4. Osterbrock and Ferland 2006, p. 390
  5. Backer and Sramek 1999, § 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுசு_எ*&oldid=2746540" இருந்து மீள்விக்கப்பட்டது