பட்டாம்பூச்சி கொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்டாம்பூச்சி கொத்து
M6a.jpg
கூர்நோக்குத் தரவுகள் (J2000.0 சிற்றூழி)
விண்மீன் குழாம்விருச்சிகம்
வலது எழுச்சிக் கோணம்17 40.1நி
காந்த இறக்கம்−32° 13′
தொலைவு1.6 kly (491 Pc)
தோற்ற ஒளிப்பொலிவெண் (V)4.2
உருவளவு (V)25′
இயற்பியல் இயல்புகள்
ஆரம்6 ஒளி ஆண்டுகள்
வேறு பெயர்கள்மெசியே 6, புபொப 6405, Collinder 341, Melotte 178, Lund 769, OCL 1030, ESO 455-SC030
இவற்றையும் பார்க்க: திறந்த பால்வெளிக் கொத்து

பட்டாம்பூச்சி கொத்து (Butterfly Cluster), என்ற விண்பொருள் மெசியே 6 (Messier 6, M6) என மெசியே பொருட்களின் பட்டியலிலும் புபொப 6405 எனப் புதிய பொதுப் பட்டியலிலும் வகைப்படுத்தப்பட்டுள்ள விண் பொருளாகும். இது விருச்சிக விண்மீன் குழாமில் உள்ள ஒரு திறந்த விண்மீன் கொத்தாகும். பார்ப்பதற்கு தெளிவற்ற பட்டாம்பூச்சியைப் போன்ற தோற்றம் தெரிவதால் இப்பொருள் பட்டாம்பூச்சி கொத்து எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விண்ணில் பட்டாம்பூச்சி கொத்து இருப்பதை 1654 ஆம் ஆண்டு கியோவான்னி பட்டிஸ்டா ஓடியர்னா என்ற வானியலாளர் முதன் முதலில் கண்டறிந்தார். எனினும், முதலாம் தலைமுறை வானியலாளர் தாலமி இதனுடைய அண்டை கொத்தான தாலமி கொத்தை (மெ7) வெறும் கண்ணால் கண்டறிந்தபோது பார்த்திருக்கலாம் என்று ராபர்ட் போன்காமின் சூனியர் முன்மொழிந்துள்ளார். 1764 ஆம் ஆண்டில் சார்லஸ் மெசியே இவ்விண்மீன் கொத்தை எம்6 எனப் பட்டியலிட்டுள்ளார். இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இக்கொத்திலுள்ள விண்மீன்களின் எண்ணிக்கை, தூரம் மற்றும் பிற பண்புகள் அளவிடப்படாமல் இருந்தது.

பட்டாம்பூச்சி கொத்திலுள்ள பெரும்பாலான பிரகாச விண்மீன்கள் வெப்பமானவையாகும். இவை அலைமாலை விண்மீன் வகையில் நீல பி வகை நட்சத்திரங்களாகும். ஆனாலும் மிகப்பிரகாசமான நட்சத்திரமாக ஒளிர்வது கே வகை செம்மஞ்சள் பேருரு விண்மீன் ஆகும். பிஎம் வகை நட்சத்திரங்கள் அண்டை நீல நட்சத்திரங்களிடம் துல்லியமாக முரண்படுகின்றன. இவற்றின் தோற்ற ஒளிப்பொலிவெண் +5.5 முதல் +7.0 வரை மாறுபடுவதால் பிஎம் வகை நட்சத்திரங்கள் பகுதி ஒழுங்கற்ற மாறும் நட்சத்திரங்களாக வகைப்படுத்தப் படுகின்றன.

பட்டாம்பூச்சி கொத்துகளின் தொலைவு மதிப்பீடுகள் ஆண்டுக்காண்டு மாறுபட்ட தூரத்தை தருவனவாகவே உள்ளன. சராசரியாக 1600 ஒளி ஆண்டுகள் தூரத்தைக் கொண்டுள்ள இவற்றுள் சில 12 ஒளி ஆண்டுகள் வெளி பரிமாணத்தை கொடுக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த தோற்ற ஒளிப்பொலிவெண் 4.2 அளவில் காணப்படுவதாக நவீன அளவீடுகள் தெரிவிக்கின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]