விருச்சிகம் (விண்மீன் குழாம்)
Editing of this article by new or unregistered users is currently disabled. See the protection policy and protection log for more details. If you cannot edit this article and you wish to make a change, you can submit an edit request, discuss changes on the talk page, request unprotection, log in, or create an account. |
விருச்சிகம் | |
விண்மீன் கூட்டம் | |
![]() விருச்சிகம் இல் உள்ள விண்மீன்கள் | |
அடையாளக் குறியீடு | தேள் |
---|---|
வல எழுச்சி கோணம் | 16.8875 h |
நடுவரை விலக்கம் | −30.7367° |
கால்வட்டம் | SQ3 |
பரப்பளவு | 497 sq. deg. (33rd) |
முக்கிய விண்மீன்கள் | 18 |
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு | 47 |
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 14 |
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 13 |
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 3 |
ஒளிமிகுந்த விண்மீன் | கேட்டை விண்மீன் (Antares, α Sco)) (0.96m) |
Visible at latitudes between +40° and −90°. ஜூலை மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |
விருச்சிக விண்மீன் குழாம் (Scorpius) என்பது இராசிச் சக்கரத்தில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும். சிலர் இதை தேள் என கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Scorpius என்றும் அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் Scorpius என்ற பெயர் இலத்தீன் மொழியில் தேள் என்பதை குறிக்கும். இதன் குறியீடு ஆகும். இது துலாம் விண்மீன் குழாத்தின் தெற்குப் பகுதிக்கும் தனுசு விண்மீன் குழாத்தின் கிழக்குப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது பால் வழி நாள்மீன்பேரடையின் மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் இது தெற்கு அரைக்கோளப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய விண்மீன் குழாம் ஆகும்.
சிறப்புக்கூறுகள்
விருச்சிக விண்மீன் குழாத்தில் நிறைய பிரகாசமான விண்மீன்கள் உள்ளன. அவை, செவ்வாய் கிரகத்தின் பகைவன் என கருதப்படும் கேட்டை விண்மீன் (Antares, α Sco)), பீட்டா விருச்சிக விண்மீன் ( β1 Sco), டெல்டா விருச்சிக விண்மீன் ( δ Sco "தலைப்பகுதி"), தீட்டா விருச்சிக விண்மீன் (θ Sco), நு விருச்சிக விண்மீன் (ν Sco), க்சை விருச்சிக விண்மீன் (ξ Sco), பை விருச்சிக விண்மீன் (π Sco) , சிக்ம விருச்சிக விண்மீன் (σ Sco) டாவ் விருச்சிக விண்மீன் (τ Sco).[1][2]
மேலும் விருச்சிக விண்மீன் குழாத்தினை வரையும் போது, தேளின் வால் பகுதியின் முனையாக அமைவது லெம்ட விருச்சிக விண்மீன் (λ Sco) மற்றும் அப்சிலான் விருச்சிக விண்மீன் (υ Sco) என்ற இரண்டு விண்மீன்கள்.[3]
தீட்டா விருச்சிக விண்மீனின் (δ Sco) தோற்ற ஒளிப்பொலிவெண் அதிகபட்சமாக 2.3. இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 1.6 முதல் 2.3 வரை மாறிக்கொண்டே இருக்கும். இதன்படி இது விருச்சிக விண்மீன் குழாத்தில் இரண்டாவது பிரகாசமாக விண்மீன் ஆகும்.[4] கடைசி 10 ஆண்டுகளாக அப்சிலான் விருச்சிக விண்மீனில் தான் (υ Sco) குறுமீன் வெடிப்பு வேகமாக நடைபெருகிறது.[5] ஒமேகா1 விருச்சிக விண்மீன்(ω¹ Scorpii ) மற்றும் ஒமேகா2(ω² Scorpii) விருச்சிக விண்மீன் ஆகிய இரண்டும் இரட்டை விண்மீன்கள் ஆகும். இவை இரண்டும் மாறுபட்ட நீலம் மற்றும் மஞ்சள் வண்ணங்களை உடையன. விருச்சிக விண்மீன் குழாம், பால் வழி நாள்மீன்பேரடையின் முக்கியப் பகுதியில் இருப்பதால் இதில் நிறைய விண்மீன் கொத்துகள் மற்றும் நெபுலாக்கள் உள்ளன. மெசியர் 80 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண் 7.3 உடைய விண்மீனும் இந்த விண்மீன் குழாமப் பகுதியில் உள்ளது. இது புவியிலிருந்து 33000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Mark R. Chartrand III (1983) Skyguide: A Field Guide for Amateur Astronomers, p. 184 (ISBN 0-307-13667-1).
- ↑ Constellations: A Guide to the Night Sky, http://www.constellation-guide.com/constellation-list/scorpius-constellation/
- ↑ Fred Schaaf (Macmillan 1988) 40 Nights to Knowing the Sky: A Night-by-Night Sky-Watching Primer, p. 79 (ISBN 978-0-8050-4668-7).
- ↑ "Delta Scorpii Still Showing Off". 2007-06-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ AAVSO: Variable Star of the Season: U Scorpii
- Levy, David H. (2005). Deep Sky Objects. Prometheus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59102-361-0.
- Ian Ridpath and Wil Tirion (2007). Stars and Planets Guide, Collins, London. ISBN 978-0-00-725120-9. Princeton University Press, Princeton. ISBN 978-0-691-13556-4.