தடப்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தடப்பந்து

தடப்பந்து(Trackball) என்பது, கணித்திரையில் சுட்டிக்காட்ட உதவும் பந்து பொதித்துள்ள கருவி ஆகும். இந்த கருவியிலுள்ள பந்தை சுழற்றுவதன் மூலம், நமது கை அசைவுகள் நகரும் திசைக்கு ஏற்ப, கருவியினுள் உரிய மின்னணு அதிர்வுகள் தோன்றி, கணினித்திரையின் சுட்டுக்குறிக்குக் கொடுத்து அனுப்பப் படுகின்றன. இந்த பந்தானாது, சுட்டிக்கருவியின் மேற்பகுதியில் அமைந்துள்ளது.

தோற்றம்[தொகு]

இரால்.’ப் பென்சமின் (Ralph Benjamin) என்ற பிரித்தானிய மின்னணுஆய்வாளர், பிரித்தானியக் கடற்படைக்காக, அறிவியல் பணிகளைச் செய்தபோது, இரண்டாம் உலகப்போரின் பிறபகுதியில், ரேடார் சதி அமைப்புச் (Rador Plotting System) செயலாக்கத்தின் போது, இக்கருவியைக் கண்டறிந்தார்.[1][2]

இக்கருவியைப் பயன்படுத்தும், பயனாளி இயக்கப்பிடியின் மூலம், உள்ளீடுகளை இடலாம். அந்த உள்ளீடுகள், ஆகாய விமானங்களின் குறியை, ஒரு பகுதியில் செலுத்த, ஒரு தொடர்முறை கணினியைப் பயன்படுத்தினார். அப்போது அவருக்கு ஒரு புதிய உள்ளிட்டு கருவி தேவைப்பட்டது. அச்சூழ்நிலையை ஆராய்ந்து, இந்த சுட்டிக்கருவியை, 1946ஆம் ஆண்டு கண்டறிந்தார். பின்னர், இதற்கு 1947 ஆம் ஆண்டு காப்புரிமை வாங்கினார்.

செயல்திறன்[தொகு]

லாசிடெக்கின் 'டிராக்மேன்' பளிங்கு பந்து

ஒரு பயனரின் கட்டைவிரல், மற்ற விரல்கள், விரல் நகங்கள், உள்ளங்கை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அசைவால், இந்த கருவி இயக்கப் படுகிறது. இதனால் சுட்டியால் ஏற்படும் உடல் பக்க விளைவுகள், ஒப்பிட்டு அளவில் குறைவாகவே ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. இந்த கருவியை, கணினித்திரைச் சுட்டியை நகர்த்துவது போல, நகர்த்த வேண்டியதில்லை. அதற்குமாறாக, ஒரு உட்குழிந்தப் பொருத்தியில், பாதிக்குமேல் பந்து அமிழ்ந்து கொண்டு, அச்சுழலும் பந்தே நகரும் இயல்பைப் பெற்று இருக்கிறது. அப்பந்தானாது நகரும் போது, அதே திசையில் கணித்திரையின் சுட்டிக்குறியும் நகரும் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால், சுட்டிக் கருவியை மறுநிலைக்கு எடுத்து வைத்தப் பிறகே, சுட்டும் இயல்பு உடையதாகத் திகழ்கிறது.

மூத்தகுடிமக்கள் எனப்படும் வயதானவர் சுட்டியை இருமறை சொடுக்குவதில் இடர்களைச் சந்திக்கின்றனர். அத்தகையவர்களுக்கு, இத்தடப்பந்து கருவி சிறந்த மாற்று உள்ளீட்டு கருவியாக அமைகிறது. தட்டச்சு அதிகம் செய்யாமல், இணையத்தில் உலாவி படிப்பவர்களுக்கு, இக்கருவியால், அதிக ஓய்வு அவர்தம் கைகளுக்குக் கிடைக்கிறது. வலப்பெருவிரலால் நகர்த்தவும், இடப்பெருவிரலால் சொடுக்கவும் செய்வதால் இந்த விரல்கள் ஓய்வு அதிகம் கிடைக்கிறது. [3]

வகைகள்[தொகு]

ஆப்பிள் (சிறியது)

பெரிய அளவு தடப்பந்து, கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும் (CAD) துறையில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. தொடுபட்டை (touch pad) கண்டறிவதற்கு முன், இந்த தடப்பந்து கருவி அதிக அளவில் மடிக்கணினியில் பயன்படுத்தப் பட்டது. சிறிய அளவிலான தடப்பந்துகளை, விசைப்பலகையுடன் இணைத்தே உருவாக்கப்படுகின்றன. மேலும், சுட்டியுடனும், விளையாட்டுக்கருவிகளுக்கான உள்ளீட்டு கருவிகளுடன் இணைத்தேயும் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் அதிகம் பயன்படுத்ததப் படுகிறது. உடலியல் அசைவுகளுக்கு ஏற்ப உடல் ஊனமுற்றவர்களுக்காகவும்,[4]பணிச்சூழலின் பணியடர்வு உடலியல் இடர்களைத் தவிர்க்கவும் (ergonomics), பயனரின் தொகுதிகளுக்கு ஏற்ற வகையில், இத்தடப்பந்து கருவிகள் உருவாக்கப்படுகின்றன.

அலைபேசிகளில் பயன்பாடு[தொகு]

வலப்புறமுள்ளது

சில பிளாக்பெர்ரி செல்லிடப்பேசி வகைகளில், மிகச்சிறிய அளவிலான தடப்பந்துகள் பொருத்தப்பட்டு, பயனர்கள் பயன் பெறுகின்றனர். முன்னர் வெளிவந்த எச்டீசி (HTC) கைபேசிகளில், இந்த தடப்பந்து உள்ளடங்கி வந்தது.

ஊடகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடப்பந்து&oldid=3584956" இருந்து மீள்விக்கப்பட்டது