உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கம்(I) சயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம்(I) சயனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்கம் மோனோசயனைடு
இனங்காட்டிகள்
506-65-0 Y[PubChem]
ChemSpider 61479
EC number 208-049-1
InChI
  • InChI=1S/CN.Au/c1-2;/q-1;+1
    Key: IZLAVFWQHMDDGK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68172
  • [Au+].[C-]#N
பண்புகள்
CAuN
வாய்ப்பாட்டு எடை 222.98 g·mol−1
தோற்றம் அடர் மஞ்சள் தூள்[1]
அடர்த்தி 7.12 கி·செ.மீ−3[2]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
புறவெளித் தொகுதி P6mm (எண். 183)
Lattice constant a = 340 பைக்கோமீட்டர், c = 509 பைக்கோமீட்டர்[2]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H310, H330, H400, H410
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் தாமிர(I) சயனைடு
வெள்ளி சயனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தங்கம்(I) சயனைடு (Gold(I) cyanide) என்பது AuCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கம்(I) அயனியின் இருமச் சயனைடு என இது வகைப்படுத்தப்படுகிறது. நெடியற்றதாகவும் சுவையற்றதாகவும் மஞ்சள் நிறத்துடன்[4] ஒரு திண்மமாக தங்கம்(I) சயனைடு காணப்படுகிறது. ஈரமான தங்கம்(I) சயனைடு நிலைப்புத்தன்மை அற்றதாகும்.

தயாரிப்பு

[தொகு]

பொட்டாசியம் இருசயனோ ஆரேட்டுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தங்கம்(I) சயனைடு வீழ்படிவாகக் கிடைக்கிறது.

தங்கம்(III) குளோரைடுடன் பொட்டாசியம் சயனைடு சேர்த்து வினைபுரியச் செய்தாலும் தங்கம்(I) சயனைடு உருவாகிறது.[2]

வினைகள்

[தொகு]

தங்கம்(I) சயனைடு திண்மமானது நீரில் கரையக்கூடிய சேர்மங்களை பல்வேறு சயனைடுகள், ஐதராக்சைடுகள், அமோனியா, தயோசல்பேட்டுகள் மற்றும் ஐதரோசல்பேட்டுகள் போன்ற ஈந்தணைவிகளுடன் உருவாக்குகிறது.[2]

பெரும்பாலான தங்கம் சேர்மங்களைப் போலவே, இதுவும் வெப்பமடையும் போது உலோகத் தங்கமாக மாறுகிறது.

கட்டமைப்பு

[தொகு]

தங்கம்(I) சயனைடானது AuCN இன் நேரியல் சங்கிலிகளைக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்பு பலபடியாகும். அதாவது ஒவ்வொரு Au(I) மையமும் கார்பன் மற்றும் நைட்ரசனுடன் பிணைக்கப்பட்டுள்ளன. a = 3.40 Å மற்றும் c = 5.09 Å அடையாள அளவுருக்களுடன் அறுகோண வடிவத்தை ஏற்றுள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sigma-Aldrich Co., product no. 254088.
  2. 2.0 2.1 2.2 2.3 O. Glemser; O. Glemser, H. Sauer (1963). "Gold(I) Cyanide". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2pages=1064. NY, NY: Academic Press.
  3. "C&L Inventory". echa.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.
  4. Meyers Konversations-Lexikon, 1888: Goldcyanid
  5. Bowmaker, Graham A.; Kennedy, Brendan J.; Reid, Jason C. (1998). "Crystal Structures of AuCN and AgCN and Vibrational Spectroscopic Studies of AuCN, AgCN, and CuCN". Inorganic Chemistry 37 (16): 3968–3974. doi:10.1021/ic9714697. பப்மெட்:11670511. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(I)_சயனைடு&oldid=3392556" இலிருந்து மீள்விக்கப்பட்டது