டெர்ரி பிராச்செத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெர்ரி பிராச்செத்
Terry Pratchett

2012இல் நியூயார்க்கில் பிராச்செத்
2012இல் நியூயார்க்கில் பிராச்செத்
பிறப்புடெரன்சு தாவீது ழான் பிராச்செத்
ஏப்ரல் 28, 1948(1948-04-28)
பேக்கன்சுபீல்டு, பக்கிங்காம்சையர், இங்கிலாந்து
இறப்பு12 மார்ச்சு 2015(2015-03-12) (அகவை 66)
பிராடு சால்கெ Broad, வில்ட்சையர், இங்கிலாந்து
தொழில்நாவலாசிரியர்
வகைநகைச்சுவை கனவுருப் புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்டிஸ்க்வேர்ல்டு
குட் ஓமன்சு
நேசன் (நாடு)
குறிப்பிடத்தக்க விருதுகள்
  • நைட் பேச்சுலர் (2009)
  • ஓபிஈ (1998)[1]
துணைவர்லின் பர்வேசு
(1968–2015; அவரது இறப்பு)[1]
பிள்ளைகள்ரியானா பிராசெத் [1]
இணையதளம்
terrypratchett.co.uk

சர் டெரன்சு தாவீது ழான் பிராச்செத் (28 ஏப்ரல் 1948 – 12 மார்ச் 2015), பரவலாக டெர்ரி பிராச்செத், ஆங்கில கனவுருப் புனைவு எழுத்தாளராவார். குறிப்பாக இவரது நகைச்சுவை படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.[2] இவருடைய சிறந்த படைப்பாக 41 புதினங்களை உள்ளடக்கிய டிஸ்க்வேர்ல்டு தொடர் விளங்குகின்றது. பிராச்செத்தின் கன்னிப் படைப்பான தி கார்ப்பெட் பீபிள் 1971இல் வெளியானது. டிஸ்க்வேர்ல்டு தொடரின் முதல் புதினமாக தி கலர் ஆஃப் மாஜிக் 1983இல் பதிப்பிக்கப்பட்டது. இதன்பிறகு ஆண்டுக்கு இரண்டு புதினங்களை வெளியிட்டு வந்தார். 2011இல் வெளியான இசுனஃப் என்ற டிஸ்க்வேர்ல்டு புதினம் வெளியான முதல் மூன்றுநாட்களுக்குள்ளேயே 55,000 பிரதிகள் விற்று பிரித்தானியாவில் சாதனை படைத்தது.[3] இத்தொடரின் இறுதி புதினமான தி செப்பர்டுசு கிரௌன் 2015ஆம் ஆண்டு ஆகத்து மாதம், அவரது மரணத்திற்கு மூன்று மாதங்கள் கழித்து, வெளியானது.

இவரது நூல்கள் 37 மொழிகளில் 85 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன;[4][5] 1990களில் பிராச்செத் ஐக்கிய இராச்சியத்தின் மிகக் கூடுதலான விற்பனையுடைய எழுத்தாளராக விளங்கினார்.[6][7] 1998இல் இவருக்கு ஐக்கிய இராச்சியத்தின் உயரிய குடிமை விருதான ஓபிஈ வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு புத்தாண்டு விருதுவழங்குவிழாவில் இலக்கியத்திற்கு இவராற்றிய பணிக்காக சர் பட்டம் வழங்கப்பட்டது.[8][9] இவரது டிஸ்க்வேர்ல்டு தொடரின் முதல் சிறுவருக்கானப் புதினமாகிய தி அமேசிங் மாரீசு அன்டு இஸ் எடுகேட்டட் ரோடன்ட்சுக்கு 2001இல் வருடாந்திர கார்னகி பதக்கம் வழங்கப்பட்டது.[10][11] 2010இல் உலகக் கனவுருப் புனைவு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.[12]

திசம்பர் 2007ஆம் ஆண்டில் தமக்கு முன்னதாகவே ஆல்சைமர் நோய் கண்டுள்ளதாக அறிவித்தார்.[13] இதனைத் தொடர்ந்து ஆல்சைமர் நோய் ஆய்வு அறக்கட்டளைக்கு பெரியளவில் பொதுநன்கொடை அளித்தார்.[14] இந்த அறக்கட்டளை இவரது அனுபவங்களைத் தொகுத்து பிபிசிக்காக இந்நோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டது; பிராச்செத்தை இக்கட்டளையின் புரவலராகவும் நியமித்தது.[15] பிராச்செத் 2015ஆம் ஆண்டு மார்ச்சு 12 அன்று தமது 65ஆம் அகவையில் இந்நோய்க்கு இரையானார்.[16]

இளமைக்காலம்[தொகு]

பிராச்செத் 1948ஆம் ஆண்டு பக்கிங்காம்சையரிலுள்ள பேக்கன்பீல்டு என்னும் ஊரில் பிறந்தார்.[1][17] ஐ வைகோம்பெ தொழினுட்பப் பள்ளியில் படிக்கும்போதே தமது 11ஆம் அகவையில் தி ஹேட்சு பிசினஸ் என்ற முதல் கதையை எழுதினார். இரண்டாண்டுகள் கழித்து இது பொதுவிற்பனைக்கு பதிப்பிக்கப்பட்டது.[18] தமது எழுதும் திறனை உணர்ந்த பிராச்செத் தமது கல்வியை ஊடகவியல் தொடர்பான படிப்புகளில் மேற்கொண்டார். 1965இல் பக்சு ஃப்ரீ பிரசு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஊடகவியலாளர்களுக்கான தேசிய பயிற்சி மன்றத்தின் படிப்புகளில் தேர்ச்சி பெற்றார்.[19] இதேயாண்டு தமது இரண்டாவது சிறுகதையான தி நைட் டிவெல்லரை எழுதினார்.

தி டிஸ்க்வேர்ல்டு தொடர்[தொகு]

வண்ணமய கனவுரு டிஸ்க்வேர்ல்டு அண்டத்தில் நடப்பதாக நகைச்சுவையுடனும் பெரும்பாலும் அங்கதத்துடனும் எழுதப்பட்ட இந்தத் தொடரை 1983ஆம் ஆண்டில் துவக்கினார். இத்தொடருக்குப் பல துணைத்தொடர்களையும் எழுதியுள்ளார். விவரமாக விவரிக்கப்பட்டுள்ள அந்த அண்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பதாக ஒவ்வொரு கதையும் அமையும்.

டிஸ்க்வேர்ல்டு அல்லது வட்டுலகம் என்பது நான்கு யானைகள் மீது அமர்ந்த வட்டாக விவரிக்கப்படுகிறது; இந்த யானைகளை மிகப்பெரிய ஆமைகள் தாங்குவதாகவும் விண்வெளியில் இவை நீஞ்சுவதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் காலவரிசைப்படி அமைந்துள்ளன;[20] வட்டுலக மாந்தரின் பண்பாடு முன்னேறி வருவதை அடுத்தடுத்த கதைகளில் காணலாம். காட்டாக பின்னாள் தொடரில் காகிதப் பணத்தாள் அச்சிடுவதை விவரித்துள்ளார்.[21]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 PRATCHETT, Sir Terence (David John). Who's Who. 2015 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. http://www.ukwhoswho.com/view/article/oupww/whoswho/U31327.  (subscription required)
  2. "Terry Pratchett Interview". 19 திசம்பர் 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 திசம்பர் 2008 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Pratchett's Snuff snaffles top spot with ease". The Bookseller. 3 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Sir Terry Pratchett". Amazon. 20 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Terry Pratchett (biography)". Colinsmythe.co.uk. 11 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
  6. Weale, Sally (8 November 2002). "Life on planet Pratchett". London: Guardian Unlimited. https://www.theguardian.com/books/2002/nov/08/sciencefictionfantasyandhorror.terrypratchett. பார்த்த நாள்: 6 June 2007. 
  7. "Terry Pratchett in conversation". BBC Wiltshire. n.d. 6 June 2007 அன்று பார்க்கப்பட்டது.
  8. "No. 58929". இலண்டன் கசெட் (Supplement). 31 December 2008.
  9. Smyth, Chris (31 December 2008). "Terry Pratchett 'flabbergasted' over knighthood". Times Online (London: Times Newspapers). http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/books/article5420707.ece. பார்த்த நாள்: 7 August 2009. 
  10. (Carnegie Winner 2001) பரணிடப்பட்டது 29 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம். Living Archive: Celebrating the Carnegie and Greenaway Winners. CILIP. Retrieved 18 August 2012.
  11. "Press releases for the 2001 Awards, presented in 2002 " பரணிடப்பட்டது 4 மே 2012 at the வந்தவழி இயந்திரம். Press Desk. CILIP. Retrieved 18 August 2012.
  12. "World Fantasy Awards 2010". Science Fiction Awards Database. Locus Science Fiction Foundation. 26 June 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Terry Pratchett: Living with Alzheimer's". BBC. 4 February 2009. 27 October 2009 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Pratchett funds Alzheimer's study". BBC News. 13 March 2008. http://news.bbc.co.uk/2/hi/health/7291315.stm. பார்த்த நாள்: 13 March 2008. 
  15. "Terry Pratchett: 'I am the only person suffering from Pratchett's posterior cortical atrophy'". Alzheimer's Research UK. Alzheimer's Research UK. 25 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Sir Terry Pratchett, renowned fantasy author, dies aged 66" (in en-GB). BBC News. 12 March 2015. http://www.bbc.com/news/entertainment-arts-31858156. 
  17. "Terry Pratchett Biography". Lspace.org. 19 April 2009 அன்று பார்க்கப்பட்டது.
  18. "Terry Pratchett". Kevin P. Smith, Sheffield Hallam University, The Literary Encyclopedia. 20 September 2002. 6 June 2007 அன்று பார்க்கப்பட்டது.
  19. "Terry Pratchett and his Works". Colinsmythe.co.uk. 5 மே 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  20. "Words from the Master". Terry Pratchett, The L-Space Web. n.d. 16 December 2007 அன்று பார்க்கப்பட்டது.
  21. "Terry Pratchett". Gavin J. Grant, IndieBound.com. n.d. 18 December 2008 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்ரி_பிராச்செத்&oldid=3587114" இருந்து மீள்விக்கப்பட்டது