டி. என் சீமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் டி. என். சீமா (ഡോ . ടി .എൻ സീമ)
T.N. Seema.jpg
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை கேரளா
பதவியில்
3 ஏப்ரல் 2010 – 2 ஏப்ரல் 2016
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 1, 1963(1963-06-01)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) சிறீ ஜி. ஜெயராஜ்
இருப்பிடம் டிசி 42/366(1), ஸ்ரீவராகம், வல்லகடவு அஞ்சல், திருவனந்தபுரம், கேரளா
படித்த கல்வி நிறுவனங்கள் கேரளப் பல்கலைக்கழகம்
தொழில் சமூக சேவகர், அரசியல்வாதி, ஆசிரியர், கல்வியாளர்
இணையம் tnseema.in

முனைவர் டி. என் சீமா (T. N. Seema)(ஆங்கிலம்: Dr T. N. Seema; மலையாளம்: ഡോ . ടി .എൻ സീമ)(பிறப்பு 1 ஜூன் 1963) என்பவர் கேரள மாநிலத்தினைச் சார்ந்த இந்தியச் சமூக சேவகர், ஆசிரியர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 2010 முதல் 2016 வரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சார்பில் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சீமா இந்திய மாநிலமான கேரளாவில் திருச்சூரில் ஜூன் 1, 1963ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பி. நாராயணன் நாயர், தாயார் மனாசி நாயர் ஆவார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள, கேரளப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினை மலையாளம் பாடத்தில் பெற்றார். கேரளப் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தமிழில் பட்டயப்படிபினை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திலும், நெதர்லாந்தின் டெ ஹாக்கில் பரவலாக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு கல்வியினையும் கற்றார். அங்கன்வாடி மையங்கள், பரவலாக்கப்பட்ட திட்டமிடல், பாலின கையேடு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம், மற்றும் சுய உதவிக் குழுக்கள் குறித்துப் பல ஆய்வுகளைச் செய்துள்ளார். இவர் 1991 முதல் 2008 வரை கேரள அரசின் அரசுக் கல்லூரிகளில் மலையாள மொழி மற்றும் இலக்கிய பேராசிரியராக பணியாற்றினார். இவர் 1986 திசம்பர் 23 அன்று சி-டிட்டின் இயக்குநரான ஜி. செயராஜை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.[1]

சீமா அனைத்திந்திய மகளிர் விடுதலை இயக்கத்தின் கேரள மாநிலத் தலைவர் மற்றும் தேசிய துணைத் தலைவராகவும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கேரள மாநிலக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

பணி[தொகு]

சீமா ஏப்ரல் 2010இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினராக கேரள மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலவை உறுப்பினராகக், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக குழுக்களின் உறுப்பினர், விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர், பெண்கள் அதிகாரமளித்தல் குழு உறுப்பினர், தென்னக இரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

இவர் ”திரிசாப்த்தம்” இதழின் தொகுப்பாசிரியராகவும், ”குடும்பஸ்திரி” அமைப்பின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும், கேரள வறுமை ஒழிப்புத் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.[1]

சீமா ஹரிதா கேரகன் ஆணைய தலைவராக பணியாற்றுகிறார். 2020இல், நடைபெற்ற திருவனந்தபுர மாநகர தேர்தலில் மாநகர தலைவர் பதவிக்கு வேட்பாளராக இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக நிறுத்தப்பட்டார்.[3]

கேரள மாநிலத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை திறம்பட செயல்படுத்த ஒருங்கிணைந்த தகவல் அமைப்பை அமைக்க கேரள அரசு அண்மையில் முடிவு செய்தது. மாநில அரசின் இந்த நவ கேரளம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக சீமா நியமிக்கப்பட்டுள்ளார்.[4]

புத்தகங்கள் வெளியீடு[தொகு]

சீமா பல புத்தகங்களை எழுதி வெளியிட்டு உள்ளார். அவற்றில் 1997ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் உள்ளூர் திட்டமிடல் புத்தகமும் 2000ஆம் ஆண்டில் உலகமயமாக்கல் மற்றும் பெண்கள் மலையாளத்தில் வெளியிட்டார். தொகுப்பாசிரியராக வளர்ச்சியில் சமத்துவம் (2000), பாலின நிலை ஆய்வு (2000), அக்கம் கூட்டு (1999) மற்றும் மக்கள் திட்ட பிரச்சாரம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் (2000) வெளியிட்டுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "WebPage of Dr. T.N. Seema Member Of Parliament (RAJYA SABHA)". 22 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Catalyst of change". https://www.thehindu.com/features/metroplus/Catalyst-of-change/article16183645.ece. 
  3. "T N Seema to become CPM's mayor candidate in Thiruvananthapuram, BJP plans counter moves" (in en). Keralakaumudi Daily. https://keralakaumudi.com/en/news/news.php?id=419994&u=t-n-seema-to-become-cpms-mayor-candidate-in-thiruvananthapuram-bjp-plans-counter-moves. 
  4. "Kerala to launch unified information system for effective implementation of welfare schemes". The Hindu (ஆங்கிலம்). 2021-09-01. 2021-09-13 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Dr. T.N. Seema of Kerala contact address & email". nocorruption.in (ஆங்கிலம்). 2021-09-13 அன்று பார்க்கப்பட்டது.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்_சீமா&oldid=3278984" இருந்து மீள்விக்கப்பட்டது