இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (En: Central Institutue of Indian Languages) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உயர்கல்வித் துறையின் கீழ் கர்நாடக மாநிலம், மைசூரில் செயல்படும் நிறுவனம் ஆகும்.[1] இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், 1981 முதல் இந்திய அரசு மொழிகள் மற்றும் சிறுபாண்மை மொழிகளின் மேம்பாட்டிற்காகவும் பயிற்றுவிக்கவும் செயல்படுகிறது.[2].

மண்டலங்கள்[தொகு]

இந்திய மொழிகளின் வளர்ச்சி மற்றும் ஆய்வுப்பணிக்காக இந்நிறுவனம் இந்தியாவில் ஐந்து மண்டலங்களில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மண்டலங்களும் பயிற்றுவிக்கும் மொழிகளும்:

  1. தென் மண்டல மொழிகளின் மையம், மைசூர், கர்நாடக மாநிலம் : தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள்.
  2. கிழக்கு மண்டல மொழிகளின் மையம், புவனேசுவரம், ஒரிசா மாநிலம்: வங்காள மொழி, மைதிலி மொழி, ஒடியா மொழி மற்றும் சந்தாலி மொழிகள்.
  3. வட மண்டல மொழிகளின் மையம், பாட்டியாலா, பஞ்சாப் மாநிலம்: டோக்ரி, காஷ்மீரி மொழி, பஞ்சாபி மொழிமற்றும் உருது மொழிகள்.
  4. மேற்கு மண்டல மொழிகளின் மையம், புனே, மகாராஷ்டிர மாநிலம்: குஜராத்தி, இராஜஸ்தானி, கொங்கணி மொழி, மராத்தி மற்றும் சிந்தி மொழிகள்.
  5. வடகிழக்கு மண்டல மொழிகளின் மையம், குவஹாத்தி, அசாம் மாநிலம்: அசாமிய மொழி, போடா, மணிப்புரி மற்றும் நேபாளி மொழிகள்.
மையங்கள் மொழிகள்
தென் மண்டலம், மானசங்கோத்ரி, மைசூர் - 570 006 கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு
கிழக்கு மண்டலம், லக்ஷ்மிசாகர், புவனேஷ்வர், - 751 006. பெங்காலி, மைதிலி, ஒரியா, சந்தாளி
வடக்கு மண்டலம், பஞ்சபி பல்கலைக்கழக வளாகம், பட்டியாலா - 147 002 டோக்ரி, காஷ்மீரி, பஞ்சாபி, உருது
மேற்கு மண்டலம், டேக்கான் கல்லூரி வளாகம், புனே - 411 006 குஜராத்தி, கொங்கணி, மராத்தி, சிந்தி
உருது கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம், சப்ரூன், சோலன் - 751 006 உருது
உருது கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம், ஜிசி/42-ஷி, விபூதி கண்ட், கோம்தி நகர், லக்னோ - 226 010 உருது
வடகிழக்கு மண்டலம், 3931, பெல்தோலா, கல்லூரிச் சாலை, பெல்தோலா, கோகாத்தி - 781 028 அஸாமி, போடோ, மணிப்புரி, நேபாளி

மையங்கள்[தொகு]

இந்திய அரசு மொழிகள் மற்றும் சிறுபாண்மை மொழிகளின் வளர்ச்சிக்காக, இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம் ஏழு மையங்கள்களை நிறுவியுள்ளது:[3]

  1. இந்திய பாரம்பரிய மொழிகளுக்கான மையம்
  2. மலைவாழ் இன மொழிகள், சிறு மொழிகள், அழிவுறும் நிலையில் உள்ள மொழிகள் மற்றும் மொழிகளுக்கான கொள்கை வகுத்தல் தொடர்பான மையம்.
  3. இந்திய மொழிகள் தொடர்பான அகராதியியல், நாட்டுப்புறவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு தொடர்பான படிப்புகள் மையம்.
  4. இந்திய மொழிகளின் படிப்பறிவு தொடர்பான படிப்புகள் மையம்.
  5. இந்திய மொழிகளின் வளர்ச்சி தொடர்பான ஆய்வுக்கூடம் மற்றும் மதிப்பாய்வு மையம்.
  6. இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்தல், நூல்கள் வெளியீடு மற்றும் விற்பனை மையம்.
  7. அனைத்து இந்திய மொழிகளுக்கான செய்தித் தொடர்பு மையம்.

செம்மொழிகள் ஆய்வு மையம்[தொகு]

இந்நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட செம்மொழிகளை ஆய்வு செய்வதற்கு ஒரு ஆய்வு மையம் நடத்துகிறது.

இந்நிறுவனம் வழங்கும் விருதுகள்[தொகு]

சிறுபான்மை இன மக்களின் மொழி வளர்ச்சிக்காக, சிறுபான்மை இனத்தவர் எழுதிய சிறப்பான நூல்களுக்கு பாஷா பாரதி சம்மன் எனும் பெயரில் பணத்துடன் கூடிய விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்கிறது.[4]

இணையவழிக் கல்வி[தொகு]

தமிழ் மொழி, வங்காள மொழி, மற்றும் கன்னட மொழியில் இணையவழிக் கல்வி படிப்புகள் நடத்துகிறது

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Home page". Central Institute of Indian Languages. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.
  2. "Central Institute of Indian Languages: A legend". Central Institute of Indian Languages. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013. All through the last 32 years in existence, ...
  3. "Centres". Central Institute of Indian Languages. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.
  4. http://www.ciil.org/aboutawards.aspx

வெளி இணைப்புகள்[தொகு]