டார்லாக்
டார்லாக் | |
---|---|
மாகாணம் | |
மாகாணத் தலைமையகம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | மத்திய லூசோன் |
நேர வலயம் | பிசீநே (ஒசநே+8) |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
டார்லாக் (Tarlac) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் டார்லாக் நகரம் ஆகும். இது 1872 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 511 கிராமங்களும், 17 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் சுசன் யப்-சுலிட் (Susan Yap-Sulit) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,053.6 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக டார்லாக் மாகாணத்தின் சனத்தொகை 1,366,027 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 45ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 18ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம், கப்பம்பங்கன் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 450 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 13ஆம் மாகாணம் ஆகும்.
காலநிலை[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Tarlac | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 32.1 (89.8) |
32.8 (91) |
34.4 (93.9) |
36.2 (97.2) |
35.3 (95.5) |
34.0 (93.2) |
32.8 (91) |
32.1 (89.8) |
32.4 (90.3) |
32.8 (91) |
32.7 (90.9) |
32.0 (89.6) |
33.3 (91.94) |
தாழ் சராசரி °C (°F) | 21.1 (70) |
21.6 (70.9) |
22.7 (72.9) |
23.8 (74.8) |
24.6 (76.3) |
24.5 (76.1) |
24.2 (75.6) |
24.4 (75.9) |
24.1 (75.4) |
23.7 (74.7) |
22.9 (73.2) |
21.9 (71.4) |
23.29 (73.93) |
சராசரி மழை நாட்கள் | 1 | 2 | 2 | 3 | 13 | 16 | 22 | 21 | 20 | 10 | 8 | 4 | 122 |
ஆதாரம்: Storm247 [4] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. 11 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 December 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
- ↑ "Population of the provine".
- ↑ "Weather forecast for Tarlac, Philippines". Storm247.com. StormGeo AS, Nordre Nøstekaien 1, N-5011 Bergen, Norway: StormGeo AS. 22 April 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]