டாக்டர் ஜி. இராமச்சந்திரன் நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாக்டர் ஜி. இராமச்சந்திரன் நூலகம் என்னும் நூலகம் மதுரை-திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் சின்னாளப்பட்டிக்கு அடுத்த நிறுத்தமான காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தின் நூலகம் ஆகும்.

இந்நூலகம் 1956இல் துவக்கப்பட்டு, தற்போதைய கட்டடத்திற்கு 1984இல் இடம்பெயர்ந்தது. இங்கே ஒருலட்சத்து அறுபதாயிரம் நூல்கள் உள்ளன. அனைத்து துறைசார்ந்த புத்தகங்களும் உள்ளன. குறிப்பாக காந்தியடிகள் நடத்திய யங் இந்தியா, ஹரிஜன் இதழ்களின் தொகுப்புகள் முக்கியத்துவம்வாய்ந்தவை. காந்தியடிகள் எழுதிய எல்லாவற்றையும் தொகுத்து வெளியான 100 தொகுதி நூல்களும் இங்கே உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]