டாக்கார் சண்டை
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
டாக்கார் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் ஆத்திரேலியா சுதந்திர பிரான்ஸ் | விஷி பிரான்சு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜான் கன்னிங்காம் சார்லஸ் டி கோல் | பியர் பிரான்சுவா பாய்சான் | ||||||
பலம் | |||||||
2 போர்க்கப்பல்கள், 1 வானூர்தி தாங்கி, 5 குரூசர்கள், 10 டெஸ்டிராயர்கள் | 1 போர்க்கப்பல், 2 குரூசர்கள், 4 டெஸ்டிராயர்கள், 3 நீர்மூழ்கிகள் | ||||||
இழப்புகள் | |||||||
2 போர்க்கப்பல்கள் சேதம் 2 குரூசர்கள் சேதம் 6 நீர்மூழ்கிக் குண்டு வானூர்திகள் | 1 டெஸ்டிராயர் மூழ்கடிப்பு sunk, 2 நீர்மூழ்கிகள் மூழ்கடிப்பு 1 போர்க்கப்பல் சேதம் |
டாக்கார் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரில் செனெகல் நாட்டின் துறைமுகமான டாக்கார் நகரைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட ஒரு சண்டை. பெப்ரவரி 1940 இல் நடைபெற்ற இது மெனஸ் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.
ஜூன் 1940 இல் பிரான்சு சண்டையில் தோல்வியடைந்த பிரான்சு நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரெஞ்சு அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாசி ஜெர்மனியுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவுடன் விஷி அரசை உருவாக்கினர். இதனை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் சார்லஸ் டி கோல் தலைமையில் நாடுகடந்த விடுதலை பிரான்சு அரசை உருவாக்கினர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த பிரெஞ்சு காலனிகள் அனைத்தும் இவ்விரு தரப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தன. அவ்வாறு பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா (தற்போதைய செனெகல்) விஷி ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர விடுதலை பிரெஞ்சுப் படைகளும் நேச நாடுகளும் விரும்பின. இதற்காக ஒரு குறிக்கோள் படைப்பிரிவு பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. செப்டம்பர் 23, 1940 அன்று செனெகலின் தலைநகர் டாக்கார் நகரை அடைந்த இக்குறிக்கோள் படைப்பிரிவின் போர்க்கப்பல்கள் அந்நகரைத் தாக்கத் தொடங்கின. அடுத்த இரு நாட்கள் டாக்கார் நகரின் விஷி பாதுகாவல் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்குமிடையே சண்டை நிகழ்ந்தது. டாக்கார் நகரைக் கைப்பற்றும் முயற்சியை விஷி படைகள் முறியடித்து விட்டன. சேதமடைந்த கப்பல்களுடன் நேச நாட்டுக் குறிக்கோள் படை திரும்பி விட்டது.