டக்லஸ் எங்கல்பர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டக்லசு எங்கல்பர்ட்
Douglas Engelbart
Douglas Engelbart in 2008.jpg
2008 இல் எங்கல்பர்ட்
பிறப்புDouglas Carl Engelbart
சனவரி 30, 1925(1925-01-30)
போர்ட்லாந்து, ஒரிகன்
இறப்புசூலை 2, 2013(2013-07-02) (அகவை 88)
அத்தர்ட்டன், கலிபோர்னியா
வாழிடம்அத்தர்ட்டன், கலிபோர்னியா
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைமனித-கணினி இடைவினை[1]
கண்டுபிடிப்பாளர்
கல்வி கற்ற இடங்கள்ஒரிகன் மாநிலப் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (முனைவர்)
ஆய்வு நெறியாளர்பவுல் எல். மோர்ட்டன்[2]
John R. Woodyard[3]
அறியப்படுவதுசுட்டி
மீயுரை
சேர்ந்தியங்கல் மென்பொருள்
Interactive computing
விருதுகள்அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்
இணையதளம்
dougengelbart.org

டக்லஸ் கார்ல் எங்கல்பர்ட் (Douglas Carl Engelbart, சனவரி 30, 1925 – சூலை 2, 2013) என்பவர் அமெரிக்கப் பொறியாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். கணினி, இணையத்தின் முன்னோடிகளுள் ஒருவர். சொடுக்கி எனப்படும் சொடுக்கியைக் கண்டுபிடித்தவரும் இவரே. தொழினுட்பம், பொறியியல் ஆகிய துறைகளில் உயரிய விருதுகள் பலவற்றைப் பெற்றிருக்கிறார்.[4]

இளமையும் கல்வியும்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள போர்ட்லாந்தில் ஜனவரி 30, 1925 அன்று கார்ல் லூயிஸ் எங்கல்பர்ட் மற்றும் கிளாடிஸ் கார்லட் அமெலியா முன்சன் எங்கல்பர்ட்டுக்குப் பிறந்தார். இவரது முன்னோர்கள் செருமனி, சுவீடன், நோர்வே நாட்டைச் சேர்ந்தவர்கள்.[5]

அக்கா டோரியன், தம்பி டேவிட் ஆகியோர் இவருடன் பிறந்தோர் ஆவர். தொடக்கக் காலத்தில் போர்ட்லாந்தில் இருந்த இவருடைய குடும்பம், இவருடைய தந்தை மறைந்த பின், இவருடைய பத்தாவது அகவையில் ஜான்சன் லிரீக் என்ற கிராமப் பகுதிக்கு குடியேறியது. போர்ட்லாந்தில் உள்ள ஃப்ராங்க்ளின் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 1942ல் பள்ளிக்கல்வியில் தேர்ச்சி பெற்றார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. எஆசு:10.1145/208344.208352
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. "Ph.D. Dissertations - 1955". Electrical Engineering and Computer Science, College of Engineering, University of California Berkeley. 1 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. Thierry Bardini. "Douglas Engelbart". Turning Award Winners: 1997. Association for Computing Machinery (ACM). July 4, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. Hermida, Alfred (2001-11-05). "Mouse inventor strives for more". பிபிசி. http://news.bbc.co.uk/hi/english/sci/tech/newsid_1633000/1633972.stm. பார்த்த நாள்: 2012-06-17. 
  5. Lowood, Henry (1986-12-19). "Douglas Engelbart Interview 1". Stanford and the Silicon Valley: Oral History Interviews. Stanford University. 2012-06-17 அன்று பார்க்கப்பட்டது. External link in |work= (உதவி)
  6. Dalakov, Georgi. "Biography of Douglas Engelbart". History of Computers. 2012-07-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்லஸ்_எங்கல்பர்ட்&oldid=3479964" இருந்து மீள்விக்கப்பட்டது