அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி அண்டு இன்னொவேசன்
National Medal of Technology and Innovation
National Medal of Technology and Innovation.jpg
விருதுக்கான
காரணம்
Outstanding contributions to the Nation’s economic, environmental and social well-being through the development and commercialization of technological products, processes and concepts; technological innovation; and development of the Nation’s technological manpower.[1]
வழங்கியவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
நாடு  ஐக்கிய அமெரிக்கா
அமைவிடம் வாசிங்க்டன், டி.சி.
முதலாவது விருது 1985
அதிகாரபூர்வ தளம்

அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் அமெரிக்க நாட்டரசு அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை தரும் அந்நாட்டின் தலையாய ”தொழிநுட்பப் புதுமையாக்கப் பரிசு”. இது முன்னர் நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி (National Medal of Technology) என்னும் பெயரில் முன்னர் வழங்கப்பெற்றது, இப்பொழுது நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி அண்டு இன்னொவேசன் ( National Medal of Technology and Innovation) என்னும் பெயரில் வழங்கப்பெறுகின்றது. இப்பரிசை தனி ஒருவருக்கோ, குழுவாக சிலருக்கோ, ஒரு நிறுவனத்துக்கோ தருகிறார்கள். தொழில்நுட்பம் தொடர்பான துறையில், இதுவே அமெரிக்கக் குடி ஒருவருக்கு வழங்கும் அந்நாட்டின் தலையாய பரிசு.

வரலாறு[தொகு]

த நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி பரிசை 1980 இல் அமெரிக்கக் காங்கிரசு என்னும் பேராயம், இசுட்டீவன்சன்-வைண்டுலர் தொழில்நுட்பச் சட்டம் என்பதன் அடிப்படையில் நிறுவியது. தொழில்நுட்பத் துறையில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதுவும் உலகளாவிய களத்தில் அமெரிக்காவின் முற்படு முயற்சி முன்னிற்க அந்நாட்டு இருகட்சிகளின் கூட்டு முயற்சியாக இப்பரிசு உருவாக்கப்பட்டது. முதல் பரிசை 1985 இல் ரோனால்டு ரேகன் 12 பேருக்கும் ஒரு நிறுவனத்துக்கும் அளித்தார்[2] முதலில் இப்பரிசைப் பெற்றவர்களின் வரிசையில் தொழில்நுட்பத்தில் பெரும் புள்ளிகளாக அறியப்பெற்ற, ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் தோற்றுவித்த, இசுட்டீவ் சாப்ஃசு, இசுட்டீவ் வோசினிக் (Stephen Wozniak) ஆகியோரும், பெல் ஆய்வகமும் அடங்கும்

பரிசு பெற்றோர்[தொகு]

As of 2005, மொத்தம் 135 பேர்களும் 12 நிறுவனங்களும் இப்பரிசைப் பெற்ற பெருமை அடைத்துள்ளனர்.

பரிசு பெற்றோர்களில் சிலர்:

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகளும் உசாத்துணையும்[தொகு]

  1. The National Medal of Technology and Innovation. United States Patent and Trademark Office.
  2. The National Medal of Technology and Innovation Recipients: 1985 Laureates. United States Patent and Trademark Office.

வெளி இணைப்புகள்[தொகு]