ஜேம்ஸ் ஜோய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜேம்ஸ் ஜாய்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் ஜோய்ஸ்

James Joyce, ca. 1918
பிறப்பு ஜேம்ஸ் அகஸ்டீன் அலோசியஸ் ஜோய்ஸ்
பெப்ரவரி 2, 1882(1882-02-02)
ரத்கர், டப்ளின், அயர்லாந்து
இறப்பு 13 சனவரி 1941(1941-01-13) (அகவை 58)
சூரிச், சுவிட்சர்லாந்து
தொழில் புதின எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர்
இயக்கம் நவீனத்துவம், imagism
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
டப்ளினர்ஸ் (1914), A Portrait of the Artist as a Young Man (1916), உலிசெஸ் (1922), பினகன்ஸ் வேக் (1939)
துணைவர்(கள்) நோரா பர்னக்கிள்
(1931-1941)
கையொப்பம் James Joyce signature.svg

ஜேம்ஸ் அகஸ்டீன் அலோசியஸ் ஜோய்ஸ் (James Joyce) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜேம்ஸ் ஜோய்ஸ் அல்லது ஜேம்ஸ் ஜாய்ஸ் (2 பெப்ரவரி 1882 – 13 ஜனவரி 1941), ஒரு புலம்பெயர்ந்த ஐரிய எழுத்தாளர் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டில் மிகச் செல்வாக்குள்ள எழுத்தாளர்களில் ஒருவரெனக் கருதப்படுகிறார். இவர் எழுதிய உலிசெஸ் (1922), அதைத் தொடர்ந்து வந்ததும் சர்ச்சைக்கு உள்ளானதுமான பினகன்ஸ் வேக் (1939), டப்ளினர்ஸ் என்னும் சிறுகதைத் தொகுப்பு (1914), ஒரு அரை குறைத் தன்கதையான இளைஞனாக ஒரு கலைஞனின் வடிவம் (A Portrait of the Artist as a Young Man - 1916) போன்றவற்றின் மூலம் இவருக்குப் பரவலான புகழ் கிடைத்தது.

வளர்ந்த நிலையில் தனது வாழ்வின் பெரும் பகுதியை அயர்லாந்துக்கு வெளியிலேயே கழித்த போதும், ஜோய்சின் உளவியல் மற்றும் கற்பனைக் கதைகள் அனைத்தும் அவரது சொந்த நகரான டப்ளினிலேயே வேர்விட்டிருந்தன. இவரது கதைகளின் களங்களையும், கருப்பொருள்களையும் டப்ளினே அவருக்கு வழங்கியது. சொந்த இடத்துக்கு அவர் கொடுத்த நுணுக்கமான கவனம், தானாகவே நாடு கடந்து வாழ்ந்தமை, ஐரோப்பா முழுவதிலும், சிறப்பாகப் பாரிசில் அவருக்கு இருந்த செல்வாக்கு என்பன அவரை, ஒரு உலகம் தழுவியவராகவும், அதேநேரம் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது மட்டும் கவனத்தைச் செலுத்தியவராகவும் ஒரு முரண்பட்ட தோற்றத்தில் காட்டுகின்றன.

தாக்கங்கள்[தொகு]

ஹோமர், அரிஸ்ட்டாட்டில், டான்டே அலிகியேரி, குஸ்தாவ் ஃபிளவ்பர்ட், பெர்சி பைஷ் ஷெல்லி, பென் ஜான்சன், தாமஸ் அக்குவைனஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான் மில்ட்டன், பிரீட்ரிக் நீட்சே, Édouard Dujardin, ஹெண்ட்ரிக் இப்சன், ஜியோர்டானோ புரூனோ, Giambattista Vico, அன்டன் செக்கோவ், லியோ டால்ஸ்டாய், ஆஸ்கார் வைல்ட், டபிள்யு. பி. யீட்ஸ்

பின்பற்றுவோர்[தொகு]

Samuel Beckett, ஹோர்ஹே லூயிஸ் போர்கேஸ், Flann O'Brien, Paul Auster, சல்மான் ருஷ்டி, உம்பெர்த்தோ எக்கோ, வெர்ஜீனியா வூல்ஃப், Don DeLillo, Anthony Burgess, Joseph Campbell, William Faulkner, Thomas Pynchon, Edna O'Brien, Martin Amis, Jamie O'Neill, ஜார்ஜ் ஆர்வெல், Bret Easton Ellis, Brendan Behan, Robert Anton Wilson, Máirtín Ó Cadhain, John Updike, சில்வியா பிளாத், Jacques Derrida, Jacques Lacan

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஜோய்ஸ்&oldid=1828288" இருந்து மீள்விக்கப்பட்டது