ஜேம்ஸ் சங்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்சு சங்மா
James Sangma
சங்மா (வலது) அக்டோபர் 2018
உள்துறை, மாவட்ட கவுன்சில் விவகாரங்கள், உணவு சிவில் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், சட்டம், மின்சார அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 மார்ச் 2018
மேகாலய சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1976
துரா, மேகாலயா
அரசியல் கட்சிதேசிய மக்கள் கட்சி

ஜேம்ஸ் பாங்சாங் கொங்கல் சங்மா (James Sangma) என்பார் (மேற்கு கரோ மலையில் துராவில் பிறந்தார் 1976) மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் மேகாலயா அரசாங்கத்தில் தற்போதைய உள்துறை, மாவட்ட குழு விவகாரங்கள், உணவு சிவில் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், சட்டம், மின்சார அமைச்சராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி உறுப்பினரான இவர், தனது சகோதரர் கான்ராட் சங்மாவுடன் முதன்முதலில் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மேற்கு கரோ மலை மாவட்டத்தில் உள்ள தாதெங்ரே (விதான் சபா தொகுதி) (எஸ்.டி) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சங்மா மேகாலயாவின் முன்னாள் முதல்வரும், இந்திய மக்களவை சபாநாயகருமான பி. ஏ. சங்மாவின் மகனாவார். இவரது சகோதரி அகதா சங்மா 15வது மக்களவையில் உறுப்பினராகவும், முன்னாள் மத்திய அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். இவரது சகோதரர் கான்ராட் சங்மா 2009 முதல் 2013 வரை மேகாலயா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்தார். இவர், துரா மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். இவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_சங்மா&oldid=3158150" இலிருந்து மீள்விக்கப்பட்டது