ஜெ. சாந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெ. சாந்தா
J. Shantha
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில்
பதினைந்தாவது மக்களவை.[1]
முன்னையவர்காலி கருணாகர ரெட்டி
பின்னவர்பி. சிறீராமுலு
தொகுதிபெல்லாரி, கருநாடகம்[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1973 (1973-06-01) (அகவை 50).[1]
பெல்லாரி, (கருநாடகம்).
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி.[1]
பிள்ளைகள்1 மகள்
பெற்றோர்(s)பி. திம்மப்பா (அப்பா),
பி. கண்ணுரம்மா (அம்மா)
வாழிடம்பெல்லாரி & புது தில்லி[1]
தொழில்சமூகசேவகர், அரசியல்வாதி[1]
செயற்குழுஉறுப்பினர், நீர் வளக் குழு

ஜெ. சாந்தா (J. Shantha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார். இவர் கருநாடகாவின் பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். மேலும் சாந்தா ஸ்ரீராமுலுவின் சகோதரி ஆவார்.

இளமை[தொகு]

சாந்தா கருநாடகாவின் பெல்லாரியில் பிறந்தார். இடைநிலைக் கல்வி வரை பயின்றுள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சாந்தா, பட்டியல் சாதியினருக்குஒதுக்கப்பட்ட பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு பெல்லாரி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை 240,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

வகித்த பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி
01 2009 2014 நாடாளுமன்ற உறுப்பினர், பதினைந்தாவது மக்களவை
02 2009 2014 நீர்வளக் குழு உறுப்பினர்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Member Profile". Lok Sabha website. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4314. பார்த்த நாள்: 1 January 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._சாந்தா&oldid=3668975" இலிருந்து மீள்விக்கப்பட்டது