ஜெய் ஜவான் ஜெய் கிசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெய் ஜவான் ஜெய் கிசான் ( Jai Jawan Jai Kisan ) என்பது இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் முழக்கமாகும். இது 1965 ஆம் ஆண்டு பிரயாக்ராஜ் என்ற பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டது. [1] [2]

நேருவின் மரணத்திற்குப் பிறகு சாஸ்திரி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற உடனேயே, இந்தியா பாகிஸ்தானால் தாக்கப்பட்டது. அதே நேரத்தில், நாட்டில் உணவு தானியங்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது. இந்தியாவைக் காக்க ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தவும், அதே நேரத்தில் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை உற்சாகப்படுத்தவும் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை சாஸ்திரி எழுப்பினார். இது மிகவும் பிரபலமான முழக்கமாக மாறியது. [1]

மாற்றுருவங்கள்[தொகு]

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் ( அடல் பிகாரி வாச்பாய், பிரதமர் )

1998 இல் பொக்ரான் அணுகுண்டு சோதனைகளுக்குப் பிறகு, அடல் பிகாரி வாச்பாய் இந்தியாவின் முன்னேற்றத்தில் அறிவின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்ட ஜெய் விக்யான் (அறிவியல் வாழ்க) என்ற சொற்றொடரை முழக்கத்துடன் சேர்த்தார்.

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன் ( நரேந்திர மோதி, பிரதமர் )

ஜலந்தரில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 106வது இந்திய அறிவியல் பேராயத்தில் "எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் பேசிய பிரதமர் மோடி, ஜெய் ஜவான், ஜெய் கிசான் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாயின் ஜெய் விக்யான் என்ற புகழ்பெற்ற முழக்கத்துடன் ஜெய் அனுசந்தன் என்று சேர்த்து "ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்" கூறி தேசிய வளர்ச்சிக்கான ஆராய்ச்சிப் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். [3]

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான், ஜெய் வித்வான் ( டாக்டர் கே. சி. மிஸ்ரா, இயக்குநர், எல்பிஎஸ்ஐஎம் புது தில்லி )

இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து 10வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதைப் பெற்ற பிறகு, 15 திசம்பர் 2009 அன்று தீன் மூர்த்தி பவனில் சுனில் பார்தி மித்தலின் ஏற்புரையின் போது, தில்லியின் லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மைக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் கைலாஷ் சந்திர மிஸ்ரா, ஜெய் வித்வான் என்பதன் பொருள் "கற்றவர்களுக்கு வாழ்த்து" என்பதாகும்.[சான்று தேவை]

நா ஜவான் நா கிசான்

2021 ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டம் குறித்து, சசி தரூர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது சாஸ்திரியின் அசல் மேற்கோளைக் குறிப்பிட்டு, "நா ஜவான் நா கிசான்" ( பொருள் "சிப்பாயும் இல்லை விவசாயியும் இல்லை") என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். [4]

பரவலர் பண்பாட்டில்[தொகு]

2015 ஆம் ஆண்டில், சாஸ்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படமானது இந்த முழக்கத்தை பெயராக கொண்டு வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The ground beneath her feet". Livemint. April 5, 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-05.
  2. "PM adds 'Jai Anusandhan' to Jai Jawan, Jai Kisan and Jai Vigyan" (in en-IN). The Hindu. 2019-01-03. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/pm-adds-jai-anusandhan-to-jai-jawan-jai-kisan-and-jai-vigyan/article25898288.ece. 
  3. Bhaduri, Ayshee, ed. (2021-02-10). "Contribution of this budget is Na Jawan na Kisan: Shashi Tharoor". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_ஜவான்_ஜெய்_கிசான்&oldid=3751100" இலிருந்து மீள்விக்கப்பட்டது