ஜிம் லேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜிம் லேக்கர்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜிம் லேக்கர்
பிறப்பு பெப்ரவரி 9, 1922(1922-02-09)
இங்கிலாந்து
இறப்பு 23 ஏப்ரல் 1986(1986-04-23) (அகவை 64)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 328) சனவரி 21, 1948: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு பிப்ரவரி 18, 1959: எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 46 450
ஓட்டங்கள் 676 7,304
துடுப்பாட்ட சராசரி 14.08 16.60
100கள்/50கள் 0/2 2/18
அதியுயர் புள்ளி 63 113
பந்துவீச்சுகள் 12,027 101,370
விக்கெட்டுகள் 193 1,944
பந்துவீச்சு சராசரி 21.24 18.41
5 விக்/இன்னிங்ஸ் 9 127
10 விக்/ஆட்டம் 3 32
சிறந்த பந்துவீச்சு 10/53 10/53
பிடிகள்/ஸ்டம்புகள் 12/– 270/–

சனவரி 7, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜிம் லேக்கர் (Jim Laker, பிறப்பு: பெப்ரவரி 9 1922, இறப்பு: ஏப்ரல் 23 1986) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 450 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 - 1959 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆகக் கூடிய இலக்குகளை (விக்கெட்) வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர். ஓல்ட் ட்ரபோட் மைதானத்தில் 1956 ஆம் ஆண்டின் ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லேக்கர் இந்த சாதனையை நிலைநாட்டினார். அந்தப் போட்டியில் அவர் 90 ஓட்டங்களைக் கொடுத்து 19 இலக்குகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணிக்காக 46 டெஸ்ட் போட்டியில் (193 இலக்குகள்) பங்கேற்றுள்ள ஜிம் முதல் தர போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 1,944 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். 1956 ஓல்ட் டிரேஃபோர்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தான் இவர் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனைப் படைத்தார். முதல் இன்னிங்ஸில் ஒன்பது இலக்குகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 இலக்குகளும் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏழு போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜிம் லேக்கர் மொத்தம் வீழ்த்திய இலக்குகள் மட்டும் 63. அதாவது சராசரியாக 10 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கு என்ற விகிதத்தில் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம் லேக்கர் 11 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தாலும் காயங்கள் அதிகம் ஏற்பட்டதால் மிகுதியான போட்டியில் இவர் பங்கேற்கவில்லை. துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பின் வர்ணனையாளராக மாறினார்.

ஜிம் லேக்கர் 1986ல் லண்டன் நகரில் பட்னி என்ற இடத்தில் இயற்கை எய்தினார். ஜிம் லேக்கரின் சாதனையை தான் இந்திய சூழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_லேக்கர்&oldid=2260846" இருந்து மீள்விக்கப்பட்டது