ஜிம் கவீசல்
ஜிம் கவீசல் | |
---|---|
![]() 2013ம் ஆண்டில் கவீசல் | |
பிறப்பு | ஜேம்சு பாட்ரிக் கவீசல் செப்டம்பர் 26, 1968 வாசிங்டன் மாநிலம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | கெரி புரோவிட் (தி. 1996) |
பிள்ளைகள் | 3 |
வலைத்தளம் | |
jimcaviezel |
ஜேம்சு பாட்ரிக் கவீசல் [1] (செப்டம்பர் 26, 1968-இல் பிறந்தவர் -- James Patrick Caviezel) ஒரு அமெரிக்க நடிகராவார். கவீசல் மெல் கிப்சனின் த பேசன் ஆப் த கிறைஸ்ட் (2004) என்ற படத்தில் இயேசு கிறிஸ்துவை சித்தரித்தார்; பெர்சன் ஆவ் இன்டரெஸ்டு என்ற அறிவியல் புனைகதை குற்ற நாடகத் தொடரில் ஜான் ரீசாக நடித்தார். [2]
வாழ்வும் தொழிலும்
[தொகு]ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கவீசல் வாசிங்டன் மாநிலத்தில் மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் மார்கரெட்-ஜேம்சு கவீசல் தம்பதிக்குப் பிறந்தார் [3]. அவருக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் உள்ளனர். அவரது தந்தை சிலோவாக்கிய-சுவிசு குடிப்பிறப்பையும் அவரது தாயார் ஐரிசு குடிப்பிறப்பையும் கொண்டவர்.
தொழில்
[தொகு]முதலில் கவீசல் சியாட்டில் நகரத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1991ஆம் ஆண்டில் மை ஓன் பிரைவேட் ஐடகோ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்குச் சென்றார். 1998ஆம் ஆண்டில் அவர் நடித்த த தின் ரெட் லைன் என்ற படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 2000ஆம் ஆண்டில் மாடிசன் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்; ஆனால் 2005ஆம் ஆண்டு வரை இப்படம் வெளியாகவில்லை.
நடித்த பாத்திரங்களின் பட்டியல்
[தொகு]ஜிம் 34 திரைப்படங்களிலும் 5 தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார்; இது தவிர, 4 ஆவணப்படங்களில் கதை கூறுபவராகவும் செயல்பட்டுள்ளார்.
தொலைக்காட்சித் தொடர்கள்
[தொகு]
Year | Title[4] | Role | Notes |
---|---|---|---|
1992 | தி வொண்டர் இயற்சு | பாபி ரிடில் | அத்தியாயம்: "கீரோ" |
1995 | மர்டர், சீ ரோட் | டேரில் ஆர்டிங்கு | அத்தியாயம் "பிலிம் பிலாம்" |
1995 | சில்டிரன் ஆவ் த டஸ்டு | டெக்ஸ்டர் | குறுந்தொடர் |
2009 | தி பிரிசனர் | மைக்கேல் / சிக்சு | குறுந்தொடர் |
2011–2016 | பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்) | ஜான் ரீசு | 103 அத்தியாயங்கள் நியமிக்கப்பட்டார் – 40வது மக்கள் தேர்வு விருதுகளுக்கு (2014, 2015) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "வென்றவர்கள் | மூவி கைடு® விருதுகள்" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-02-23. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
- ↑ "ஜேம்சு கவீசல் - Biography, Movie Highlights and Photos". ஆல் மூவீ. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "ஜேம்சு கவீசலின் வாழ்க்கைக் குறிப்பு". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-02.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "James Caviezel – Movies and Filmography". AllMovie Filmography. பார்க்கப்பட்ட நாள் April 28, 2018.