ஜிம் கவீசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிம் கவீசல்
2013ம் ஆண்டில் கவீசல்
பிறப்புஜேம்சு பாட்ரிக் கவீசல்
செப்டம்பர் 26, 1968 (1968-09-26) (அகவை 55)
வாசிங்டன் மாநிலம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கெரி புரோவிட் (தி. 1996)
பிள்ளைகள்3
வலைத்தளம்
jimcaviezel.us

ஜேம்சு பாட்ரிக் கவீசல் [1] (செப்டம்பர் 26, 1968-இல் பிறந்தவர் -- James Patrick Caviezel) ஒரு அமெரிக்க நடிகராவார். கவீசல் மெல் கிப்சனின் த பேசன் ஆப் த கிறைஸ்ட் (2004) என்ற படத்தில் இயேசு கிறிஸ்துவை சித்தரித்தார்; பெர்சன் ஆவ் இன்டரெஸ்டு என்ற அறிவியல் புனைகதை குற்ற நாடகத் தொடரில் ஜான் ரீசாக நடித்தார். [2]

வாழ்வும் தொழிலும்[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கவீசல் வாசிங்டன் மாநிலத்தில் மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் மார்கரெட்-ஜேம்சு கவீசல் தம்பதிக்குப் பிறந்தார் [3]. அவருக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் உள்ளனர். அவரது தந்தை சிலோவாக்கிய-சுவிசு குடிப்பிறப்பையும் அவரது தாயார் ஐரிசு குடிப்பிறப்பையும் கொண்டவர்.

தொழில்[தொகு]

முதலில் கவீசல் சியாட்டில் நகரத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1991ஆம் ஆண்டில் மை ஓன் பிரைவேட் ஐடகோ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்குச் சென்றார். 1998ஆம் ஆண்டில் அவர் நடித்த த தின் ரெட் லைன் என்ற படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 2000ஆம் ஆண்டில் மாடிசன் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்; ஆனால் 2005ஆம் ஆண்டு வரை இப்படம் வெளியாகவில்லை.

நடித்த பாத்திரங்களின் பட்டியல்[தொகு]

ஜிம் 34 திரைப்படங்களிலும் 5 தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார்; இது தவிர, 4 ஆவணப்படங்களில் கதை கூறுபவராகவும் செயல்பட்டுள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]


Year Title[4] Role Notes
1992 தி வொண்டர் இயற்சு பாபி ரிடில் அத்தியாயம்: "கீரோ"
1995 மர்டர், சீ ரோட் டேரில் ஆர்டிங்கு அத்தியாயம் "பிலிம் பிலாம்"
1995 சில்டிரன் ஆவ் த டஸ்டு டெக்ஸ்டர் குறுந்தொடர்
2009 தி பிரிசனர் மைக்கேல் / சிக்சு குறுந்தொடர்
2011–2016 பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்) ஜான் ரீசு 103 அத்தியாயங்கள்
நியமிக்கப்பட்டார் – 40வது மக்கள் தேர்வு விருதுகளுக்கு (2014, 2015)

மேற்கோள்கள்[தொகு]

  1. "வென்றவர்கள் | மூவி கைடு® விருதுகள்" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-02-23. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  2. "ஜேம்சு கவீசல் - Biography, Movie Highlights and Photos". ஆல் மூவீ. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "ஜேம்சு கவீசலின் வாழ்க்கைக் குறிப்பு". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "James Caviezel – Movies and Filmography". AllMovie Filmography. பார்க்கப்பட்ட நாள் April 28, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_கவீசல்&oldid=3777965" இலிருந்து மீள்விக்கப்பட்டது