ஜிகார்சினிடே
ஜிகார்சினிடே | |
---|---|
ஹாலோவன் நண்டு, ஜிகார்சினசு குயாட்ரேடசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கொஸ்டிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | ஜிகார்சினிடே
மெக்லே, 1838 [1]
|
ஜிகார்சினிடே (Gecarcinidae) குடும்ப நண்டுகள் நில நண்டுகள் உண்மையான நில நண்டுகள் ஆகும். இவை நிலத்தில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. பிற நண்டுகளைப் போலவே, நில நண்டுகளும் தொடர்ச்சியான செவுள்களைக் கொண்டுள்ளன. செவுள்களைச் சூழ்ந்துள்ள தலையோடு கூடுதல் இரத்த நாளங்களுடன் காணப்படுகிறது. இவை முதுகுநாணி நுரையீரலைப் போலக் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கின்றன. முதிர்வடைந்த நில நண்டுகள் நிலப்பரப்பில் காணப்பட்டாலும் அவ்வப்போது கடலுக்குச் செல்கின்றன. அங்கு இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இளம் உயிரிகள் (குடம்பி) நீர் நிலைகளில் வளர்ச்சியடைகின்றன. நில நண்டுகள் அனைத்துண்ணி வகையின. ஆனால் சில நேரங்களில் பயிர்களுக்குக் கணிசமான சேதத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான நில நண்டுகளில் இடுக்கி கால்களில் வலதை விட இடது அல்லது இடதைவிட வலது பெரியதாகக் காணப்படுகிறது.[2]
சிகார்சினிடே குடும்பத்தில் கீழ்கண்ட பேரினங்கள் உள்ளன:[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world" (PDF). Raffles Bulletin of Zoology 17: 1–286 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606061453/http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf.
- ↑ https://www.ias.ac.in/article/fulltext/jbsc/025/03/0301-0313
- ↑ Danièle Guinot; Ng, Ngan Kee; Rodríguez Moreno, Paula A. (21 December 2018). "Review of grapsoid families for the establishment of a new family for Leptograpsodes Montgomery, 1931, and a new genus of Gecarcinidae H. Milne Edwards, 1837 (Crustacea, Decapoda, Brachyura, Grapsoidea MacLeay, 1838)". Zoosystema 40 (sp1): 547–604. doi:10.5252/zoosystema2018v40a26. https://sciencepress.mnhn.fr/sites/default/files/articles/pdf/zoosystema2018v40a26.pdf.
- என்கார்டா குறிப்பு நூலகம் பிரீமியம் 2005 டிவிடி.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் ஜிகார்சினிடே தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் ஜிகார்சினிடே பற்றிய தரவுகள்