சாலூக்குசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜாலூக்கஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Zaleucus " Promptuarii Iconum Insigniorum " இலிருந்து

ஜாலூக்கஸ் (Zaleucus பண்டைக் கிரேக்கம்Ζάλευκος, கி.மு. 7 ஆம் நூற்றாண்டு) என்பவர் இத்தாலியில் எபிஸ்பிரியன் லோக்ரிக்காக கிரேக்க சட்டமியற்றியவர் மற்றும் ஒரு பித்தகோரியன் தத்துவஞானி ஆவார். [1] சுதாவின் கூற்றுப்படி, இவர் முன்னாள் அடிமை மற்றும் மேய்ப்பர் ஆவார். இவர் கல்வி கற்ற பிறகு அவர் தனது சக குடிமக்களுக்கு சட்டங்களை வழங்கினார். [1]

அநேகமாக, இவர்தான் முதன்முதலில் ஐரோப்பாவில் எழுத்ததிலே சட்டதிட்டங்களை (லோக்ரியன் கோட்) வகுத்தவர் எனப்படுகிறது. இது கிமு 7 ஆம் நூற்றாண்டில் வகுக்கபட்டது

இச்சட்டமானது மருத்துவ நோக்கங்களுக்காக தவிர வைன் அருந்துவதை தடை செய்தது.

லோக்ரியன் கோட் பிரபுத்துவத்திற்கு சாதகமாக இருந்தாலும், சமூகப் பிரிவினரிடையே சமரசம் செய்ததற்காக ஜாலூகஸ் பிரபலமானார். இவரது வாழ்க்கை குறித்து வேறு எந்த தகவல்களும் உறுதியானதாக இல்லை. தொன்மங்களின்படி, இவர் முறைபிறழ்புணர்ச்சியை பார்வை பறிப்பதன் மூலம் தண்டித்தார். [2] இவர் கொண்டுவந்த மற்றொரு சட்டம் செனட் அவைக்குள் ஆயுதம் ஏந்தி யாரும் நுழைவதைத் தடை செய்தது. ஒரு சமயம் அவசரத்தில் இவரே ஆயுதத்துடன் அவைக்குள் நுழைந்துவிட்டார் ஆனால் இவரது சட்டம் நினைவுக்கு போது, இவர் உடனடியாக தனது வாள் மீது விழுந்து சமூக ஒழுங்கிற்கு எடுத்துக்காட்டாக பலியானார். இதே போன்ற ஒரு கதை சரோண்டாஸ் பற்றி கூறப்படுகிறது.

ஒரு புதிய சட்டத்தை அல்லது ஏற்கனவே உள்ள ஒரு சட்டத்தை மாற்றியமைக்க யாரேனும் முன்மொழிந்தால், அவர் கழுத்தில் கயிற்றுடன் குடியுரிமை மன்றத்தில் நேர் நிற்க வேண்டும். மன்றம் அவரின் முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தால், முன்மொழிந்தவர் கழுத்து உடனடியாக நெரிக்கப்படும். [3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Suda Encyclopedia, § zeta.12
  2. This incident is recounted in Book 6, Chapter 5 of Memorable Deeds and Sayings by Valerius Maximus, and is presented in a slightly altered form in Tale 50 of Gesta Romanorum.
  3. This anecdote is cited by Edward Gibbon in his discussion of the origin of Roman jurisprudence and of the Twelve Tables in particular in Chapter XLIV of The History of the Decline and Fall of the Roman Empire.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Sheridan, Paul (2015-07-12). "A New Zaleucus to Rebuke us in the Online Age". Anecdotes from Antiquity. பார்க்கப்பட்ட நாள் 2015-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலூக்குசு&oldid=3706360" இலிருந்து மீள்விக்கப்பட்டது