சரோன்தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1787 ஆண்டைச் சேர்ந்த பிரெஞ்ச் விளக்கப்படம் சரோன்தாசின் தற்கொலையை சித்தரிக்கிறது, டியோடோரஸ் சிகுலஸ் விவரிப்படின்படி

சரோந்தசு (Charondas கிரேக்கம்: Χαρώνδας) என்பவர் சிசிலி தீவின் கேடானியாவின் புகழ்பெற்ற சட்டமியற்றியவர் ஆவார். இவர் எப்போது வாழ்ந்தார் என்பது நிச்சயமற்றது; சிலர் இவரை பித்தகோரசின் (கி.மு. c. 580 – கிமு 504) மாணவர் என்று அடையாளப்படுத்துகின்றனர். ஆனால் இவர் ரெஜியத்தின் அனாக்சிலசுக்கு (கிமு 494 – 476) முன்பு வாழ்ந்தார் என்று கூறலாம், ஏனெனில் இவருடைய சட்டங்கள் ரெஜியன்களின் பயன்பாட்டில் இருந்தன. அனாக்சிலாசால் அவை ஒழிக்கப்பட்டன. [1] இவரது சட்டங்கள், முதலில் உரைநடையில் எழுதப்பட்டன. அவை சிசிலி மற்றும் இத்தாலியில் உள்ள மற்ற கால்சிடிக் குடியேற்றங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி, இந்தச் சட்டங்களில் சரோன்தாசு பொய்ச் சாட்சியத்துக்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை, ஆனால் அவை உருவாக்கப்பட்ட துல்லியத்தைப் பற்றி அவர் உயர்வாகப் பேசுகிறார். [2] சரோன்தாசு தனது சொந்த சட்டத்தை அவசரத்தில் மீறி வாள் அணிந்து பொது அவையில் நுழைந்ததால் தன்னைத்தானே கொன்று தற்கொலை செய்து கொண்டார். இதே போன்ற கதை சைராகுஸ் மற்றும் ஜாலூக்கசு போன்றோரின் கதைகளிலும் சொல்லப்படுகிறது. [3]

குறிப்புகள்[தொகு]

  1. Peck, Harry Thurston (1898). Harpers Dictionary of Classical Antiquities. https://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0062%3Aalphabetic+letter%3DC%3Aentry+group%3D13%3Aentry%3Dcharondas-harpers. பார்த்த நாள்: 4 July 2015. 
  2. Chisholm 1911 cites Politics, ii. 12.; Aristotle, Politics. IV, 7.
  3. Chisholm 1911 cites Diod. Sic. xii. 11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோன்தாசு&oldid=3706352" இலிருந்து மீள்விக்கப்பட்டது