ஜார்ஜ் சொரெஸ்
George Soros | |
---|---|
![]() ஜார்ஜ் சொரெஸ், உலக பொருளாதார மன்றத்தின் 2010 ஆண்டுக் கூட்டத்தில் | |
பிறப்பு | ஆகத்து 12, 1930 புடாபெஸ்ட், அங்கேரி |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலண்டன் பொருளியல் பள்ளி |
பணி | தொழில்முனைவோர், நாணய வணிகர், முதலீட்டாளர், மெய்யியலாளர், கொடையாளர், அரசியல் செயற்பாட்டாளர் |
சொத்து மதிப்பு | ![]() |
சமயம் | யூதம் (முன்பு); இறைமறுப்பு.[2] |
வாழ்க்கைத் துணை | இரு முறை மணமுறிவு பெற்றவர் (அன்னாலீஸ் விட்சாக் மற்றும் சூசன் வெபர் சோரோஸ்) |
பிள்ளைகள் | ராபர்ட், ஆண்ட்ரியா, ஜோனாதன், அலெக்சாண்டர், கிரிகோரி |
வலைத்தளம் | |
www.georgesoros.com |
ஜார்ஜ் சொரெஸ் (George Soros, பிறப்பு ஜியோர்கி ஸ்வார்ட்ஸ் ; 12, ஆகத்து, 1930) என்பவர் ஒரு அமெரிக்க [a] முதலீட்டாளர், கொடையாளர் ஆவார். 2025 மார்ச்சு நிலவரப்படி இவர் 7.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்பைக் கொண்டிருந்தார். [5] திறந்த சமூக அறக்கட்டளைக்கு $32 பில்லியனுக்கும் கூடுதலான தொகையை நன்கொடையாக அளித்துள்ளார், [6] இது இவரது அசல் செல்வத்தில் 64% ஆகும். 2020 ஆம் ஆண்டில், போர்ப்ஸ் பத்திரிகை நிகர சொத்து மதிப்பின் சதவீதத்தின் அடிப்படையில் சொரோஸை "மிகவும் தாராளமாக நன்கொடை அளிப்பவர்" என்று கூறியுள்ளது. [7]
புடாபெசுட்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்த சொரெஸ், அங்கேரியின் நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து தப்பித்து 1947 இல் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார் இலண்டன் பொருளியல் பள்ளியில் பயின்றார், 1951 ஆம் ஆண்டு மெய்யியலில் இளம் அறிவியல் பெற்றார், பின்னர் 1954 ஆம் ஆண்டு மெய்யியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். [8] முதலில் வங்கியில் பணியாற்றினார். பின்னர் 1969 ஆம் ஆண்டு தனது முதல் ஹெட்ஜ் நிதியான டபுள் ஈகிளைத் துவக்கினார். இந்த நிதியிலிருந்து கிடைத்த இலாபமானது 1970 ஆம் ஆண்டு இவர் துவக்கிய இரண்டாவது ஹெட்ஜ் நிதியான சொரெஸ் ஃபண்ட் மேனேஜ்மென்ட்டுக்கு முதலாக ஆனது. டபுள் ஈகிள் நிறுவனம் குவாண்டம் ஃபண்ட் என பெயர்மாற்றப்பட்டது. மேலும் சொரெஸ் ஆலோசனை வழங்கிய முதன்மை நிறுவனமாக இருந்தது. நிறுவப்பட்டபோது, குவாண்டம் நிதி நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் $12 மில்லியன் சொத்துக்கள் இருந்தது. மேலும் 2011[update] இது $25 பில்லியனாக இருந்தது. இது சொரெசின் ஒட்டுமொத்த நிகர சொத்து மதிப்பில் பெரும்பகுதியாகும்.
1992 ஆம் ஆண்டு கருப்பு புதன்கிழமை இங்கிலாந்து நாணய நெருக்கடியின் போது, 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிரித்தானிய பவுண்டை குறுகிய காலத்தில் விற்பனை செய்ததன் விளைவாக, சோரோஸ் " இங்கிலாந்து வங்கியை உடைத்த மனிதன்" என்று அழைக்கப்படுகிறார், இதன் மூலம் இவருக்கு $1 பில்லியன் லாபம் கிடைத்தது. [9] தனது ஆரம்பகால மெய்யியல் ஆய்வுகளின் அடிப்படையில், சொரெஸ் மூலதனச் சந்தைகளுக்கான பிரதிபலிப்புத் தன்மையின் பொதுக் கோட்பாட்டை உருவாக்கினார். இது பொருளாதாரக் குமிழ் மற்றும் பங்கு பத்திரங்களின் அடிப்படை / பங்குச்சந்தை மதிப்பு போன்றவைக் குறித்த நுண்ணறிவுகளை இவர் பெற உதவியது. [10]
சொரெஸ் முற்போக்கான, தாராளவாத அரசியல் நோக்கங்களை ஆதரிக்கிறார். அவற்றிற்காக இவர் தனது திறந்த சமூக அறக்கட்டளை மூலம் நன்கொடைகளை வழங்குகிறார். [11] 1979 - 2011 ஆண்டுகளுக்கு இடையில், பல்வேறு மனிதநேய நோக்கங்களுக்காக இவர் $11 பில்லியனுக்கும் அதிகமாக நன்கொடைகளை அளித்துள்ளார். [12] 2017 ஆம் ஆண்டு வாக்கில், "வறுமை ஒழிப்பிற்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் குடிமை செயல்பாடுகளுக்கு உலகெங்கும் நிதுயுதவி அளித்துள்ளார்" இவர் அளித்த நன்கொடைகள் மொத்தம் $12 பில்லியனை எட்டின. 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சியில் இவர் செல்வாக்கு செலுத்தினார். [13] அங்கேரியில் இவரது சொந்த ஊரில் உள்ள மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்திற்கு மிகப்பெருமளவிலான உயர்கல்வி நிதியுதவியை வழங்கினார். அரசியல் நோக்கங்களுக்காக சொரெஸ் அதிக அளவில் நிதி திரட்டியளித்தது இவரை "ஐரோப்பிய தேசியவாதிகளின் பூச்சாண்டி " ஆக்கிவிட்டது. உலகளாவிய அரசியல் சதித்திட்டங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள ஆபத்தான ஒரு "கைப்பாவை நிகழ்த்துநர்" என்று சோரோசை முத்திரைக் குத்தும் கூற்றுக்களை தீவிர வலதுசாரி கோட்பாட்டாளர்கள் ஊக்குவித்துவருகின்றனர். [14] யூத வம்சாவளியைச் சேர்ந்த சொரெஸ் மீதான விமர்சனங்கள் பெரும்பாலும் யூத எதிர்ப்பு சதி கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]கியோர்கி ஸ்வார்ட்ஸ் 1930, ஆகத்து, 12 அன்று அங்கேரி இராச்சியத்தில் உள்ள புடாபெஸ்டில், சமய நம்பிக்கையற்ற ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் காலத்தில் இருந்த பல உயர்-நடுத்தர வர்க்க அங்கேரிய யூதர்களைப் போலவே, அவர்கள் தங்கள் வேர்கள் குறித்து சங்கடப்பட்டனர். சோரோஸ் தனது வீட்டை ஒரு யூத எதிர்ப்பு வீடு என்று நகைச்சுவையாக விவரித்துள்ளார். [15] இவரது தாயார் எர்செபெட்டின் (எலிசபெத் என்றும் அழைக்கப்படுகிறார்) குடும்பம் சிறப்பாக ஒரு பட்டுக் கடையை நடத்தி வந்தது. [16] இவரது தந்தை திவாடர் (தியோடோரோ ஸ்வார்க் என்றும் அழைக்கப்படுகிறார்) வழக்கறிஞராகவும், நன்கு அறியப்பட்ட எஸ்பெராண்டோ மொழி எழுத்தாளராகவும் இருந்தார். அவர் எஸ்பெராண்டோ இலக்கிய இதழான லிட்டராதுரா மோண்டோவின் ஆசிரியராக இருந்தார். தன் மகனை அந்த மொழியைப் பேச ஊக்குவித்தார். [16] முதலாம் உலகப் போரின் போதும் அதற்குப் பின்னரும் திவடார் போர்க் கைதியாக இருந்தார். பின்னர் அவர் உருசியாவிலிருந்து தப்பித்து புடாபெஸ்டில் உள்ள தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தார். [17] [18] இவரது பெற்றோர் 1924 இல் திருமணம் செய்து கொண்டனர். 1936 ஆம் ஆண்டில், சொரெசின் குடும்பம் தங்கள் குடும்பப் பெயரை ஜெர்மன்-யூத "ஸ்க்வார்ட்ஸ்" என்பதிலிருந்து "சோரெஸ்" என்று மாற்றிக்கொண்டது. இது அதிகரித்து வரும் யூத எதிர்ப்பிலிருந்து அங்கேரியில் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் உருமறைப்பாகப் பயன்படுத்தினர். [19] [20]
1944 மார்ச்சில் நாஜி ஜெர்மனி அங்கேரியைக் கைப்பற்றியபோது சொரெசுக்கு 13 வயது. [21] நாஜிக்கள் யூதக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைத் தடை விதித்தனர்.
இவரது குடும்பத்தினர் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்கான போலி ஆவணங்களைப் பெற்று போர்ப் பகுதியிலிருந்து தப்பிப்பி வெளியேறினர். இவரது தந்தை திவடார் தனக்கு நெருக்கமான குடும்பத்தினரை மட்டுமல்லாமல், பல அங்கேரிய யூதர்களையும் காப்பாற்றினார். 1944 ஆண்டு தன் தந்தையின் செயற்கரும் செயல்களைக் காணும் வாய்ப்பு கிடைத்ததால், "தனது வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான [ஆண்டு]" என்று சோரோஸ் பின்னர் எழுதினார். [22] [23] 1945 ஆம் ஆண்டில், சோவியத் படைகளும் ஜெர்மன் படைகளும் நகரம் முழுவதும் வீடு வீடாகப் பகுந்து சண்டையிட்ட புடாபெஸ்ட் முற்றுகையிலிருந்து சொரெஸ் தப்பிப் பிழைத்தார். ஜார்ஜும் அவரது தாயாரும் எல்சா பிராண்டீஸ்சின் குடும்பத்தினரின் உதவியால் அவரகளுடன் சிறிது காலம் மறைந்து இருந்தனர். மேலும் அவர்களுடன் அவர்களது லூத்தரன் தேவாலயத்திற்கும் சென்றனர். [24] 17 வயதில், சோரோஸ் பாரிசுக்கு இடம் பெயர்ந்து, இறுதியில் இங்கிலாந்துக்குச் சென்றடைந்தார். [25] அங்கு இவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் மாணவரானார். [26] மெய்யியல் அறிஞர் கார்ல் பாப்பரின் மாணவராக இருந்தபோது, சொரெஸ் இரயில்வே சுமைதூக்கும் தொழிலாளியாகவும் பணியாற்றினார், மேலும் ஒரு முறை குவாக்கர் தொண்டு நிறுவனத்திடமிருந்து £40 பெற்றார். [27] சில சமயங்களில் சொரெஸ் இங்கிலாந்தின் ஸ்பீக்கர்ஸ் கார்னரில் நின்று சர்வதேசியத்தின் நற்பண்புகளைப் பற்றி எஸ்பெராண்டோ மொழியில் சொற்பொழிவு ஆற்றுவார், அதை அவர் தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். [28] சொரெஸ் 1951 ஆம் ஆண்டு மெய்யியலில் இளம் அறிவியல் பட்டத்தையும், 1954 ஆம் ஆண்டு இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் மெய்யியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். [8] பட்டம் பெற்ற பிறகு, இவர் பல்கலைக்கழகத்திலேயே தங்கி பேராசிரியராகப் பணியாற்ற விரும்பினார். ஆனால் போதுமான மதிப்பெண்கள் பெற முடியாததால், லண்டனில் உள்ள ஒரு முதலீட்டு நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். [25]
வணிகம்
[தொகு]நிதி வாழ்க்கை
[தொகு]துவக்ககால வணிக அனுபவம்
[தொகு]2006 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் உலக விவகார குழுவில் நடந்த ஒரு கலந்துரையாடலில், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சின் வெளிநாட்டு முன்னாள் ஆசிரியரான ஆல்வின் ஷஸ்டர், சோரோசிடம் " குடியேறிய ஒருவர் நிதியாளராக மாறுகிறார்?... பணம் சம்பாதிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியும் என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?" என்று சோரோஸிடம் கேட்டார். " எனக்கு பலவிதமான வேலைகள் இருந்தன, இறுதியில் கடற்கரையில் ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்தேன், நினைவு பரிசு கடைகளில் வேலை செய்தேன். ஆனால் உண்மையில் அது எனக்கான வேலை அல்ல என்று நினைத்தேன். எனவே, லண்டனில் உள்ள ஒவ்வொரு வணிக வங்கியின் ஒவ்வொரு நிர்வாக இயக்குநருக்கும் கடிதம் எழுதினேன். ஒன்று அல்லது இரண்டு பதில்கள் மட்டுமே கிடைத்தன, இறுதியில் ஒரு வணிக வங்கியில் எனக்கு வேலை கிடைத்தது." [29]
சிங்கர் அண்ட் ஃபிரைட்லேண்டர்
[தொகு]1954 ஆம் ஆண்டில், சொரெஸ் தனது நிதித் துறை வாழ்க்கையை இலண்டனின் சிங்கர் & ஃபிரைட்லேண்டர் என்ற வணிக வங்கியில் தொடங்கினார். அங்கு இவர் ஒரு எழுத்தராகப் பணிபுரிந்தார், பின்னர் தரகு துறைக்கு மாற்றப்பட்டார். சக ஊழியரான, ராபர்ட் மேயர், தன் தந்தையின் தரகு நிறுவனமான நியூயார்க்கின் எஃப்.எம் மேயர் நிறுவனத்தில் விண்ணப்பிக்க பரிந்துரைத்தார். [30]
எஃப். எம். மேயர்
[தொகு]1956 ஆம் ஆண்டில், சொரெஸ் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார், அங்கு எஃப்.எம். மேயரில் (1956–59) ஒரு தரகு வர்த்தகராகப் பணியாற்றினார். இவர் ஐரோப்பிய பங்குகளில் நிபுணத்துவம் பெற்றார். [31]
வெர்தெய்ம் அண்ட் கோ.
[தொகு]1959 ஆம் ஆண்டில், எஃப்.எம். மேயரில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, சொரெஸ் வெர்தெய்ம் & கோ நிறுவனத்திற்கு மாறினார். அங்கு ஐந்து ஆண்டுகள் தங்கி பணிபுரிய முடிவு செய்தார். அது $500,000 சேமிக்க போதுமான காலம். அதன் பிறகு இங்கிலாந்துக்குத் திரும்பி மெய்யியலை படிக்க திட்டமிட்டார்.
இந்தக் காலகட்டத்தில், இலண்டன் பொருளியல் பள்ளியில் தன் ஆசிரியரான கார்ல் பாப்பரின் கருத்துக்களை விரிவுபடுத்துவதற்காக, சொரெஸ் அனிச்சைத்தன்மை கோட்பாட்டை உருவாக்கினார். [32] சந்தை மதிப்புகள் பெரும்பாலும் சூழ்நிலையின் பொருளாதார அடிப்படைகளால் மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களின் தவறான கருத்துக்களாலும் மாறுகிகின்றன என்பதை அனிச்சைத்தன்மை முன்வைக்கிறது. இந்த செயல்முறையால் சந்தையானது சுழற்சி முறையில் ஏற்றத்தையும், வீழ்ச்சியையும் சந்திக்கிறது என்று சோரோஸ் கூறினார். [33] [34]
ஆர்ன்ஹோல்ட் மற்றும் எஸ். பிளீச்ரோடர்
[தொகு]1963 முதல் 1973 வரை, ஆர்ன்ஹோல்ட் மற்றும் எஸ். ப்ளீச்ரோடரில் துணைத் தலைவராக சொரெஸ் பணியாற்றினார். வட்டி சமநிலை வரி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வணிகம் மந்தமாக இருந்தது, இது சொரெஸின் ஐரோப்பிய வர்த்தகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. 1963 முதல் 1966 வரையிலான ஆண்டுகளை இவர் தனது மெய்யியல் ஆய்வுக் கட்டுரையை திருத்தங்கள் மேற்கொள்வதில் முதன்மையாக கவனம் செலுத்தினார். 1966 ஆம் ஆண்டில், இவர் தனது வர்த்தக உத்திகளைப் பரிசோதிப்பதற்காக $100,000 பணத்துடன் ஒரு நிதியைத் தொடங்கினார்.
1969 ஆம் ஆண்டில், சொரெஸ் தனது சொந்தப் பணமான $250,000 உட்பட முதலீட்டார்களின் பணத்துடன் சேர்த்து $4 மில்லியன் மூலதனத்தில் டபுள் ஈகிள் ஹெட்ஜ் நிதியை அமைத்தார். இது டச்சு அண்டிலிசின் குராசோவில் அமைந்திருந்தது. [35] டபுள் ஈகிள் என்பது 1967 ஆம் ஆண்டு சொரெஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் ஹென்றி எச். ஆர்ன்ஹோல்ட் ஆகியோரால் நிறுவப்பட்ட ஆர்ன்ஹோல்ட் மற்றும் எஸ். ப்ளீச்ரோடரின் ஃபர்ஸ்ட் ஈகிள் நிதியின் ஒரு கிளையாகும் [36]
1973 ஆம் ஆண்டில், டபுள் ஈகிள் ஃபண்ட் $12 மில்லியனைக் கொண்டிருந்தது. அது சொரெஸ் நிதியத்தின் அடித்ததளத்தை உருவாக்கியது. ஜார்ஜ் சொரெஸ், ஜிம் ரோஜர்ஸ் ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மூலதனப் பங்கில் வருமானத்தையும் இலாபத்தில் 20 விழுக்காட்டையும் பெற்றனர். [31]
அரசியல் ஈடுபாடு
[தொகு]அமெரிக்காவில்
[தொகு]2004 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வரை, சொரெஸ் அமெரிக்க அரசியல் பரப்புரைகளுக்கு பெரிய அளவில் நன்கொடை அளித்ததில்லை. ஓபன்சீக்ரெட்ஸின் கூற்றுப்படி, 2003–2004 தேர்தல் காலத்தின் போது, சொரெஸ் 527 குழுக்களுக்கு (அமெரிக்க வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு பெற்ற குழுக்கள், 26 USC § 527) $23,581,000 நன்கொடை அளித்தார். அந்தக் குழுக்கள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்சைத் தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சொரெசும் பிற நன்கொடையாளர்களும் ஜனநாயகக் கூட்டணி என்ற புதிய அரசியல் நிதி திரட்டும் குழுவை ஆதரித்தனர். இது அமெரிக்காவில் முற்போக்கான நோக்கங்களையும் வலுவான முற்போக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதையும் ஆதரித்தது. [37]
2009 ஆகத்தில், சொரெஸ் நியூயார்க் மாநிலத்திற்கு $35 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கினார். இது பின்நங்கிய குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. மேலும் இது 3 முதல் 17 வயது வரையிலான ஒரு குழந்தைக்கு $200 என்ற விகிதத்தில் சலுகை அட்டைகளை வைத்திருந்த பெற்றோருக்கு வழங்கப்படது. [27] அமெரிக்க முன்னேற்ற மையத்திற்கு சொரெஸ் ஆரம்பகால நன்கொடையாளராக இருந்தார், மேலும் அவர் ஓப்பன் சொசைட்டி அறக்கட்டளைகள் மூலம் அந்த அமைப்பைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.
கிழக்கு ஐரோப்பா
[தொகு]நியூ ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையைச் சார்ந்த நெயில் கிளார்க்கின் கூற்றுப்படி, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமைக் கருத்தாக்கம் சிதைந்ததில் சொரெஸின் பங்கு முதன்மையாக உள்ளது. 1979ஆம் ஆண்டு முதல், போலந்து நாட்டின் சொலிடாரிடி இயக்கம், செக்கோஸ்லாவாக்கியாவின் சார்ட்டர் 77, சோவியத் ஒன்றியம் ஆண்டிராய் சகாரோவ் ஆகியவற்றை உள்ளிட்ட பல எதிரியவாதிகளுக்கு சொரெஸ் வருடத்திற்கு $3 மில்லியன் அளித்து வந்தார் என்று கிளார்க் கூறுகிறார். 1984ஆம் வருடம் அவர் ஹங்கேரியில் தனது முதல் திறந்த சமுதாய நிறுவனம் (Open Society Institute) ஒன்றை நிறுவி, எதிர்த்தரப்பு இயக்கங்கள் மற்றும் சுதந்திர ஊடகங்களுக்கு பல மில்லியன் டாலர்களை அளித்தார்.[38]
நூல்கள்
[தொகு]எழுதியவையும் இணைந்து எழுதியவையும்
[தொகு]- நிதிசார் சந்தைகளுக்கான புதிய உருமாதிரி: 2008ஆம் ஆண்டின் கடன் சிக்கல் மற்றும் அதன் பொருள் என்ன (பப்ளிக் அஃபேர்ஸ்,2008) ஐஎஸ்பிஎன் 0195167015
- நம்பகத்தன்மையற்ற காலம்: பயங்கரவாதத்தின் மீதான போரின் விளைவுகள், (பப்ளிக் அஃபேர்ஸ், 2006)ஐஎஸ்பிஎன் 1586483595
- மூவ்ஆன்.ஓஆர்ஜியுடன், உங்கள் நாட்டை நேசிப்பதற்கான மூவ்ஆனின் 50 வழிகள்: உங்கள் அரசியல் குரலைக் கண்டறிந்து, மாற்றமுண்டாக்கும் சக்தியாக மாறுவதெப்படி இன்னர் ஓஷன் பதிப்பகம், 2004 ஐஎஸ்பிஎன் 1-930722-29-எக்ஸ்
- அமெரிக்க உயர்தோற்றத்தின் நீர்க்குமிழ்: அமெரிக்க சக்தியின் தவறான பிரயோகத்தைச் சரி செய்தல் (பப்ளிக் அஃபேர்ஸ், 2003)ஐஎஸ்பிஎன் 1586482173 (காகித அட்டை;பப்ளிக் அஃபேர்ஸ்,2004; ஐஎஸ்பிஎன் 1-58648-292-0)
- உலகமயமாதல் பற்றி ஜார்ஸ் சொரெஸ் (பப்ளிக் அஃபேர்ஸ், 2002)ஐஎஸ்பிஎன் 1-58648-125-8 காகித அட்டை;பப்ளிக் அஃபேர்ஸ்,2004; ஐஎஸ்பிஎன் 1-52648-278-5)
- திறந்த சமுதாயம்: உலகார்ந்த முதலாளித்துவத்தைச் சீர்திருத்துதல் (பப்ளிக் அஃபேர்ஸ், 2001) ஐஎஸ்பிஎன் 1-58648-039-7
- மார்க் அமெடஸ் நோட்ட்ருனோவுடன், அறிவியலும் திறந்த சமுதாயமும்: கார்ல் பெப்பர் தத்துவத்தின் எதிர்காலம் (சென்ட்ரல் யூரோப்பியன் யூனிவர்சிடி பிரஸ், 2000) ஐஎஸ்பிஎன் 963-9116-69-6 (காகித அட்டை: சென்ட்ரல் யூரோப்பியன் யூனிவர்சிடி பிரஸ், 2000; ஐஎஸ்பிஎன் 943-9116-70-எக்ஸ்)
- உலகார்ந்த முதலாளித்துவத்தின் நெருக்கடி: திறந்த சமுதாயத்திற்கு ஆபத்து (பப்ளிக் அஃபேர்ஸ், 1998) ஐஎஸ்பிஎன் 1-891220-27-4
- சொரெஸ் பற்றி சொரெஸ்: வளைவிற்கு முன்னதாக வசித்திருத்தல் (ஜான் விலி, 1995) ஐஎஸ்பிஎன் 0-471-12014-6 (காகித அட்டை; விலி, 1995; ஐஎஸ்பிஎன் 0-371-11977-6)
- ஜனநாயகத்தை உறுதி செய்தல்: சோவியத்துக்களிலும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும் தடையற்ற தொழில் முனைவு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களை ஊக்குவித்தல் (ஃப்ரீ பிரஸ், 1991) ஐஎஸ்பிஎன் 0-02-930285-4 (காகித அட்டை; பப்ளிக் அஃபேர்ஸ், 2004; ஐஎஸ்பிஎன் 1-58948-227-0)
- சோவியத் அமைப்பைத் திறத்தல் (வெய்டென்ஃபெல்ட் மற்றும் நிக்கோல்சன், 1990) ஐஎஸ்பிஎன் 0-297-82155-9 (காகித அட்டை: பெர்சியஸ் புக்ஸ், 1996; ஐஎஸ்பிஎன் 0-8133-1205-1)
- நிதியின் ரசவாதம் (சைமன் மற்றும் ஸ்கஸ்டர், 1988) ஐஎஸ்பிஎன் 0-671-66338-4 (காகித அட்டை: விலி, 2003; ஐஎஸ்பிஎன் 0-471-44549-5)
வாழ்க்கை வரலாறுகள்
[தொகு]- சொரெஸ்: இரட்சக கோடீஸ்வரரின் வாழ்வும் காலங்களும் மைக்கேல் டி.காஃப்மேன் எழுதியது (ஆல்ஃப்ரெட் ஏ.நாஃப், 2002) ஐஎஸ்பிஎன் 0-375-40585-2
- சொரெஸ்: உலகின் மிகுந்த செல்வாக்கான முதலீட்டாளர் ராபர்ட் ஸ்லேட்டர் எழுதியது (மெக்கிரா-ஹில் ப்ரொஃபெஷனல், 2009) ஐஎஸ்பிஎன் 978-0-07-160844-2
இதழியல்
[தொகு]எழுதியவை
[தொகு]- ஜார்ஜ் சொரெஸ், "இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஏஐபிஏசி பற்றி", தி நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸ் , ஏப்ரல் 12, 2007.
- ஜார்ஜ் சொரெஸ், "அமெரிக்க உயர்தோற்றத்தின் நீர்க்குமிழி", தி கொரியா ஹெரால்ட் , மார்ச் 12, 2003.
- ஜார்ஜ் சொரெஸ், "அமெரிக்க உயர்தோற்றத்தின் நீர்க்குமிழி", தி அட்லாண்டிக் , டிசம்பர் 2003.
- ஜார்ஜ் சொரெஸ், அமெரிக்க உயர்தோற்றத்தின் நீர்க்குமிழி பரணிடப்பட்டது 2006-10-14 at the வந்தவழி இயந்திரம், அசிஸ்டிவ் மீடியா வழியாக குரோவர் கார்டனர் படித்த தி அட்லாண்டிக் கட்டுரையின் ஒலிப்பதிவு, 18 நிமிடங்கள்.
- ஜார்ஜ் சொரெஸ், "பிரேசில் பற்றி சொரெஸ்" பரணிடப்பட்டது 2005-04-15 at the வந்தவழி இயந்திரம், ஃபைனான்ஷியல் டைம்ஸ் , ஆகஸ்ட் 13, 2002.
- ஜார்ஜ் சொரெஸ், "இரஷ்யா மீதான கசப்பான எண்ணங்களுடன் நம்பிக்கை", மாஸ்கோவ்ஸ்கியே நோவோஸ்டி (மாஸ்கோ நியூஸ் ), இரஷ்ய மொழியிலிருந்து ஓல்கா க்ரையாஜெயா மொழிபெயர்த்தது, ஃபிப்ரவரி 27, 2000.
- ஜார்ஜ் சொரெஸ், "முதலாளித்துவ அச்சுறுத்தல்" பரணிடப்பட்டது 2010-04-28 at the வந்தவழி இயந்திரம், தி அட்லாண்டிக் மன்த்லி , ஃபிப்ரவரி 1997.
- ஜார்ஜ் சொரெஸ், "எழுதப்படாத காசோலைக்கான அனுமதியை பால்சனுக்கு அளிக்க இயலாது", ஃபைனான்ஷியல் டைம்ஸ் , செப்டம்பர் 24, 2008
இவரைப் பற்றி
[தொகு]- ஸ்டீஃபன் ஆடம்ஸ் "கோபமுற்ற ஜார்ஸ்" பரணிடப்பட்டது 2005-10-06 at the வந்தவழி இயந்திரம் கோட்பாடுகள் மற்றும் கலாசாரத்தில் குடிமகன்-குடும்பம் தொடர்பான விடயங்கள்.
- ஜான் ஆதர்ஸ், புத்தக மறுஆய்வு பரணிடப்பட்டது 2015-04-18 at the வந்தவழி இயந்திரம், "சந்தையின் வெற்றிகரமான தீர்க்கதரிசி", ஃபைனான்ஷியல் டைம்ஸ், மே 19, 2008.
- லாரா ப்ளூம்ஃபீல்ட், புஷ் மீது கோடீஸ்வரர் சொரெஸ் தாக்குதல் பரணிடப்பட்டது 2005-11-27 at the வந்தவழி இயந்திரம் , எம்எஸ்என்பிசி, நவம்பர் 11, 2003
- கோனி ப்ரக், சொரெஸின் நியூ யார்க் குறிப்பின் சாரம் "சொரெஸ் கருத்தில் உலகம்", தி நியூ யார்க்கர், ஜனவரி 23, 1995
- நெயில் கிளார்க் கிழக்கு ஐரோப்பாவில் சொரெஸின் பங்கு பற்றிய பகுப்பாய்வு பரணிடப்பட்டது 2005-06-24 at the வந்தவழி இயந்திரம் "நியூ ஸ்டேஸ்மேனி"லிருந்து.
- மால்கம் கிளாட்வெல், "ஊதி உடைத்தல்," நியூ யார்க்கர் மேகசீன், ஏப்ரல்l 22 மற்றும் 29, 2002, கிளாட்வெல்.காம்-இல்.
- ஜான் ஹோர்வத் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சொரெஸ் விளைவு பரணிடப்பட்டது 2004-10-14 at the வந்தவழி இயந்திரம்
- மாட் வெல்ச், 'திறந்த சமுதாய'த்தின் மீதான திறந்த பருவம்: பொதுவுடமைக்கு எதிரான, அழிவிலிருந்து உயிர் பிழைத்தவர் ஏன் சமவுடமை யூத சுய வெறுப்பாளராக பைசாசம் போன்று சித்தரிக்கப்படுகிறார் பரணிடப்பட்டது 2005-07-20 at the வந்தவழி இயந்திரம் ரீஸன் மேகசீன், டிசம்பர் 8, 2003
- மார்ட்டின் பெர்ட்ஜ், "டைரன்-ஏ-சொரெஸ்: அரசர் ஜார்ஜின் பித்து," தி நியூ ரிபப்ளிக், ஃபிப்ரவரி 12, 2007.
- டைமின் மிகுந்த செல்வாக்குள்ள 25 அமெரிக்கர்கள், டைம் மேகசீன் ஏப்ரல் 21, 1997 பரணிடப்பட்டது 2010-07-10 at the வந்தவழி இயந்திரம். அணுக்கம்செய்யப்பட்டது மே 11, 2007.
- தி டைம் 100, அதிகாரம் அளிப்பவர்கள், ஜார்ஜ் சொரெஸ், டைம் மேகசீன் மே 14, 2007 பரணிடப்பட்டது 2010-12-05 at the வந்தவழி இயந்திரம் அணுக்கம் செய்யப்பட்டது மே 21, 2007.
கல்விசார் நோக்குகள்
[தொகு]சொற்பொழிவுகள்
[தொகு]- துணை-விசாரணைக் குழுவிற்கு முன்பாக ஜார்ஜ் சொரெஸ் வாக்கு மூலம், செப்டம்பர் 15, 1998
- எதிர்வு கருத்தாக்கம்: 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று உலகப் பொருளாதாரத்தின் எம்ஐடி பொருளாதாரத் துறையில் வழங்கப்பெற்றது.
- "இயல்பு மற்றும் சமூக அறிவியல்களுக்கு இடையிலான வேறுபாடுகள்: நம்பகத்தன்மையின்மையின் மறைமுகக் குறிப்புகள்" ஐஐஎஸ்சி பெங்களூருவில் 2007வது வருடம் ஜனவரி 5 அன்று வழங்கப்பட்டது.
- George Soros introduced by Lajos Bokros.George Soros Lecture on the Global Financial Crisis On November 11, 1 hour 16 minutes.Budapest, Hungary:CEU Business School.
- எஃப்டிசி அட்வான்ஸ்ட் ரூல்மேக்கிங் மற்றும் ஆயில் மார்க்கெட் மேனிபுலேஷன் குறித்து விசாரித்த யூ.எஸ்.வணிகக் குழுவிற்கு முன்பாக வழங்கப்பட்ட வாக்குமூலம்[39]
விளக்கவுரைகள்
[தொகு]- செயல்முறை ஆட்சிக் குழுவிற்கான ஜார்ஜ் சொரெஸ்' ஓபி/ஈடி விளக்கவுரைகள்
நேர்காணல்கள்
[தொகு]- ஜிபிஎஸ்சில் பொருளாதார நெருக்கடி பற்றி ஜார்ஜ் சொரெஸுடன் ஃபரீட் ஜகாரியா விவாதிக்கிறார்.
- தி லியோனார்ட் லோபெட் ஷோ (டபிள்யூஎன்ஒய்சி)- ஒலி ஆவணக்களரி: "சுதந்திரம் பற்றி ஜார்ஜ் சொரெஸ்"
- ஃப்ரண்ட்லைன்: வீழ்ச்சி: நேர்காணல்கள்: ஜார்ஸ் சொரெஸ்
- ஃபார்ச்சூனுடன் வால் மற்றும் ட்ரீட் வீக் தொலைக் காட்சி நிரல்| பிபீஎஸ்
- சவால்: சர்வதேச நிதி நெருக்கடி- சர்வதேச..... பரணிடப்பட்டது 2010-12-31 at the வந்தவழி இயந்திரம்
- இப்போது பில் மூவர்ஸுடன்
எழுத்துப்படி டேவிட் பிராங்காசியோ .....
- பிரயான் லாம்பை நூற்குறிப்புகளுடன் நேர்காண்கிறார். பரணிடப்பட்டது 2005-09-02 at the வந்தவழி இயந்திரம்
உடன் வரும் ஒளிக்காட்சியுடன் எழுத்துப்படி. பரணிடப்பட்டது 2005-09-02 at the வந்தவழி இயந்திரம்
- ராக்கெட்பூம்: நம்பகத்தன்மை இழப்புக் காலம் (ஒளிக்காட்சி, 2006) பரணிடப்பட்டது 2006-07-03 at the வந்தவழி இயந்திரம்
- கூகிள் ஒளிக்காட்சி: எரிக் ஸ்கெமிட், கூகிள் முதன்மை அதிகாரி ஜார்ஜ் சொரெஸை நேர்காண்கிறார் (ஒளிக்காட்சி, 2006) பரணிடப்பட்டது 2006-10-20 at the வந்தவழி இயந்திரம்
- 2006ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று நெயில் கௌடோ உடன் பாக்ஸ் நியூஸ் நேர்காணல் ஒளிக்காட்சியும் உரையும், 2007ஆம் ஆண்டு மே 25 அன்று அணுகப்பெற்றது.
- ஜார்ஜ் சொரெஸுடனான நேர்காணல், செப்டம்பர் 5, 2000. பரணிடப்பட்டது 2010-06-19 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Forbes World's Billionaires -#35 George Soros, Forbes, March 10, 2009
- ↑ Kaufman, Michael T., Soros: The Life and Times of a Messianic Billionaire, Alfred A. Knopf: 2002, 133.
- ↑ Greenwald, Glenn (October 20, 2010). "George Soros' 'foreign' money". Salon இம் மூலத்தில் இருந்து December 22, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222121648/http://www.salon.com/2010/10/20/soros_5/.
- ↑ Weiss, Gary; Schares, Gail E.; Smith, Geri; Dwyer, Paul; Sandler, Neal; Pennar, Karen (August 22, 1993). "The Man Who Moves Markets". Bloomberg Businessweek இம் மூலத்தில் இருந்து December 22, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222133546/http://www.bloomberg.com/bw/stories/1993-08-22/the-man-who-moves-markets.
- ↑ "George Soros". Forbes.com. Archived from the original on March 2, 2020. Retrieved June 25, 2021.
- ↑ "George Soros". Open Society Foundations (in ஆங்கிலம்). Archived from the original on October 16, 2012. Retrieved December 13, 2018.
- ↑ Wang, Jennifer. "The New Forbes Philanthropy Score: How We Ranked Each Forbes 400 Billionaire Based On Their Giving". Forbes.
- ↑ 8.0 8.1 "North American Advisory Board". lse.ac.uk. Archived from the original on January 26, 2017. Retrieved July 20, 2015.
Mr George Soros (BSc Philosophy 1951, MSc Philosophy 1954) Chairman, Soros Fund Management
- ↑ Niall Ferguson; Schlefer, Jonathan (September 9, 2009). "Who Broke the Bank of England?". Harvard Business School BGIE Unit Case No. 709-026.
- ↑ Open Society Foundations (October 11, 2010), George Soros Lecture Series: Financial Markets, archived from the original on January 19, 2017, retrieved February 2, 2017
- ↑ Shawcross, William (September 1, 1997). "Turning Dollars into Change" பரணிடப்பட்டது மே 8, 2010 at the வந்தவழி இயந்திரம். Time.
- ↑ "Philanthropy vs. Tyranny: Inside the Open Society Foundations' Biggest Battle Yet". Inside Philanthropy. August 17, 2017. Archived from the original on December 13, 2019. Retrieved November 14, 2019.
- ↑ Murphy, Brendan (July 1993). "Finance: The Unifying Theme". The Atlantic. பன்னாட்டுத் தர தொடர் எண்:1072-7825. https://www.theatlantic.com/magazine/archive/1993/07/finance-the-unifying-theme/5148/. பார்த்த நாள்: March 7, 2017.
- ↑ .
- ↑ Slater, Robert (January 18, 2009). Soros: The Life, Ideas, and Impact of the World's Most Influential Investor (in ஆங்கிலம்). McGraw Hill Professional. p. 30. ISBN 9780071608459. Archived from the original on January 26, 2020. Retrieved November 16, 2016.
- ↑ 16.0 16.1 Mayer, Jane (October 18, 2004). "The Money Man: Can George Soros's millions insure the defeat of President Bush?". The New Yorker. Archived from the original on July 12, 2012. Retrieved May 27, 2012.
- ↑ Kaufman, Michael T. (2002). Soros: The Life and Times of a Messianic Billionaire. Alfred A. Knopf. p. 11.
- ↑ Soros, George (2008). The New Paradigm for Financial Markets: The Credit Crisis of 2008 and What It Means. PublicAffairs. p. 13. ISBN 978-1-58648-683-9.
Tivadar.
- ↑ Soros, Tivadar; Tonkin, Humphrey (2001). Masquerade: Dancing Around Death in Nazi-occupied Hungary (in ஆங்கிலம்). Arcade Publishing. pp. 220, Afterword by Humphrey Tonkin. ISBN 9781559705813. Retrieved November 16, 2016.
- ↑ Zepetnek, Steven Tötösy de (2009). Comparative Central European Holocaust Studies (in ஆங்கிலம்). Purdue University Press. p. 9. ISBN 9781557535269. Archived from the original on January 27, 2017. Retrieved November 16, 2016.
- ↑ "Holocaust Encyclopedia". Ushmm.org. Archived from the original on February 13, 2010. Retrieved October 16, 2009.
- ↑ Kaufman, Michael T. (2002). Soros: The Life and Times of a Messianic Billionaire (in ஆங்கிலம்). Knopf. p. 5. ISBN 9780375405853. Archived from the original on January 27, 2017. Retrieved November 16, 2016.
- ↑ Kaufman, Michael T. (2002). Soros: The Life and Times of a Messianic Billionaire (in ஆங்கிலம்). Knopf. p. 37. ISBN 9780375405853. Archived from the original on January 27, 2017. Retrieved November 16, 2016.
- ↑ Kaufman, Michael T. (29 September 2010). "Family Values". Soros: The Life and Times of a Messianic Billionaire. Knopf Doubleday Publishing. p. 40. ISBN 978-0-307-76592-5.
- ↑ 25.0 25.1 Ellis, Charles D. (2001). Wall Street People: True Stories of Today's Masters and Moguls (in ஆங்கிலம்). New York: John Wiley & Sons. p. 112. ISBN 0-471-23809-0.
- ↑ Official Biography பரணிடப்பட்டது நவம்பர் 22, 2010 at the வந்தவழி இயந்திரம், retrieved March 2, 2011.
- ↑ 27.0 27.1 All Things Considered (August 11, 2009). "Soros Uses Leverage To Aid New York Children". NPR. Archived from the original on September 17, 2009. Retrieved October 16, 2009. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "NPR090409" defined multiple times with different content - ↑ Philip Delves Broughton, The billionaire taking on the Brexiteers பரணிடப்பட்டது மார்ச் 23, 2018 at the வந்தவழி இயந்திரம், Belfast Telegraph, February 10, 2018
- ↑ Consequences of the War on Terror பரணிடப்பட்டது சனவரி 29, 2012 at the வந்தவழி இயந்திரம் September 20, 2006, Los Angeles World Affairs Council. Retrieved December 7, 2011.
- ↑ Arnold, Glen (2012). The Great Investors: Lessons on Investing from Master Traders. United Kingdom: Pearson. p. 416. ISBN 9780273743385.
- ↑ 31.0 31.1 Soros, George; Koenen, Krisztina; Wien, Byron (1995). Soros on Soros: Staying Ahead of the Curve. New York: J. Wiley. p. 326. ISBN 9780471119777.
- ↑ Soros, George; Schmitz, Gregor Peter (March 11, 2014). The Tragedy of the European Union: Disintegration or Revival? (in ஆங்கிலம்). New York: PublicAffairs. ISBN 978-1-61039-422-2.
- ↑ Soros, George (2013). "Fallibility, reflexivity, and the human uncertainty principle". Journal of Economic Methodology 20 (4): 309–329. doi:10.1080/1350178x.2013.859415. பன்னாட்டுத் தர தொடர் எண்:1350-178X.
- ↑ Soros, George (2008). The New Paradigm for Financial Markets. New York: Public Affairs. ISBN 978-1-58648-683-9.
- ↑ Koven, Steven G.; Götzke, Frank (2010). American immigration policy confronting the nation's challenges (1 ed.). New York: Springer Science & Business Media. p. 89. ISBN 978-0-387-95940-5.
- ↑ "George Soros Part One: Early Career". NexChange. Archived from the original on September 10, 2018. Retrieved September 9, 2018. Originally published in ValueWalk.com in August 2016.
- ↑ "New Alliance of Democrats Spreads Funding". The Washington Post இம் மூலத்தில் இருந்து October 1, 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061001075131/http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/07/16/AR2006071600882_pf.html.
- ↑ Clark, Neil. "Soros Profile". the New Statesman. Archived from the original on September 30, 2007. Retrieved June 6, 2007.
- ↑ "The Perilous Price of Oil — The New York Review of Books". Nybooks.com. September 25, 2008. Retrieved October 16, 2009.
புற இணைப்புகள்
[தொகு]- ஜார்ஜ் சொரெஸின் அதிகாரபூர்வமான வலைத்தளமும் வலைப்பூவும்
- திறந்த சமுதாய நிறுவனமும் சொரெஸ் அறக்கட்டளை வலைப்பின்னலும்
- சொரெஸ் நிதி மேலாண்மை 13எஃப் நிரப்புதலும் நிதிசார் நடவடிக்கைகளும் பரணிடப்பட்டது 2010-06-12 at the வந்தவழி இயந்திரம்
- ஜார்ஜ் சொரெஸின் மற்றும் அவர் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் பட்டியல் பரணிடப்பட்டது 2000-05-16 at the வந்தவழி இயந்திரம்
- ஜார்ஜ் சொரெஸின் அரசியல் பிரசார பங்களிப்புகள்
- ஃபோர்ப்ஸ்.காம்: ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க மிகு செல்வந்தர்கள் பரணிடப்பட்டது 2012-05-05 at the வந்தவழி இயந்திரம்
- எஸ்ஈசி தாக்கல்களில் ஜார்ஜ் சொரெஸ்
- நிதி மனிதன்- நியூ யார்க்கர்
- புதிய செயல் திட்டத்தைப் பற்றிய ஒரு ஆழ்ந்த மறு ஆய்வு
- சொரெஸ் ஆவணக்களரி தி நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக் ஸிலிருந்து