சிறுநிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிற்றளவுப் பொருளுதவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கம்போடியா நாட்டு சமூக அடிப்படையிலான சேமிப்பு வங்கி. ஏழை மக்களுக்கு உதவும் நிதி நிறுவனங்கள் எண்ணற்ற வகைகளில் உள்ளன.

சிற்றளவுப் பொருளுதவி என்பது நுகர்வோர் மற்றும் சுயதொழில் செய்வோர், குறிப்பாக வங்கிகள் மற்றும் தொடர்பான சேவைகளுக்கு அணுகல் அற்றவர்கள் மற்றும் குறைவான வருமானமுடைய மக்களுக்கான பொருளாதாரச் சேவையாகும்.

விளக்கமாகக் கூறுவதனால், இது,“ஏழை மக்கள் மற்றும் ஏழ்மை நிலைக்கு அருகாமையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு முடிந்த அளவு கடன் மட்டும் அல்லாது சேமிப்பு, காப்பீடு மற்றும் பணப் பரிமாற்றம் ஆகியவற்றையும் உள்ளிட்ட நிரந்தரமான, தரமான நிதிச் சேவைகளுக்கான அணுகல் கிடைக்கப் பெறும் நிலையை அடையச் செய்வது" என்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு இயக்கம்.[1]

சிற்றளவுப் பொருளுதவியில் ஈடுபட்டோர், இத்தகைய அணுகலை ஏழைகளுக்கு அளிப்பது அவர்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கும் என்று நம்புகின்றனர்.

சவால்[தொகு]

பாரம்பரியமாக,வங்கிகள் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் வருமானம் அற்றவர்களுக்கும் எந்த விதமான பொருளாதார உதவியும் வழங்குவதில்லை. ஒரு வாடிக்கையாளரின் கணக்கை நிர்வக்கிக்க வங்கிக்கு கணிசமான செலவு ஏற்படுகிறது, அந்தக் கணக்கில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிதியின் அளவு எத்தனை சிறியதாக இருப்பினும், வங்கிக்கான இந்தச் செலவில் மாற்றமிருக்காது. உதாரணமாக, ஒருவருக்கு $100,000 டாலர்கள் கடன் வழங்குவது மற்றும் 100 பேருக்கு $1000 டாலர்கள் கடன் வழங்குவது ஆகிய இரண்டிற்கும் இடையே வங்கியின் வருமானத்தைப் பொறுத்த அளவில் பெரும் மாற்றம் ஏதும் கிடையாது. ஆனால், கடனுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் இருக்கும் நிலையான செலவு -அது எந்த அளவுக் கடனாக இருப்பினும்- கணிசமானதாகும். இவற்றில் கடன் கோருபவரின் திருப்பித் தரும் சக்தியை அளவிடுவது, அவர்கள் பாதுகாப்பீடாகத் தரக் கூடியது, மீதமுள்ள கடனை நிர்வகிப்பது, வாராக் கடன்களை வசூலிப்பது ஆகியவை அடங்கும். வங்கிகள் ஈடுபடும் கடனளிப்பது அல்லது சேமிப்புத் தொகை பெறுவது ஆகிய ஒவ்வொரு நிதிப் பரிமாற்றத்திற்கும் லாபம்-நட்டம் இரண்டுமற்ற ஒரு இடைவரு நிலை (break-even) என்னும் ஒரு நிலை உண்டு. அதற்குக் கீழானவை அந்த வங்கிக்கு நட்டம் ஏற்படுத்துவதாகிவிடும். ஏழைகளுக்கு வழங்கப்படும் கடனுதவி பொதுவாக இதன் கீழ் வருவதாக அமைகிறது.

மேலும், வங்கிக்குத் தரக்கூடியதான இணைக் காப்புறுதி collateral security சொத்துக்கள் ஏழைகளிடம் இருக்கக் கூடியதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. வளரும் நாடுகளில் இத்தகையோர் நிலங்களை தங்கள் வசம் வைத்திருப்பினும், அவற்றிற்கான உரிமைப் பத்திரங்கள் அவர்களிடம் இருப்பதில்லை என்று ஹெர்னான்டோ டே சோடோ மற்றும் பலர் விரிவாக அளித்துள்ள பல ஆவணங்களிலிருந்து இது தெரியவருகிறது.[2] இதன் பொருளாவது, கடனாளிகள் தவணைகளைச் செலுத்த தவறுகையில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட கடனைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் வங்கியின் கைவசம் மிகக் குறைவே என்பதாகும்.

இதை இன்னும் விரிவாகப் பார்க்கையில் பல காலம் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு விளங்கும். ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அந்த நாட்டின் நிதிசார் அமைப்புகள் செயலூக்கிகளாக இருத்தல் வேண்டும். (எடுத்துக்காட்ட்டு அலெக்ஸாண்டர் கெர்ஷெங்க்ரோன் , பால் ரோஸன்ஸ்டீன்-ரோடன், ஜோசப் ஸ்கம்பிடர், ஆன் க்ருயிகெர் ஆகியோரின் நூல்களைப் பார்க்கவும்)

இருப்பினும், இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில், பல பொருளாதாரத் திட்ட அமைப்பாளர்களும், நிபுணர்களும் தமது நாட்டின் நிதிசார் சேவைகளை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலவும் தோல்வியடைந்துள்ளன. இதற்கான காரணங்களை, ஆடம்ஸ், க்ரஹாம் & வோன் பிஸ்ச்க் ஆகியோர் எழுதிய மிகவும் பிரபலமான நூலான, 'கிராமப்புற வளர்ச்சியைக் குறைக்கும் விலை குறைவான கடன்கள்' என்னும் நூலில் காணலாம்.[3]

இக்காரணங்களினால், ஏழை எளிய மக்கள் கடன் வாங்கும் போது அவர்கள் அதிக அளவில் தமது உறவினர்கள் அல்லது உள்ளுர் வட்டிக்காரர் கள் ஆகியோரையே சார்ந்திருக்க நேர்கிறது. இவர்கள் வசூலிக்கும் வட்டி விகிதம் மிகவும் அதிகமானது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள 14 நாடுகளில் நடத்தப்பட்ட 28 ஆய்வுகளின் மீதான மறு ஆய்வில், முறைப்படுத்தப்படாத வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் 76% வட்டி விகிதங்கள் மாதத்திற்கு 10%க்கும், மாதம் 100%க்கும் அதிகமான 22% உள்ளிட்டு, அதிகமாக இருப்பதாக முடிவுரைத்தது. பொதுவாக, இத்தகைய வட்டிக் காரர்கள், சுமாரான ஏழைகளை விட மிகவும் வறியவர்களிடம் அதிக வட்டி வசூலிக்கிறார்கள்.[4] இத்தகைய வட்டிக்காரர்கள் அரக்கர்கள் என்றும், கந்து வட்டிக்காரர் கள் என்னும் குற்றம் சாட்டப்பட்டாலும், இவர்கள் அளிக்கும் சேவைகள் சௌகரியமானதாகவும், விரைவானதாகவும் உள்ளது; மேலும், கடனாளிகள் பிரச்சினைகளில் சிக்கும்போது, இவர்களின் அணுகுமுறை நெகிழ்வுத்தன்மை உள்ளதாக அமைகிறது. இவர்களை வட்டித் தொழிலிலிருந்து அகற்றுவது அசாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சிற்றளவுப் பொருளுதவி அளிக்கும் நிறுவனங்கள் சிறந்த முறையில் செயல்படும் இடங்களுக்கும் இது பொருந்தும்.[சான்று தேவை]

கடந்த பல நூற்றாண்டுகளாக, யதார்த்த குறிக்கோட்பாளர்களான, சமூகம் சார்ந்த அடகுக் கடை களை நிறுவிய பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஃப்ரான்சிஸ்கான் துறவிகள் தொடங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய கடனாளர் கூட்டுறவு நிறுவனர்கள் மற்றும் 1970ஆம் வருடம் சிற்றளவுப் பொருளுதவி என்னும் இயக்கத்தை நிறுவியவர்களான (ஃபிரெடரிக் வில்ஹெல்ம் ராய்ஃபெய்சென் மற்றும் முகம்மது யூனுஸ் போன்றவர்கள்) வரையிலும், அனைவரும் பல்வேறு முறைமைகளை சோதனை செய்து, ஏழைகளின் வாசலுக்கே நிதிசார் சேவைகளைக் கொண்டு சென்று அவர்கள் வாழ்க்கைக்கான வாய்ப்புக்களை அளிப்பதும், அதே சமயம் கடனுக்கான ஆபத்தைக் குறைப்பதுமான முறைமைகளைக் கொண்ட நிறுவனங்களை வடிவமைத்துள்ளனர்.[5] (தற்போது பங்களாதேஷில் ஏழு மில்லியன் ஏழைப் பெண்களுக்கு சேவை அளித்து வரும்) க்ராமீன் வங்கி யின் வெற்றி உலகம் முழமைக்கும் தூண்டுகோலாக விளங்கினாலும், அதன் வெற்றியைப் பிரதியெடுப்பது என்பது நடைமுறையில் கடினமானதாகவே உள்ளது. மக்கள் தொகையைக் குறைவாகக் கொண்ட நாடுகளில், அண்டை அயலில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் சிறு அளவிலான வங்கிக் கிளைகளை இயக்குவதற்கான செலவைச் சந்திப்பது என்பது சவாலாகவே உள்ளது.

பெரும் அளவில் முன்னேற்றம் காணப்படினும், பிரச்சினை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களைப் பெரும்பான்மையாக கொண்டுள்ளவர்கள், குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில், முறைப்படுத்தப்பட்ட நிதிசார் சேவைக்கான அணுகலைப் பெறுவது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்றாகவே உள்ளது. தற்போது $25 பில்லியன் நிதி சிற்றளவு பொருளுதவிக் கடனில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சிற்றளவு பொருளுதவித் துறையானது வேகமாக வளர்ந்து வருகிறது.[6] நிதியுதவி தேவைப்படும் அனைத்து ஏழைகளுக்கும் உதவி செய்வதற்கு இன்னும் $250 பில்லியன் மூலதனம் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[6]

இத்தொழில்துறை விரைவாக முன்னேறி வருகிறது. இதனால், இந்தத் துறையில் பெருகி வரும் முதலீட்டைச் சரியான முறையில் நிர்வகிக்கவில்லை என்றால், அது ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் விளையக் கூடும் என்ற கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.[7]

வரம்புகளும் கோட்பாடுகளும்[தொகு]

ஒரு கோட்பாடு என்ற முறையில் பார்க்கும்போது, சிற்றளவுப் பொருளுதவி என்பது, தற்சமயம் ஏழைகள் பயன்படுத்துகிற கடனுதவிகளை மேம்படுத்தும் முறைகள் மற்றும் கடனுதவிக்கான அணுகலைப் பரவலாக்குவது ஆகியவற்றிற்கான முயற்சிகளை உள்ளடக்கியதாகும். உதாரணமாக, வறியவர்கள் முறைப்படுத்தப்படாத வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி தனிமுறை சார்ந்த சேகரிப்பாளர்களிடம் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் அறக் கட்டளைகளிலிருந்து கடன் மற்றும் நன்கொடை பெறுகிறார்கள். அரசாங்க நிறுவங்களிலிருந்து காப்பீடு பெறுகிறார்கள்.

(ஹவாலா போன்ற) பரிவர்த்தனைகளின் வழியாக வரும் பணத்தைப் பெறுகிறார்கள். சிற்றளவுப் பொருளுதவியை அதையொத்த நடவடிக்கைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் கோடுகள் பிரகாசமானவையாக இல்லை. அரசாங்கமானது, அரசு சார்ந்த வங்கிகளை ஏழை நுகர்வோருக்காக பல இடங்களிலும் கிளைகளைத் திறக்கச் சொல்லி உத்திரவிடுகிறது; அல்லது கந்து வட்டி க்காரர்களை தடை செய்கிறது; அல்லது சிற்றளவுப் பொருளுதவியில் ஈடுபடும் லாப நோக்கில்லாத சிறு நிறுவன குழும ங்களை நடத்துகிறது என்றெல்லாம் கூறலாம். மேலும், அணுகலில் உள்ள பிரச்சினைக்கான தீர்வு அவர்கள் அணுகக் கூடிய வகையில் அதிக அளவில் நிதி நிறுவனங்களைத் திறப்பது மட்டும் அல்லாமல் அவற்றின் கடன் வழங்கும் சக்தியையும் அதிகரிப்பதாகும். சமீப வருடங்களில் இத்தகைய நிறுவனங்கள் எத்தகைய முயற்சிகளுக்குக் கடன் வழங்கலாம் என்பதன் வரம்பை அதிகரிப்பதில் அழுத்தம் காட்டப்பட்டு வருகிறது, காரணம் பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

2004ஆம் வருடம் ஏழைகளின் உதவிக்காக ஆலோசனை வழங்கும் குழு (கன்சுலேடிவ் க்ரூப் டு அசிஸ்ட் தி புவர் -சிஜிஏபி) ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கான கோட்பாடுகளை சுருக்கமாக எடுத்துரைத்தது. 2004வது வருடம் ஜூன் 10ம் தேதியன்று நிகழ்ந்த எட்டு தலைமைகளின் குழுமம் எனப்படும் ஜி8 சம்மிட்டும் ஒப்புதலையும் இது பெற்றது.[5]

  1. ஏழை மக்களுக்கான தேவை கடனுதவி மட்டுமே அல்ல; சேமிப்பு, காப்பீடு மற்றும் பணப் பரிமாற்றம் தொடர்பான சேவைகளும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன.
  2. சிற்றளவுப் பொருளுதவி வறுமை சூழ்ந்த இல்லங்களில், அவர்கள் தம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும், சொத்துக்களைக் கட்டமைக்கவும், மற்றும்/ அல்லது வெளிப்புற அதிர்ச்சிகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் உதவியாக இருத்தல் வேண்டும்.
  3. சிற்றளவுப் பொருளுதவி தனக்குத் தானே உதவிக் கொள்ளக் கூடியது.[8] அரசாங்கம் மற்றும் கொடையாளிகள் அளிக்கும் மானியங்கள் பெரும் அளவில் ஏழைகளைச் சென்றடைய முடியாத வகையில் மிகவும் குறைவாகவும், நிலையில்லாத தன்மை கொண்டிருப்பதாலும், சிற்றளவுப் பொருளுதவி தனக்குத் தானே உதவிக் கொள்ளும் முறைமையில் அமைய வேண்டும்.
  4. சிற்றளவுப் பொருளுதவி என்பதன் பொருள் உள்ளூர் சார்ந்த நிறுவனங்களை நிரந்தரமாகக் கட்டமைப்பதாகும்.
  5. சிற்றளவுப் பொருளுதவி என்பதற்குப் பொருள் ஏழைகளுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை, நாட்டின் பிரதானமான நிதி நிலைமையுடன் ஒருங்கிணைப்பதும் ஆகும்.
  6. "ஒரு அரசாங்கத்தின் பணி நிதிசார் சேவைகளை முனைப்படுத்துவதுதானே தவிர அவற்றை அளிப்பது அல்ல."[9]# "கொடையாளர் அளிக்கும் நிதிகள் தனியார் மூல தனத்திற்கு இணைநிறைவாக இருக்க வேண்டுமே தவிர அவற்றுடன் போட்டி போடுவதாக அமையக் கூடாது."[9]
  7. "இதில் மிகப் பிரதானமான சிக்கல், வலுவான நிறுவனங்களும், அவற்றிற்கான மேலாளர்களும் இல்லாமையே."[9] கொடையாளர்கள் கொள்ளளவுக் கட்டுமானத்தை பெருக்குவதில் முனைய வேண்டும்.
  8. சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்கள் தம் செலவை ஈடுகட்ட முடியாத வகையில் வட்டி விகிதங்களின் வரம்புகள் இருப்பது, ஏழை மக்களுக்கு கடனுதவி கிடைக்காதவாறு செய்து அவர்களுக்கு தீங்கிழைக்கிறது.
  9. சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்கள் நிதி மற்றும் சமூகம் சார்ந்த தமது செயல்பாடுகளை மதிப்பீடு செய்து அவற்றை வெளிப்படுத்தவும் வேண்டும்.

சிற்றளவுப் பொருளுதவி என்பதைக் கொடை என்பதிலிருந்து வேறுபடுத்தலாம். மிகவும் நிராதரவான நிலையில் உள்ள குடும்பங்களுக்கு கொடையளிக்கலாம். ஏனெனில், அவர்கள் கடனைத் திருப்பித் தரும் அளவிற்கு வருமானத்தை உருவாக்கும் சக்தியற்றவர்களாக இருப்பார்கள். உதாரணமாக, இத்தகைய நிலை போர் நிகழும் இடத்திலோ அல்லது ஒரு இயற்கைச் சீற்றத்திற்குப் பிறகோ ஏற்படக் கூடும்.

வரம்புகள் பற்றிய வாதங்கள்[தொகு]

சிற்றளவுப் பொருளுதவியின் வரம்புகள் பற்றிய பிரதானமான வாதப் பிரதிவாதங்கள் பல உள்ளன.

சிற்றளவுப் பொருளுதவியின் கொடைப் பிரிவைச் சார்ந்த செயலாளர்களும் கொடையாளர்களும் ஒரு சிறு நிறுவன த்தைத் தொடங்குவது அல்லது விரிவு படுத்துவது போன்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு மட்டுமே சிற்றளவுக் கடனுதவி என்பதாக வரையறுக்க வேண்டுமென வாதிடுகின்றனர். தனியார் துறையைச் சார்ந்தவர்களோ, பணம் என்பது ஒரு மாற்றுப் பொருள் என்றிருப்பதால், அத்தகைய வரம்பை செயலாக்குவது என்பது இயலாத செயல் என்று பதிலிறுக்கின்றனர். மேலும், ஏழைகள் தங்கள் பணத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்பதைப் பணம் படைத்தவர்கள் தீர்மானிக்கக் கூடாது என்றும் கூறுகின்றனர்.

ஒரு வேளை, கந்து வட்டி பற்றிய மேற்கத்திய கருத்துக்களின் தாக்கம் வட்டிக்குப் பணம் கொடுப்பவரின் பங்கு, குறிப்பாக நவீன சிற்றளவுப் பொருளுதவியின் ஆரம்ப காலங்களில், மிகவும் விமர்சனத்துக்கு உள்ளானதன் காரணமாக இருக்கலாம். சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்களிலிருந்து மேலும் மேலும் பல ஏழைகள் கடனுதவிக்கான அணுகலைப் பெற்றாலும், வட்டிக்குப் பணம் கொடுப்பவரின் சேவையானது தொடர்ந்து மதிப்பு பெற்று வந்தது என்பது தெளிவாகியது. கடனுதவி விரைவாகக் கிடைப்பது, ரகசியத்தன்மை மற்றும் வசதிப்படுகிற முறையில் திரும்பக் கொடுக்கக் கூடிய காலக் கெடு ஆகியவற்றின் காரணமாக கடனாளிகள் அதிக வட்டி கொடுக்கவும் தயாராக இருந்தனர். கூட்டங்களுக்குச் செல்வதற்கான செலவு, கடனுதவி பெறுவதற்காக தகுதி பெற பயிற்சி முகாம்களுக்குச் செல்வது அல்லது மாதாந்திர இணைப்புப் பங்காக பணம் செலுத்துவது ஆகியவற்றிற்கான செலவுடன் ஒப்பிடுகையில், குறைந்த வட்டி என்பது அவர்களுக்கு போதுமான அளவு இழப்பீடாகத் தெரியவில்லை. மேலும் இதர (பள்ளிக்குப் பணம் கட்டுவது, மருத்துவ செலவுகள் மற்றும் குடும்பத்திற்கான உணவு ஆகிய) தேவைகளுக்காக கடன் வாங்கும்பொழுது, ஏதோ தொழில் தொடங்கப் போவதாகப் பாசாங்கு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தையும் அவர்கள் ரசிக்கவில்லை.[10] சமீப காலத்தியதான உள்ளீடான நிதி அமைப்புக்கள் (கீழே உள்ள பகுதியைப் பார்க்கவும்) வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை சட்ட பூர்வமாக்கவும், அவர்களை முறைப்படுத்தி அவர்களிடையே போட்டியை உருவாக்கி, அதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களைப் பெருக்க வேண்டும் என்று வாதிடுகிறது.

நவீன சிற்றளவுப் பொருளுதவியானது 1970வது வருடம், தனியார் துறை சார்ந்த தீர்வுகளை உருவாக்கும் ஒரு பிரதான நோக்குடன் உருவானது. வளரும் நாடுகளில் அரசாங்கம் சார்ந்த விவசாய மேம்பாட்டு வங்கிகள், தமக்கான மேம்பாட்டு இலக்குகளைக் குறைத்து மதிப்பிட்டதனால் மிகப் பெரும் தோல்வி அடைந்ததை ஒட்டி இது விளைந்தது.(ஆடம்ஸ், க்ரஹாம் மற்றும் வோன் பிஸ்ஷ்கி ஆகியோரின் தொகுப்பைக் காணவும்).[3] இருப்பினும், பல நாடுகளிலும் உள்ள அரசு அதிகாரிகள் மாறுபட்ட கருத்தினைக் கொண்டுள்ளனர். சிற்றளவுப் பொருளுதவிச் சந்தையில் அவர்கள் இப்போதும் இடையூடு செய்கின்றனர்.

ஒரு சிற்றளவுப் பொருளுதவி நிறுவனத்தின் அணுகெல்லை (மிகவும் ஏழ்மையாகவும், தொலைதூரமாகவும் உள்ள வறியவர்களை அணுகுவதற்கான அதன் ஆற்றல்) மற்றும் அதன் தொடர் தாங்கு திறன் (தற்போதைய வருமானத்திலிருந்து தனது இயங்கு செலவீனங்களை மட்டும் அல்லாமல் புதிய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் ஏற்படும் செலவீனத்தையும் ஈடு செய்து கொள்வது) ஆகியவற்றின் வர்த்தக வளக் கூர்மை பற்றி நெடுங்காலமாக வாதப் பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன.[11] இந்த இலக்குகளை சிற்றளவுப் பொருளுதவி செயலாளர்கள் சமன்பாடு செய்ய முயல வேண்டும் என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும், பொலிவியா நாட்டில் உள்ள மிகவும் குறைந்த பட்ச லாப நோக்குடைய பாங்க்கோசோல் தொடங்கி, மிக உயர் அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட லாப நோக்கு அற்ற பங்களாதேஷ் நாட்டின் ப்ராக் வரை இதில் கடைப்பிடிக்க வேண்டிய முறைமைகள் பல வகைகளிலும் வேறுபடுகின்றன. இது தனிப்பட்ட நிறுவனங்கள் மட்டும் அல்லாது தேசிய அளவில் சிற்றளவுப் பொருளுதவி அமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள அரசுகளுக்கும் பொருந்தும்.

சேவைகளை அளிப்பதற்கு பிரதான பெறுநர்களாக பெண்களே இருக்க வேண்டும் என்பதில் சிற்றளவுப் பொருளுதவி நிபுணர்கள் பொதுவான கருத்து கொண்டுள்ளனர். கடனை திருப்பிக் கொடுக்கத் தவறுவது என்பது ஆண்களை விடப் பெண்களிடம் குறைவு என்று ஆதாரங்கள் அறிவிக்கின்றன. இந்த்த தொழில் துறைக்கான 2006வது வருடத்திய புள்ளி விபரம் 52 மில்லியன் கடனாளிகளைச் சென்றடைந்த 704 எம்எஃப்ஐக்கள் பரஸ்பர சார்பு கடனுதவி முறைமை கொண்ட எம்எஃப்ஐக்களையும் (இதில் 99.3 சதவிகிதம் பெண் வாடிக்கையாளர்கள்) தனிப்பட்ட கடனுதவியளிக்கும் எம்எஃப்ஐக்களையும் (இதில் 51 சதவிகிதம் பெண் வாடிக்கையாளர்கள்) உள்ளிட்டிருந்தது. இதில் கடமை தவறும் நிகழ்வானது பரஸ்பர கடனுதவியில் 30 நாட்களுக்குப் பிறகு 0.9% (தனிப்பட்ட கடனுதவியில் 3.1%) என்றும், தள்ளுபடியான கடன் 0.3% (தனிப்பட்ட கடனுதவியில் 0.9%) என்ற அளவிலும் இருந்தன.[12]

காரணம், இயங்கு மேலளவுகள் இறுக்கமானதால், குறைந்த அளவில் கடனுதவி அளிக்கப்படுகிறது. பல எம்எஃப்ஐக்களும் ஆண்களுக்கு கடனுதவி அளிப்பதை ஆபத்தானதாகக் கருதுகின்றன. இருப்பினும், இவ்வாறு பெண்களை மையமாகக் கொள்வது என்பதும் சில நேரங்களில் கேள்விக்குள்ளாகியுள்ளது. அண்மையில் உலக வங்கியால் பதிப்பிக்கப்பட்ட, ஸ்ரீலங்காவில் சிறிய தொழிலதிபர்கள் பற்றி நடந்த ஆய்வு ஒன்று, ஆண்கள் செய்யும் வியாபாரத்தில் முதலீட்டின் மீதான வருமானம் (மாதிரியில் பாதியளவு) சராசரியாக 11 சதவிகிதமாக இருந்தது என்றும், பெண்கள் செய்யும் வியாபாரத்தில் இது பூஜ்யமாகவும் அல்லது ஒரளவு அதற்கும் குறைவாக எதிர்மறையாக இருந்தது என்றும் கண்டறிந்துள்ளது.[13]

சிற்றளவு நிதிசார் சேவைகள், வளர்ச்சியடைந்த நாடுகளையும் உள்ளிட்டு எல்லா இடங்களிலும் தேவைப்படுகின்றன. இருப்பினும், வளர்ச்சியடைந்து விட்ட பொருளாதாரங்களில் நிதித் துறையினுள் உள்ள தீவிரப் போட்டி மற்றும் அதனுடன் இணைந்ததான பல்வேறுபட்ட இலக்குகளைக் கொண்ட நிதி நிறுவனங்கள் ஆகியவை பெருவாரியான மக்கள் ஏதாவது ஒரு நிதிச் சேவைக்கு அணுகல் பெறுவதை உறுதி செய்து விடுகின்றன. பரஸ்பர சார்பு கடனுதவி போன்ற சிற்றளவுப் பொருளுதவியின் புதிய ஆக்கங்களை வளரும் நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மாற்றும் முயற்சி குறைந்த அளவே வெற்றியடைந்துள்ளது.[14]

ஏழை மக்களின் நிதி சார்ந்த தேவைகள்[தொகு]

வளர்ச்சியடைந்த நாடுகளில், நிதி சார்ந்தவையாக வகைப்படுத்தப்படும் பல நடவடிக்கைகள், வளரும் பொருளாதாரங்களில்,குறிப்பாக கிராமப்புறங்களில், பணம் சார்ந்தவையாக நடைபெறுவதில்லை; அதாவது அவை நடைபெற பணம் பயன்படுத்தப்படுவதில்லை. கிட்டத்தட்ட வரையறுத்தற்போல, ஏழை மக்களிடம் பணம் என்பதும் மிகவும் குறைவாகவே உள்ள ஒன்று. ஆனால், அவர்கள் வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது அல்லது பணத்தால் வாங்கக் கூடிய பொருட்கள் தேவைப்படுகின்றன.

ஸ்டுவர்ட் ரூதர்ஃபோர்ட் தமது சமீப வெளியீடான ஏழைகளும் அவர்களது பணமும் என்ற புத்தகத்தில் இத்தகைய தேவைகள் பலவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்:[15]

  • வாழ்க்கைச் சுழற்சிக்குத் தேவையானவை : திருமணங்கள், இறுதி யாத்திரைகள், குழந்தை பிறப்பு, கல்வி, வீடு கட்டுவது, விதவையாவது, முதிர்காலம் போன்றவை.
  • தனிநபர் சார்ந்த அவசரச் சூழல்கள் : நோய், காயம், வேலையின்மை, திருட்டுப் போவது, மிரட்டப்படுவது அல்லது மரணம் போன்றவை.
  • பேரிடர்கள் : தீ விபத்து, வெள்ளங்கள், புயல், மற்றும் மனிதரால் உண்டாகும் போர் அல்லது குடிசைகளை அழித்தல் ஆகியவை.
  • முதலீட்டிற்கான வாய்ப்புகள் : தொழில் பெருக்கம், நிலம் அல்லது கருவிகள் வாங்குவது, வீட்டு வசதியைக் கூட்டுவது, வேலை பெறுவது (இதற்கு அநேகமாக ஒரு பெரும் தொகையை லஞ்சமாக கொடுக்க வேண்டியிருப்பதால்) போன்றவை.

இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏழைகள் ஆக்கபூர்வமான மற்றும் ஒத்துழைப்பு மிகுந்ததான வழிகளைக் கையாளுகிறார்கள். இதில் பிரதானமாக பண மதிப்பு இல்லாத பல வழி முறைகளை உருவாக்குவதும், பரிமாறிக் கொள்வதும் நிகழ்கிறது. பணத்திற்கான மாற்றுப் பொருட்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன; இருப்பினும், பொதுவாக, இவை கால்நடை, தானியம், நகைகள் மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள் ஆகியவற்றை உட்கொள்கின்றன.

மார்க்யூரெட் ராபின்ஸன் தனது சிற்றளவுப் பொருளுதவிப் புரட்சி என்னும் புத்தகத்தில், 1980ஆம் ஆண்டுகளில், "சிற்றளவுப் பொருளுதவி மிகப் பெரும் அளவிலும் லாபகரமாகமானதுமான அணுகெல்லையை அளித்தது" என்று குறிப்பிட்டார்.(2001, ப. 54).

2000 ஆம் ஆண்டுகளில் சிற்றளவுப் பொருளுதவித் தொழில் பெரும் அளவில் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை சந்திப்பதையும், ஏழ்மையைக் குறைப்பதில் பங்காற்றுவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. வணிக ரீதியில் இலாபகர சாத்தியம் கொண்டதாக சிற்றளவுப் பொருளுதவித் துறையை மேம்படுத்துவதில் கடந்த சில பத்தாண்டுகளாக பெருமளவு முன்னேற்றம் உருவாகியிருப்பது காணப்பட்டாலும், உலகெங்கும் மிகப் பெரும் அளவில் பரந்து பட்டிருக்கும் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்பாக பல்வேறு விடயங்களை அது கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

வணிக ரீதியில் பழுதற்றதாக சிற்றளவுப் பொருளுதவி துறையையைக் கட்டமைப்பதில் உள்ள தடைகள் அல்லது சவால்கள் இவற்றை உள்ளடக்கும்:

பொருத்தமற்ற கொடையாளர் மானியங்கள்[தொகு]

• சேமிப்பைப் பெறும் எம்எஃப்ஐ எனப்படும் சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்களின் (Micro Financing Institutions) மோசமான விதிமுறைகள் மற்றும் அவற்றின் மேலான கண்காணிப்பு.

• சேமிப்பு, பொருள் அனுப்புவது மற்றும் காப்பீடு ஆகிய தேவைகளை பூர்த்தி செய்யும் எம்எஃப்ஐக்கள் மிகக் குறைவாக இருத்தல்.

• எம்எஃப்ஐக்களின் குறைபாடான மேலாண்மைத் திறன்.

• திறமை குறைந்த நிர்வாக அமைப்புமுறை

• கிராமப்புற, விவசாயத்திற்குப் பொருந்துவதான சிற்றளவுப் பொருளுதவி முறைமைகளை மேற்கொள்வது மற்றும் பரப்புவதற்கான தேவை.

ஏழைகள் தங்கள் பணத்தைக் கையாளும் வழிகள்[தொகு]

மேலான சேமிப்பு.

பணத்தைக் கையாளுவதில் ஏழை மக்களுக்குப் பெரும்பாலாக ஏற்படும் ஒரு அடிப்படைப் பிரச்சினை, 'பயன்பாடுள்ள பெரிய அளவிலான' பணத்தைத் திரட்டுவதுதான் என்று ரூத்ர்ஃபோர்ட் வாதிடுகிறார்.

ஒரு புதிய வீட்டைக் கட்டுவது என்பதானது பல வருடங்களுக்கான சேமிப்பையும், வீடு கட்டும் முயற்சியைத் தொடங்குமுன்னர், பல்வேறு கட்டுமானப் பொருட்களைக் காப்பதையும் ஈடுபடுத்துகிறது. பிற்காலத்தில் பிள்ளைகளுக்குச் சீருடை வாங்குவது, லஞ்சம் கொடுப்பது ஆகிய தேவைகளுக்கான பணத்தைப் பெற கோழிகளை வாங்கி வளர்த்துப் பின்னர் அவற்றை விற்பதற்காக வளர்க்கும் செயலானது, குழந்தைகளின் படிப்புச் செலவை ஈடுகட்டுகிறது. ஒரு தேவையானது நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் அதன் மதிப்பு கூட்டப்படுவதால், இத்தகைய பண மேலாண்மை வழிமுறையானது 'கூட்டிய சேமிப்பு' எனப்படுகிறது.

பல சமயங்களில் மக்களுக்குத் தேவைப்படும் நேரங்களில், அவர்களிடம் போதுமான அளவு பணம் இருப்பதில்லை, அதனால், அவர்கள் கடன் வாங்க நேர்கிறது. ஒரு ஏழைக் குடும்பம், நிலம் வாங்குவதற்காகப் பெரும்பாலும் உறவினர்களிடமிருந்து கடன் பெறலாம். அரிசிக்காக வட்டிக்காரரிடமும், ஒரு தையல் இயந்திரத்திற்காக சிற்றளவுப் பொருளுதவி நிறுவனத்திடமும் கடன் பெறலாம். செலவீனத்திற்குப் பிறகு இந்தக் கடன்கள் அடைக்கப்பட வேண்டும் என்பதால், ரூத்ர்ஃபோர்ட் இவற்றை 'கீழான சேமிப்பு' என்று குறிப்பிடுகிறார். சிற்றளவுக் கடனுதவி என்பது பாதிப் பிரச்சினையைத்தான் தீர்க்கிறது என்பது ரூதர்ஃபோர்டின் துணிபு. மேலும், முக்கியத்துவம் குறைந்த பாதியைத்தான் அது தீர்க்கிறது. ஏழைகள் தாங்கள் சேமித்து சொத்து மதிப்பைக் கூட்டவே கடன் வாங்குகிறார்கள். சிற்றளவுக் கடனுதவி நிறுவனங்கள் ஏழை மக்கள் தம் பலவகையான இடர்களையும் சமாளித்து கொள்ள உதவும் வகையில் சேமிப்புக் கணக்கிலிருந்து கடன் வழங்க வேண்டும்.

கீழான சேமிப்பு.

பல தேவைகள் சேமிப்பு மற்றும் கடன் இவற்றின் கூட்டால் பூர்த்தியாகின்றன. க்ராமீன் வங்கி மற்றும் பங்களாதேஷ் நாட்டின் இரண்டு பெரும் சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்களின் தாக்கத்தை அளவிட்ட ஒரு மதிப்பீடு, அவை தமது வாடிக்கையாளர்கள் கிராமப்புற விவசாய நிலம் சாராத சிறு நிறுவன முயற்சிகளுக்காக அளிக்கும் ஒவ்வொரு டாலர் கடனுக்கும் சுமார் 2.5 டாலர்கள் இதர தோற்றுவாய்களிலிருந்து, பெரும்பாலும் அவர்களது வாடிக்கையாளர்களின் சேமிப்பிலிருந்து, வருவதாக கண்டறிந்துள்ளது.[16]

இது மேற்கத்திய நாடுகளில் பெறப்பட்ட அனுபவத்திற்கு இணையாக உள்ளது. அவற்றில் குடும்பத் தொழில்களுக்கான தேவைகள், குறிப்பாக அவற்றின் தொடக்க காலகட்டத்தில், பெரும்பாலும் சேமிப்பிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றன.

தனியார்சார்ந்த சேமிப்புக்களில் பாதுகாப்பின்மை மிகவும் அதிகமானது என்று அண்மைக் காலத்திய ஆய்வுகள் அறிவிக்கின்றன. உதாரணமாக, ரிட் மற்றும் மியூசாசரியா உகாண்டாவில் நிகழ்த்திய ஒரு ஆய்வு, "தனிமுறை சார்ந்த துறை தவிர மற்றவற்றில் சேமிக்க வாய்ப்பில்லாதவர்கள், அநேகமாக சிறிதளவாவது பணத்தை - சுமாராக அவர்கள் சேமிப்பில் கால்பங்கை- இழப்பது உறுதி" என்று முடிவுரைக்கிறது.[17]

ரூதர்ஃபோர்ட், ரிட் மற்றும் பலரின் பணியானது, இதன் செயல் முறையாளர்களை சிற்றளவுக் கடனுதவி திட்டமைப்பினை மறு ஆய்வு செய்யத் தூண்டியுள்ளது: ஏழை மக்கள் வறுமையிலிருந்து வெளியேறவும், சிறு தொழில்கள் தொடங்கவும், தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் கடன் வாங்குகின்றனர். இந்தப் புதிய கட்டமைப்பில், ஏழை மக்கள் தமது பலவீனங்கள் பலவற்றையும் குறைத்துக் கொண்டு தமது வருமானத்தில் பெரும்பகுதியைச் சொத்து மதிப்பைக் கூட்டுவதில் ஈடுபடுத்துவதான செயல்பாட்டில் குறிப்பிட்டுக் கவனம் செலுத்துகிறது.

சிறு தொழில் தொடக்கத்திற்காகக் கடன் வாங்குவதைப் போல, செலவுகளுக்காகவும் கடன் வாங்குவதைப் பயனுள்ளதாக அவர்கள் காணக் கூடும். வீட்டுத் தேவைகள் மற்றும் குடும்பத்தில் நேரும் இடர்களைச் சமாளிப்பதற்காக பணம் தேவைப்படும்போது மீண்டும் பெறுவதற்காக, பத்திரமான, நெகிழ்வுத்தன்மை உள்ள இடத்தில் பணத்தைச் சேமிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

சிற்றளவுப் பொருளுதவி தற்போதும் இயங்கும் அளவு[தொகு]

சிற்றளவுப் பொருளுதவி விநியோகிக்கப்படும் முறைமையை வரைமுறைப்படுத்த இதுவரை முறையான முயற்சியேதும் மேற்கொள்ளப்படவில்லை. 2004ஆம் ஆண்டு, வளரும் நாடுகளில் 'மாற்று நிதி நிறுவனங்கள்' பற்றிய ஒரு பகுப்பாய்வு, ஒரு பயனுள்ள அளவுகோலை நிலை நாட்டியது.[18]

வணிக ரீதியான வங்கிகளின் சேவைகளைப் பெறுபவர்களை விட அதிகமான ஏழ்மை நிலையிலுள்ள சுமார் 665 மில்லியன் மக்கள் 3,000 நிறுவனங்களைச் சார்ந்துள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நூலாசிரியர்கள் கூறினர். இவற்றில், 120 மில்லியன் மக்கள் பொதுவாகச் சிற்றளவுப் பொருளுதவிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படும் நிறுவனங்களைச் சார்ந்திருந்தனர். இந்த இயக்கத்தின் வேறுபட்ட சரித்திர வேர்களைப் பிரதிபலிக்கும் விதமாக அவை சேமிப்பு வங்கிகள் (318 மில்லியன் கணக்குகள்), மாநில விவசாய மற்றும் மேம்பாடு வங்கிகள் (172 கணக்குகள்), நிதிக் கூட்டுறவு வங்கிகள் கடனாளர் கூட்டுறவுகள் (35 மில்லியன் கணக்குகள்) மற்றும் பிரத்யேகமான கிராமிய வங்கிகள் (19 மில்லியன் கணக்குகள்) ஆகியவற்றையும் உள்ளிட்டிருந்தன.

பகுதி வாரியாகப் பார்க்கையில், இந்த கணக்குகளின் மிக அதிகமான அடர்த்தியளவு இந்தியா வில் (மொத்த ஜனத்தொகையில் 18 சதவிகிதத்தைப் பிரதிநிதிப்படுத்தும் விதமாக 188 மில்லியன் கணக்குகள்) இருந்தது. மிகக் குறைவானவையாக லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (மொத்த ஜனத்தொகையில் 3 சதவிகிதத்தைப் பிரதிநிதிப்படுத்தும் விதமாக 14 மில்லியன் கணக்குகள்) மற்றும் ஆப்பிரிக்கா மொத்த ஜனத்தொகையில் 4 சதவிகிதத்தைப் பிரதிநிதிப்படுத்தும் விதமாக 27 மில்லியன் கணக்குகள்) இருந்தன. வளர்ச்சியடைந்த நாடுகளில் வங்கி வாடிக்கையாளர்களில் பெரும்பாலோனோர் தமது பல்வேறு நடவடிக்கைகளுக்காக, பல வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, மேற்கண்ட புள்ளி விபரங்கள், சிற்றளவுப் பொருளுதவி இயக்கம் தனக்காக வகுத்துக் கொண்ட பணியைச் செய்து முடிப்பது என்பதானது இன்னும் வெகு தொலைவில்தான் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றன.

வகை முறைகளின் அடிப்படி பார்க்கும்பொழுது, மாற்று நிதி அமைப்புகளில் "சேமிப்புக் கணக்குகள் கடன் உதவிகளை ஒன்றுக்கு நாலு என்ற கணக்கில் மிஞ்சுகின்றன. இது உலகம் முழுதும் பரவிய ஒரு போக்காக உள்ளது. தனிப்பட்ட பகுதிகளில் பெரும் மாற்றம் ஏதும் இல்லை."[19]

தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்கள் பற்றிய தரவுகளின் முக்கியமான மூலமாக மைக்ரோபேங்கிங் புல்லடின் விளங்குகிறது. 2006வது வருடத்தின் இறுதியில், 52 மில்லியன் கடனாளிகள் (மொத்தக் கடன்களில் &23.3 பில்லியன்) மற்றும் 56 மில்லியன் சேமிப்பாளர்களுக்கு (சேமிப்புக்களில் $15.4 பில்லியன்) சேவையளிக்கும் 704 எம்எஃப்ஐக்களின் செயல்பாடுகளை இது பின் தொடர்ந்தது. இவற்றின் வாடிக்கையாளர்களில், 70% ஆசியாவையும், 20% லத்தீன் அமெரிக்காவையும், மீதமுள்ளவர்கள் இதர நாடுகளையும் சேர்ந்தவர்கள்.[20]

இதுவரை ரோஸ்கா போன்ற தனியார் சார்ந்த சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்கள் மற்றும் திருமணங்கள், இறுதி யாத்திரைகள் மற்றும் நோய் ஆகியவை தொடர்பான செலவீனங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் தனியார் சார்ந்த சங்கங்கள் ஆகியவை விநியோகிக்கும் அளவு பற்றிய ஆய்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. இருப்பினும், அதிக அளவில் வெளியுதவி இன்றி ஏழை மக்களாலேயே உருவாக்கப்பட்டு, நடத்தப்படும் இத்தகைய நிறுவனங்கள், வளரும் நாடுகளில் அதிக அளவில் இயங்குவதாக எண்ணற்ற தனிப்பட்ட நபர் சார்ந்து பிரசுரிக்கப்பட்ட ஆய்வுகள் அறிவிக்கின்றன.[21]

"உள்ளீடான நிதி அமைப்புகள்"[தொகு]

1970களில் துவங்கப்பட்ட சிற்றளவுக் கடனுதவி தனது உந்து விசையை இழந்து விட்டது. அதன் இடத்தை 'நிதி அமைப்புகள்' சார்பான அணுகல் பிடித்துள்ளது. சிற்றளவுக் கடனுதவி நகர்ப் புற மற்றும் நகரையொத்த இடங்களிலும் தொழில் முனைவோர் குடும்பங்களிலும் குறிப்பாக நிறைய சாதித்திருப்பினும், குறைவான அடர்த்தியில் மக்கள் தொகையைக் கொண்ட கிராமப்புறங்களில் அதன் முன்னேற்றம் மிகவும் குறைந்த வேகம் கொண்டதாகவே இருந்துள்ளது.

சரித்திரத்தில் பல நூற்றாண்டுகளாக விளங்கி வரும் சிற்றளவுப் பொருளுதவியின் தொன்மையையும், வளரும் நாடுகளில் ஏழை மக்களுக்கு சேவை புரிவதில் அதன் நிறை பல்வேறுபாட்டுத் தன்மையையும் புதிய நிதி அமைப்பு அணுகல் யதார்த்த ரீதியில் ஒப்புக் கொள்கிறது. இன்று உலகெங்கும் உள்ள மிக்க வறியவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் வசிக்கும் மற்றும் பணியாற்றும் வேறுபட்ட சூழ்நிலைகள் ஆகியவற்றைப் பற்றி அதிகரித்து வரும் விழிப்புணர்வில் அது வேர் கொண்டுள்ளது.

பிரைட் ஹெல்ம்ஸ், "எல்லோருக்குமான அணுகல்: உள்ளீடான நிதி அமைப்பைக் கட்டமைத்தல்" என்னும் தனது புத்தகத்தில் சிற்றளவுப் பொருளுதவி அளிப்பவர்களை நான்கு வகைகளுக்குள் உள்ளிடுகிறார். இவர்கள் அனைவருடனும் ஒரு முன்னியக்க முறையில் தொடர்பு கொள்வது அவர்கள் சிற்றளவுப் பொருளுதவியின் இலக்குகளை அடைய உதவும் என்று வாதிடுகிறார்.[22]

தனிமுறை சார்ந்த நிதிச் சேவை வழங்குனர்கள்
இவற்றில், வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், அடகுக் கடைக்காரர்கள், பண-பாதுகாப்பாளர்கள், ரோஸ்காக்கள், ஏஎஸ்சிஏக்கள் மற்றும் உட்பொருள் வழங்கும் கடைகள் ஆகியவை அடங்கும். இவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்திருப்பதாலும், ஒரே சமூகத்தில் வாழ்வதாலும், ஒருவர் மற்றவரின் நிதி நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்டு, நெகிழ்தன்மை உடையதும், சௌகரியமானதும், விரைவானதுமான சேவைகளை அளிக்கின்றனர். இந்த சேவைகளின் விலை அதிகமாகவும், இவற்றில் கிடைக்கப் பெறும் சேவைகள் குறைவானதாகவும், குறைந்த காலத்திற்கானதாகவும் இருக்கலாம். சேமிப்பை ஈடுபடுத்தும் தனி முறை சார்ந்த சேவைகள் ஆபத்து நிறைந்தவை; பலர் இதில் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
உறுப்பினர்-உரிமையாளராகும் நிறுவனங்கள்
இவை சுய உதவிக் குழுக்கள், கடனாளர் கூட்டுறவுகள் மற்றும் 'நிதிச் சேவை சங்கங்கள்' போன்ற கலப்பின வகை நிறுவனங்கள் மற்றும் சிவிஈகிஏக்கள் ஆகியவற்றை உள்ளடக்கும். தனியார் சார்ந்த நிறுவனங்களைப் போல, இவையும் பொதுவாக சிறிய அளவிலும், உள்ளூர் சார்ந்ததாகவும், மற்றும் பரஸ்பர நிதி நிலைமை பற்றிய அறிவைக் கொண்டுள்ளதாகவும், சௌகரியமான மற்றும் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றை அளிப்பதாகவும் உள்ளன. இவை ஏழைகளால் நிர்வகிக்கப்படுவதால், இவற்றின் இயங்கு செலவீனங்கள் குறைவாக உள்ளன. இருப்பினும், இத்தகைய சேவையளிப்பவர்கள் நிதி சார்ந்த திறன்களை மிகவும் குறைவான அளவில் பெற்றவர்கள்; நாட்டின் பொருளாதாரம் நிலையிறங்கும்போது, இவர்கள் பிரச்சினைக்கு ஆளாகலாம் அல்லது இவர்களின் இயங்கு முறைகள் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகலாம். இவர்கள் மிக்க திறனுடன் முறைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டால் தவிர, செல்வாக்குள்ள தலைவர்களால் கைப்பற்றப்பட்டு இவர்கள் தம் பணத்தை இழந்து விட நேரலாம்.
அரசாங்கம் சாராத நிறுவனங்கள் (என்ஜிஓ)
2006வது ஆண்டு இறுதியில், சுமார் 3,316 எம்எஃப்ஐக்களும், என்ஜிஓக்களும் 133 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்ததாக மைக்ரோக்ரெடிட் சம்மிட் காம்பெயின் கணக்கெடுத்துள்ளது.[23] பங்களாதேஷ் நாட்டில், க்ராமீன் வங்கி மற்றும் ப்ராக், மற்றும் பொலிவியா வில் ப்ரோடெம் மற்றும் வாஷிங்டன் டிசியில் தலைமையகம் கொண்ட ஃபின்கா இண்டர்நேஷனல் ஆகியவற்றின் தலைமையில் இத்தகைய என்ஜிஓக்கள், கடந்த முப்பது ஆண்டுகளில் வளரும் நாடுகள் அனைத்திலும் பரவியுள்ளன; கேம்லான் கௌன்சில் போன்ற மற்றவை பெரும் பகுதிகளில் இயங்குகின்றன. இவை, பரஸ்பர சார்பு கடனுதவி, கிராமப்புற வங்கி மற்றும் தானியங்கி வங்கி ஆகிய புதுமையான, முன்முயற்சியான வங்கியியல் உத்திகளால், ஏழை மக்களுக்கு சேவை அளிப்பதில் உள்ள தடைகளைத் தாண்டியுள்ளன. இருப்பினும், இவற்றில் பலவற்றின் நிர்வாகக் குழுக்கள் அவற்றில் மூலதனமிட்டவர்களையோ அல்லது வாடிக்கையாளர்களையோ பிரதிநிதிப்படுத்துவதில்லை. இவற்றின் நிர்வாக முறைமை மிகவும் மெலிந்து பட்டதாகவும், வெளிப்புறக் கொடையாளர்களைச் சார்ந்ததுமாக உள்ளது.
முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள்
வர்த்தக ரீதியான வங்கிகளுடன், இவை மாநில வங்கிகள், விவசாய மேம்பாட்டு வங்கிகள், சேமிப்பு வங்கிகள், கிராமப் புற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இவை முறைப்படுத்தப்பட்டு, கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. இவை அதிக விஸ்தீரணமுள்ள நிதிச் சேவைகளை அளித்து, தமது தேசிய, சர்வதேச கிளைகளின் வலைப்பின்னலைக் கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும், இவை சமூக இலக்குகளைக் கைக்கொள்வதில் உற்சாகமின்மையை நிரூபித்துள்ளன. தமது அதிக அளவிலான இயங்கு செலவீனம் காரணமாக, இவை ஏழைகள் மற்றும் தொலை தூரத்தில் உள்ள மக்கள் ஆகியோருக்கு சேவை அளிக்க இயலாது இருக்கின்றன.

கடனுதவி மதிப்பீடுகளில் வாணிபக் கடன் போன்ற மாற்றுத் தரவு ஆகியவற்றின் அதிகரித்து வரும் பயன்பாடு, சிற்றளவுப் பொருளுதவியில் வர்த்தக வங்கிகளின் ஆர்வத்தைக் கூட்டி வருகின்றன.[24]

உகந்த முறையில் முறைப்படுத்தப்பட்டு, கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டால், இந்த நிறுவன வகைகளில் ஒவ்வொன்றுமே சிற்றளவுப் பொருளுதவி சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆற்றல் ஆதாயம் கொணரலாம். உதாரணமாக, வர்த்தக ரீதியான வங்கிகள், உறுப்பினர் உரிமையாளராகும் நிறுவனங்களின் வலைப்பின்னல் ஆகியவற்றுடன் சுய உதவிக் குழுக்களை இணைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இவை கைகோர்த்துச் செயலாற்றும்போது, இவற்றின் குறிக்கோள் எல்லை பரந்துபட்டு இவை அதிக அளவில் பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். மேலும், வர்த்தக ரீதியான வங்கிகள், தானியங்கி வங்கிகளை மின்னணு வழிப் பணம் செலுத்துதலான ஈ-பேமெண்ட் தொழில் நுட்ப வழியாக தமது பரந்துபட்ட கிளைகளின் வலைப்பின்னலில் ஒருங்கிணைப்பதன் மூலமும் தமது செலவீனங்களைக் குறைக்க இயலும்.

சிற்றளுவுப் பொருளுதவியும் வலைத்தளமும்[தொகு]

ஏழை மக்களுக்கான தரமான சேமிப்பு சேவைகள் உருவாக்கத்தில் குறைந்த அளவு முன்னேற்றமே இருப்பதால், ஒப்பானவர்களுக்கு இடையில் தளங்கள் (peer-to-peer) அமைக்கப்பட்டு சிற்றளவுக் கடனுதவியை தனிப்பட்ட கடன் வழங்குபவர்கள் மூலமாக பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009வது வருடம் ஆகஸ்ட் மாதம் கிவாவின் இத்தகைய தளங்கள் மூலம் சென்றடைந்த அளவு 87 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். (கிவா ஒவ்வொரு மாதமும் சுமார் 5 மில்லியன் டாலர் கடனை ஊக்குவித்து நடைமுறைப்படுத்துகிறது). இதனுடன் ஒப்பிடுகையில், 2006வது வருட முடிவில் சிற்றளவுக் கடனுதவிக்கான தேவை 250 பில்லியன் அமெரிக்க டாலராகக் கணக்கிடப்பட்டுள்ளது.[25]

பரிவர்த்தனைச் செலவுகள் மற்றும் அந்நிய செலாவணி மாற்றத்திலுள்ள ஆபத்துக்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்கு, எந்த நாடுகளில் சிற்றளவுக் கடனுதவி தோற்றுவிக்கப்படுகிறதோ, அந்த நாடுகளிலேயே அவற்றிற்கான நிதியும் ஏற்பாடு செய்யப்பட்ட வேண்டும் என்று பெருவாரியான நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

இத்தகைய வலைத்தளங்களின் வெளிப்படுத்துதலில் சில பிரச்சினைகள் உள்ளன. வங்கிகளில் நன்கு பழக்கமான வருடாந்திர சதவிகித வட்டி (annual interest rate) என்பதற்குப் பதிலாக, இவற்றில் சில நிலைமாறா வட்டி விகித (flat rate) முறைமைக்குக் கடனாளிகளை வெளிப்படுத்துகின்றன.[26] . இவ்வாறு நிலைமாறா வட்டி விகிதம் பயன்படுத்தப்படுவது, வளர்ச்சியடைந்த நாடுகளில் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களின் இடையே தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தமது வாடிக்கையாளர்கள் அவர்கள் உண்மையில் செலுத்துவதை விட குறைவான வட்டி விகிதத்தை செலுத்துவதாக இது தனிப்பட்ட கடன் வழங்குநர்களைக் குழப்பி விடக் கூடும்.[சான்று தேவை]

வறுமை குறைவதற்கான ஆதாரம்[தொகு]

சிற்றளவுப் பொருளுதவியை முன்வைக்கும் சிலர் அதனால் மட்டுமே வறுமையை ஒழித்து விட முடியும் என்று ஆணித்தரமாக உரைக்கின்றனர். இந்த ஆணித்தரமான, ஆனால் நம்பகத்தன்மை உடைய ஆதாரங்களை உடன் கொள்ளாத, வாதம் பல விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.[27] மேலும், பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு கருவியாக சிற்றளவுப் பொருளுதவியின் உண்மையான திறனை ஆராய்வதானது மிகவும் குறைவாகவே உள்ளது; அதைக் கண்காணிப்பதிலும் மற்றும் அதன் தாக்கத்தை அளவிடுவதிலும் உள்ள சிரமுமே இதற்கான காரணமாகும்.[28] 2008வது வருடத்திய வறுமை செயல்பாடு/ நிதிக்கான அணுகல், துவங்கு முயற்சிக்கான புதிய வழிமுறைமைகள்: சிற்றளவுப் பொருளுதவி ஆராய்ச்சி மாநாட்டில், நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜோனாதன் மோர்டக், சிற்றளவுப் பொருளுதவியின் தாக்கத்தை அளவிட முறைப்படுத்தப்பட்ட பழுதற்ற முறைமைகள் இரண்டொன்றே இருக்கின்றன என்று குறிப்பிட்டார்.[29]

வறுமை ஒழிப்பில் சிற்றளவுப் பொருளுதவியின் திறன் பற்றிய பெரும்பாலான ஆதாரம் நிகழ்வுக் குறிப்புகள் மீதான அறிக்கைகள் அல்லது தனி நபர் சார்ந்த ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாக சமூகவியலாளரான ஜோன் வெஸ்டோவர் கண்டறிந்துள்ளார். துவக்கத்தில், இந்தத் துறையில் அவர் 100 கட்டுரைகளை கண்டறிந்தார். ஆனால், அவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான அளவு தரவுகளை பயன்படுத்தியிருந்த ஆறு கட்டுரைகளே மட்டுமே எடுத்துக் கொண்டார். இந்த ஆய்வுகளில் ஒன்று சிற்றளவுப் பொருளுதவி வறுமையைக் குறைத்தது என்பதாக கண்டறிந்திருந்தது. வேறு இரண்டு ஆய்வுகள், சிற்றளவுப் பொருளுதவி நிரலின் நேர்மறையான தன்மைகளைக் குறிப்பிட்டிருந்தாலும் அது வறுமையைக் குறைத்தது என்பதை அவற்றால் முடிவாகக் கூற இயலவில்லை. மற்ற ஆய்வு முடிவுகளும் இதையொட்டியே அமைந்திருந்தன; இவற்றிற்கான கருத்தாய்வுகளில், பெரும்பாலானோர் தங்களது நிதி நிலைமை மேம்பட்டிருப்பதாக உணர்ந்தனர். சிலரோ அது மோசமாகியிருப்பதாக உணர்ந்தனர்.[30]

2009ஆம் வருடம் மே மாதம், நியூ ஹேவனில் உள்ள இன்னோவேஷன் ஃபார் பாவர்டி ஆக்ஷன் ஒரு ஆய்வறிக்கையைப் பிரசுரித்தது. இதில்,"தங்கள் வியாபாரத்தில் பிரச்சினைகள் உள்ளதாக அறிவித்தவர்களின் சதவிகிதம்" போன்ற இதர விளைவுகள் இடம் பெறவில்லை என்றாலும், நிதிப் பயிற்சிக்காகத் தோராயமாக்கப்பட்டவர்கள் அதிக லாபம் அடைந்திருந்ததாக அறியப்பட்டது.[31]

சிற்றளவுப் பொருளுதவியும் சமூக இடையூடுகளும்[தொகு]

தற்சமயம் ஹெச்ஐவி/ எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, சிற்றளவுப் பொருளுதவியுடன் இணைந்த சில சமூக இடையூடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எய்ட்ஸ் மற்றும் பாலினப் பொதுமைக்காக சிற்றளவுப் பொருளுதவியுடன் இடையூடு (இன்டர்வென்ஷன் வித் மைக்ரோஃபைனான்ஸ் ஃபார் எய்ட்ஸ் அண்ட் ஜெண்டர் ஈக்விடி- இமேஜ்) போன்ற சில இடையூடுகள் சிற்றளவுப் பொருளுதவியை, "தி சிஸ்டர்ஸ்-ஃபார்-லைஃப்" நிரல் போன்றவற்றில் உள்ளிறுத்துகின்றன. இது, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலினரும் மேற்கொள்ளும் பங்கு பற்றிய அறிவு, பாலின அடிப்படையிலான வன்முறை, மற்றும் ஹெச்ஐவி /எய்ட்ஸ் தொற்றுக்கள் ஆகியவற்றைப் பற்றிய அறிவை அளித்து, பெண்களுக்கு இடையிலான தொடர்புத் திறன் மற்றும் தலைமைப் பண்புகளை வலுவாக்குகிறது. "தி சிஸ்டர்ஸ்-ஃபார்-லைஃப்" நிரல், இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் முதல் கட்டத்தில் ஒரு பயிற்சியாளரைக் கொண்ட பத்து மணி நேர பயிற்சி நிரல் உள்ளது. இரண்டாவது கட்டம், குழுவில் உள்ளவர்களில் ஒரு தலைவரை அடையாளம் காண்பது, அவர்களுக்கு மேற்கொண்டு பயிற்சி அளிப்பது மற்றும் அவர்கள் தத்தம் மையங்களில் செயல் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.[32] சிற்றளவுப் பொருளுதவி, வர்த்தகக் கல்வி[33] மற்றும் ஆரோக்கிய இடையூடுகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[34] ப்ராக்(என்ஜிஓ)கின் கிராம நிறுவனங்களும் சிற்றளவுப் பொருளுதவியை இதர சமூக இடையூடுகளுடன் இணைக்கின்றன.

இதர விமர்சனங்கள்[தொகு]

கடனாளிகளிடமிருந்து மிகவும் அதிக விகிதத்தில் வட்டி வசூலிப்பது பற்றி மிகவும் விமர்சனம் எழுந்துள்ளது. 2006ஆம் வருடம் மைக்ரோபேங்கிங் புலட்டினுக்கு தன்னார்வமாக அறிக்கைகளை சமர்ப்பித்த உருமாதிரியான 704 சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்களின் முதலீடுகளின் உண்மையான சராசரி வருமானம் வருடாந்திரமாக 22.3 சதவிகிதம். இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் வருடாந்திர வட்டி விகிதம் இதை விட அதிகமானதாகும். காரணம் அது உள்ளூர் விலையுயர்வு மற்றும் சிற்றளவுப் பொருளுதவி நிறுவனத்தின் வாராக் கடன்களின் மீதான செலவீனம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.[35] அண்மையில் வெளியிடப்பட்ட தமது புத்தகத்தில்[36] முகம்மது யூனுஸ் இதைப் பற்றி மிகவும் விரிவாக உரைத்துள்ளார். 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக நீண்ட கால வட்டி விகிதம் வசூலிக்கும் சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

கொடையாளர்களின் பங்கும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அண்மையில் கன்சுலேடிவ் க்ரூப் டு அசிஸ்ட் தி புவர் (சிஜிஏபி) இவ்வாறு விமர்சித்தது: "அவர்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பெரும்பகுதி பயனற்றது. காரணம் அது வெற்றியடையாத, பெரும்பாலான நேரங்களில், சிக்கலான நிதி இயங்கு முறைமைகளில் (எடுத்துக் காட்டாக ஒரு அரசாங்க முனைவுக் கழகம்) சிக்கிக் கொள்கின்றது அல்லது செயல் திறன் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தேவையில்லாத பங்குதாரர்களுக்குச் சென்று விடுகிறது. சில வேளைகளில், மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்ட நிரல்கள், சந்தைகளை முறை கேடுகளுக்கு ஆளாக்குவதாலும், உள்நாட்டு வணிக முனைவுகளை மலிவான அல்லது இலவசப் பணத்தால் அகற்றி விடுவதாலும், நிதி அமைப்புகளின் மேம்பாட்டை சிதைத்து விடுகின்றன."[37]

சிற்றளவுக் கடனுதவி வழங்குபவர்கள் மீதும், ஏழை மக்களின் இல்லங்களுக்கான பொறுப்பை அவர்கள் ஏற்பதி்ல்லை என்பதான விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, கடனாளிகள் தினக் கூலிகளாகவோ, எம்எஃப்ஐயின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் வழியாக தங்களது கைவினை அல்லது வேளாண்மைப் பொருட்களை விற்பவர்களாகவோ இருக்கும் நிலையில் இது நிகழ்வதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. தங்களது வாடிக்கையாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகள் மற்றும் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதில் எம்எஃப்ஐக்கள் காட்டும் ஆர்வம், பல நாடுகளில் இத்தகைய உறவு முறையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பங்களாதேஷ் நாட்டில், பல்லாயிரக்கணக்கான கடனாளிகள் க்ராமீன் வங்கி அல்லது ப்ராக் கின் சந்தைப்படுத்தும் துறையின் துணை நிறுவனங்களில் தினக் கூலிகளாக திறம்பட வேலை செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், பணி நேரம், விடுமுறை தினங்கள், பணி நிலைமைகள், பாதுகாப்பு, குழந்தைத் தொழில் ஆகியவை தொடர்பாக மிகச் சில விதி முறைகளே, அப்படி ஏதாவது இருப்பின், உள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். மேலும், இவ்வாறு தொழிலாளர்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் கண்காணிப்பு முறைமைகளும் மிகவும் குறைவானதாக உள்ளன.[38] இவற்றில் சிலவற்றில் சங்கங்கள் மற்றும் சமூகப் பொறுப்புள்ள முதலீடுகள் ஆகியவற்றின் வாதாளர்கள் அக்கறை செலுத்தத் துவங்கியுள்ளர்.

நூற்பட்டியல்[தொகு]

  • ஆடம்ஸ், டேல் டபிள்யூ, டௌக்லஸ் ஹெச்.க்ரஹாம் & ஜே.டி. வோன் பிஸ்ஷ்க் (ஈடிஎஸ்). மலிவான கடனுதவியால் கிராமப்புற மேம்பாட்டைக் குறைத்து மதிப்பிடுதல் வெஸ்ட்வ்யூ பிரஸ், போல்டர் & லண்டன், 1984.
  • டெ ஆகியான், பியட்ரிஜ் ஆரெண்டாரிஜ் & ஜோனாதன் மோர்டக் சிற்றளவுப் பொருளுதவியின் பொருளாதாரம் , தி எம்ஐடி பிரஸ், கேம்ப்ரிட்ஜ், மசாசூசெட்ஸ், 2005.
  • பிரான்ச், ப்ரயான் & ஜேனட் க்லேஹான். சிற்றளவுப் பொருளுதவியில் சமன்பாட்டை நிலை நிறுத்டுவது: சேமிப்பு உருவாக்கத்திற்கான ஒரு நடைமுறைக் கேயேடு .

பாக்ட் பப்ளிகேஷன்ஸ், வாஷிங்டன், 2002.

  • க்ரிஸ்டென், ராபர்ட் பெக், ஜெயதேவா, வீணா & ரிச்சர்ட் ரோசன்பெர்க்.இரு கீழ்மட்ட நிலை கொண்ட நிதி நிறுவனங்கள் . கன்சுலேடி க்ருப் டு அசிஸ்ட் தி புவர், வாஷிங்டன், 2004.
  • டிக்டெர், தாமஸ் மற்றும் மால்கம் ஹார்பர் (ஈடிஎஸ்). சிற்றளவுப் பொருளுதவியில் என்ன கோளாறு? நடைமுறைச் செயல்பாடு, 2007.
  • டௌலா, ஆசிஃப் & டிபால் பருவா ஏழைகள் எப்போதும் கடனைத் திருப்பி விடுகிறார்கள்: தி க்ராமீன் கதை II. குமாரியன் பிரஸ் இங்க், ப்ளூம்ஃபீல்ட், கனெக்டிகட்,2006.
  • கிப்ஸன், டேவிட். தி க்ராமீன் ரீடர் . க்ராமீன் வங்கி, டாக்கா, 1992.
  • ஹெல்ம்ஸ், ப்ரைட். எல்லோருக்குமான அணுகல்: உள்ளீடான நிதி அமைப்பைக் கட்டமைத்தல் கன்சுலேடிவ் க்ரூப் டு அசிஸ்ட் தி புவர், வாஷிங்டன், 2006.
  • ஹிர்ஷ்லேண்ட், மெடலின் (ஈடி) ஏழைகளுக்கான சேமிப்பு சேவைகள்: ஒரு செயல்முறை வழிகாட்டி . குமாரியன் பிரஸ் இங்க்., ப்ளூம்ஃபீல்ட் சிடி, 2005.
  • காண்ட்கர், ஷஹிடுர் ஆர் சிற்றளவுக் கடன் கொண்டு வருமையுடன் போராடுதல் , பங்களாதேஷ் பதிப்பு, தி யூனிவர்சிடி பிரஸ் லிமிடட், டாக்கா, 1999.
  • லெட்ஜர் வுட், ஜோன்னா மற்றும் விக்டோரியா ஒயிட். சிற்றளவுப் பொருளுதவி நிறுவனங்களை உருமாற்றம் செய்தல்: ஏழைகளுக்கு முழு அளவு நிதிச் சேவை அளித்தல். உலக வங்கி, 2006.
  • மேஸ், இக்னேஷியோ மற்றும் கபிர் குமார் தானியங்கிகள் தொடர்பான வங்கியியல்: ஏன், எப்படி மற்றும் யாருக்காக? சிஜிஏபி ஃபோகஸ் நோட், #48, ஜூலை, 2008.
  • ராய்ஃபெய்ஸென், எஃப் டபிள்யூ (ஜெர்மன் மொழியிலிருந்து கோன்ராட் ஏங்கல்மேன் மொழியாக்கம் செய்தது). கடனாளர் கூட்டு தி ராய்ஃபெய்ஸென் ப்ரிண்டிங் & பப்ளிஷிங் கம்பெனி, ந்யூவெய்ட் ஆன் தி ரைன், ஜெர்மனி, 1970.
  • ரூதர்ஃபோர்ட், ஸ்டூவர்ட் ஏழைகளும் அவர்கள் பணமும் ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிடி பிரஸ், டெல்லி, 2000.
  • வோல்ஃப், ஹென்ரி டபிள்யூ. மக்களின் வங்கிகள்: சமூக மற்றும் பொருளாதார வெற்றியின் ஒரு பதிவு.

பி.எஸ்.கிங் & சன், லண்டன், 1910.

  • மைம்போ, சாமுவேல் முஞ்ஜெல் & திலிப் ரடா (ஈடிஎஸ்) செலுத்துதல்கள்: மேம்பாட்டில் தாக்கமும் எதிர்கால வாய்ப்புகளும் உலக வங்கி, 2005.
  • ரிட், க்ரஹாம் ஏ.என். சிற்றளவுப் பொருளுதவி அமைப்புகள்:ஏழைகளுக்கான தரமான நிதிச் சேவைகளை வடிவமைத்தல் தி யூனிவர்சிடி பிரஸ், டாக்கா, 2000.
  • யுனைடட் நேஷன்ஸ் பொருளாதார அலுவல்கள் பிரிவு மற்றும் யுனைடட் நேஷன்ஸ் மேம்பாடு நிதி. மேம்பாட்டிற்காக உள்ளீடான நிதித் துறைகளைக் கட்டமைத்தல் யுனைடட் நேஷன்ஸ், நியூயார்க், 2006.
  • யூனுஸ், முகம்மது. வறுமையில்லா உலகத்தை உருவாக்குவது: சமூக வாணிபமும், முதலாளித்துவத்தின் எதிர்காலமும். பப்ளிக் அஃபேர்ஸ், நியூயார்க், 2008.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

  1. ராபர்ட் க்ரிஸ்டன், ரிச்சர்ட் ரோசன்பெர்க் & வீணா ஜெயதேவா. இரு கீழ்மட்ட நிலை கொண்ட நிதி நிறுவனங்கள்: சிற்றளவு பொருளுதவிக்கான எதிர்காலத்தின் மேல் பாதிப்புக்கள் சிஜிஏபி தற்காலிகத் தாள், ஜூலை 2004, பிபி. 2-3.
  2. ஹெர்னாண்டோ டீ சோடோ இன்னொரு பாதை: மூன்றாவது உலகில் கண்ணுக்குத் தெரியாத புரட்சி.ஹார்பர் & ரோ பப்ளிஷர்ஸ், நியூ யார்க், 1989, ப. 162.
  3. 3.0 3.1 ஆடம்ஸ், டலே டபிள்யு., டௌக்ளாஸ் ஹெச். க்ரஹாம் & ஜே. டி. வான் பிஷ்ச்க் (இடிஎஸ்.). மலிவான கடனுதவியால் கிராமப்புற மேம்பாட்டைக் குறைத்து மதிப்பிடுதல் வெஸ்ட்வ்யூ ப்ரஸ், பௌல்டர் & லண்டன், 1984.
  4. மார்கரெட் ராபின்ஸன். சிற்றளவுப் பொருளுதவிப் புரட்சி: ஏழைகளுக்கான தொடர் தாங்கு திறன் கொண்ட நிதியுதவி உலக வங்கி, வாஷிங்டன், 2001, பிபி. 199-215.
  5. 5.0 5.1 Helms, Brigit (2006). Access for All: Building Inclusive Financial Systems. Washington, D.C.: The World Bank. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0821363603. 
  6. 6.0 6.1 சிற்றளவுப் பொருளுதவி : உருவாகி வரும் மூலதன வாய்ப்பு. டச் வங்கி டிசம்பர் 2007
  7. http://www.citigroup.com/citigroup/microfinance/tata/news080303.pdf
  8. ஹெல்ம்ஸ் (2006), ப.xi
  9. 9.0 9.1 9.2 ஹெல்ம்ஸ் (2006), ப.xii
  10. ராபர்ட் பெக் க்ரிஸ்டன். வட்டிக்காரர்களிடமிருந்து சிற்றளவுக் கடனுதவி நிறுவனங்கள் என்ன கற்றுக் கொளளலாம் , ஆக்கியன் இண்டர்நேஷனல்,1989
  11. உதாரணத்திற்கு ஏட்ரியன் கோன்ஸாலெஸ் & ரிச்சர்ட் ரோசன்பெர்க். சிற்றளவுப் பொருளுதவி யின் நிலை: அணுகும் முறைமை, லாபத்தன்மை மற்றும் வறுமை , கன்சுலேடிவ் க்ரூப் டி அசிஸ்ட் தி புவர், 2006.
  12. சிற்றளவுப் பொருளுதவி தகவல் பரிமாற்றம். சிற்றளவு வங்கியிதழ் இதழ் #15, வேனிற்காலம், 2007, பிபி. 46,49
  13. McKenzie, David (2008-10-17). "Comments Made at IPA/FAI Microfinance Conference Oct. 17 2008". Philanthropy Action. Archived from the original on 2009-01-05. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  14. } எ.கா::செரில் ஃப்ராங்கிவ்ஜ்கேல்மெடோவ் நகர்ப்புற நிதி: தொடர் தாங்குதிறன் கொண்ட சிற்றளவுப் பொருளுதவி பற்றிய ஒரு கனடா சோதனை , கேல்மெடோவ் ஃபௌண்டேஷன்,2001.
  15. ஸ்டூவர்ட் ரூதர்வோர்ட். ஏழைகளும் அவர்களுடைய பணமும் ஆக்ஸ்வேர்ட் யூனிவர்சிடி பிரஸ், புது தில்லி, 2000, பி. 4. ஐஎஸ்பிஎன் =019565790எக்ஸ்.
  16. காந்தஹார், ஷாஹிதுர் ஆர்.சிற்றளவுக் கடன் மூலம் ஏழ்மையுடன் போராடுவது , பங்களாதேஷ் பதிப்பு, யுனிவர்சிடி பிரஸ் லிமிடெட், டாக்கா, 1999, ப. 78.
  17. க்ரஹாம் ஏ.என். ரைட் மற்றும் லியோனார்ட் முடெசாசிரா. ஏழைகளின் சேமிப்பு தொடர்பான ஆபத்துக்கள் ,மைக்ரோ-சேவ், ஆப்பிரிக்கா,ஜனவரி, 2001.
  18. ராபர்ட் பெக் க்ரிஸ்டன், ரிச்சர்ட் ரோசன்பெர்க் & வீணா ஜெயதேவா. இரு கீழ்மட்ட நிலை கொண்ட நிதி நிறுவனங்கள்: சிற்றளவு பொருளுதவிக்கான எதிர்காலத்தின் மேல் பாதிப்புக்கள். சிஜிஏபி அக்கேஷனல் பேப்பர், ஜூலை 2004.
  19. க்ரிஸ்டன், ரோசன்பெர்க் & ஜெயதேவா. இரு கீழ்மட்ட நிலை கொண்ட நிதி நிறுவனங்கள் , பிபி. 5-6
  20. சிற்றளவு வங்கியிடல் அறிக்கை #15, சிற்றளவுப் பொருளுதவி தகவல் பரிமாற்றம், 2007, பிபி. 30-31.
  21. உதாரணத்திற்குப் பார்க்கவும் ஜோசிம் டெ வீர்டிட், ஸ்டீஃபன் டெர்கான், டெஸ்ஸா போல்ட் மற்றும் அலுலா பங்கர்ஸ்ட், எதியோப்பியாவிலும் தான்சேனியாவிலும் உறுப்பினர்-அடிப்படையிலான உள் நாட்டு காப்பீடு கழகங்கள் பரணிடப்பட்டது 2010-07-10 at the வந்தவழி இயந்திரம் மற்றவைகளுக்குக் காண்க ரோஸ்கா.
  22. ப்ரிஜிட் ஹெல்ம்ஸ். எல்லோருக்குமான அணுகல்:உள்ளீடான நிதி அமைப்புக்களைக் கட்டமைத்தல்சிஜிஏபி/உலக வங்கி, வாஷிங்டன், 2006, பிபி. 35-57.
  23. ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.மைக்ரோக்ரெடிட்சம்மிட்.ஓஆர்ஜி/பியூபிஎஸ்/ரிபோர்ட்ஸ்/எஸோசியார்/2007.ஹெச்டிஎம்எல்[தொடர்பிழந்த இணைப்பு] ஸ்டேட் ஆஃப் தி மைக்ரோகிரெடிட் சம்மிட் காம்பெயின் ரிபோர்ட் 2007 மைக்ரோகிரெடிட் சம்மிட் வாஷிங்டன், 2007.
  24. ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.பாலிசி.ஓஆர்ஜி/வொர்க்கிங்[தொடர்பிழந்த இணைப்பு] ஃபைல்ஸ்/டவுன்லோட்ஸ்/சௌத்-ஆஃப்ரிகா-கம்ப்ரெஸ்ட்-வெப்.பிடிஎஃப் டர்னர், மைக்கேல், ராபின் வர்கீஸ் மற்றும் பலர். தெற்கு ஆப்பிரிக்காவில் தகவல் பகிர்வும் எஸ்எம்எம்ஈ பொருளுதவியும் , பொலிடிகல் அண்ட் எகனாமிக் ரிசர்ச் கௌன்சில் (பிஈஆர்சி), ப58.]
  25. டச் வங்கி ஆராய்ச்சி, சிற்றளவுப் பொருளுதவி: முதலீட்டுக்கான உருவாகி வரும் ஒரு வாய்ப்பு, டிசம்பர் 0207, ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.டிபிரிசர்ச்.காம்/பிஆர்ஓடி/டிபி[தொடர்பிழந்த இணைப்பு] ஆர்_இண்டர்நெட்_ஈஎன்-பிஆர்ஓடி/பிஆர்ஓடி0000000000219174.பிடிஎஃப்
  26. சமீபத்திய செய்தித்தாளில் பார்க்கவும், [1] பரணிடப்பட்டது 2009-03-25 at the வந்தவழி இயந்திரம்"சிற்றளவுப் பொருளுதவியில் நமக்கு ஏன் திறந்த முறை விலையமைப்பு தேவைப்படுகிறது" நிலைமாறா வட்டி விகிதப் பிரச்சினைகளின் வெளிப்பாடுகள் பற்றி.
  27. Dichter, T. "Hype and Hope: The Worrisome State of the Microcredit Movement". Consultative Group to Assist the Poor (CGAP).
  28. Littlefield, Elizabeth; Morduch, Jonathan and Hashemi, Syed (2003-01-01). "Is Microfinance an Effective Strategy to Reach the Millennium Development Goals?" (pdf). FocusNote (Consultative Group to Assist the Poor) (24). http://www.cgap.org/docs/FocusNote_24.pdf. பார்த்த நாள்: 2007-03-27. 
  29. Morduch, Jonathan (2008-10-17). "Comments Made at IPA/FAI Microfinance Conference Oct. 17 2008". Philanthropy Action. Archived from the original on 2008-10-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  30. வெஸ்டோவர், ஜே. (2008). சிற்றளவுப் பொருளுதவிப் பதிவேடு: வறுமையை ஒழிக்கும் ஒரு வழியாக சிற்றளவுப் பொருளுதவியின் திறன்/ திறன் இன்மை பரணிடப்பட்டது 2008-10-01 at the வந்தவழி இயந்திரம். எலெக்ட்ரானிக் ஜர்னல் ஆஃப் சோஷியாலஜி .
  31. கார்லன் டி, வால்டிவியா எம். (2009). தொழில் முனைமையைக் கற்பித்தல்: சிற்றளவுப் பொருளுதவி வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது வணிகப் பயிற்சியின் தாக்கம்[தொடர்பிழந்த இணைப்பு]. இன்னோவேஷன்ஸ் ஃபார் பாவர்டி ஆக்ஷன்
  32. கிம், ஜே.சி., வாட்ஸ், சி.ஹெச்., ஹார்க்ரீவஸ், ஜே. ஆர்., நித்லோவு, எல். எக்ஸ், ஃபெட்லா, ஜி., மோரிசன், எல்.ஏ. மற்றும் பலர் (2007). தெற்கு ஆப்பிரிக்காவில் பெண்கள் பெற்ற செயலுரிமை மற்றும் நெருங்கிய துணையின் மீதான வன்முறைக் குறைவு ஆகியவற்றின் அடிப்படையில் சிற்றளவுப் பொருளுதவியின் தாக்கத்தை புரிந்து கொள்ளுதல். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்.
  33. டீன் கார்லான் மற்றும் மார்ட்டின் வால்டிவியா, தொழில் முனைவருக்கான பயிற்சி:சிற்றளவுப் பொருளுதவி, வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வணிகப் பயிற்சியின் தாக்கம் (யேல் யூனிவர்சிடி, மே 2009).
  34. ஸ்டீஃபன், சி. ஸ்மித், "கிராமப்புற வங்கியியலும், தாய் சேய் ஆரோக்கியமும்: ஈக்வடார் மற்றும் ஹொண்டுராக்களிலிருந்தான ஆதாரம்," வேர்ல்ட் டெவலப்மெண்ட்,30, 4, 707 723, ஏப்ரல் 2002.
  35. மைக்ரோஃபைனான்ஸ் இன்ஃபர்மேஷன் எக்சேஞ்ஜ் இங்க், மைக்ரோபேங்கிங் புலடின் , இதழ் #15, வேனிற்காலம், 2007, ப. 48.
  36. முகம்மது யூனுஸ் மற்றும் கார்ல் வெபர். வறுமையில்லா உலகத்தை உருவாக்குவது: சமூக வாணிபமும், முதலாளித்துவத்தின் எதிர்காலமும் . பப்ளிக் அஃபேர்ஸ், நியூயார்க், 2007.
  37. ப்ரைட் ஹெல்ம்ஸ். எல்லோருக்குமான அணுகல்: உள்ளீடான நிதி அமைப்பைக் கட்டமைத்தல். சிஜிஏபி/ உலக வங்கி,வாஷிங்டன், 2006, ப.97
  38. ஃபரூக் சௌத்ரி. சிற்றளவுக் கடனாளரின் உருமாற்றம் பரணிடப்பட்டது 2008-04-10 at the வந்தவழி இயந்திரம் நியூ ஏஜ், ஜூன்,24, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

Microfinance திறந்த ஆவணத் திட்டத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநிதி&oldid=3788841" இலிருந்து மீள்விக்கப்பட்டது