ஜான் ஐசக் (ஒளிப்படக்கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஐசக் 2019 இல்

ஜான் ஐசக் (1943 - 2023) என்பவர் இந்தியாவில் பிறந்த ஒளிப்படக் கலைஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தனது தொழில் மற்றும் வாழ்க்கையின் மேம்பட்ட நிலைக்காக நியூயார்க் நகரில் வாழ்ந்தார். ஐக்கிய நாடுகள் அவையின் ஒளிப்படப்பட பத்திரிக்கையாளராக பணியாற்றியதற்காக அறியப்படுவதோடு மட்டுமல்லாமல், ஆட்ரி ஹெப்பர்ன் மற்றும் மைக்கல் ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்களை ஒளிப்படம் எடுத்த சுயாதீனமானக் கலைஞராகவும் இவர் அறியப்படுகிறார். ஐநாவில் பணி ஓய்வு பெற்ற பிறகு, இவர் முதன்மையாக காட்டுயிர் மற்றும் பயண ஒளிபடக் கலைஞராக மாறினார்.

துவக்க வாழ்க்கை[தொகு]

ஜான் ஐசக் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூருக்கு அருகே உள்ள இருங்களூர் என்ற சிற்றூரில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள புதுக் கல்லூரியில் விலங்கியல் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இசைக்கனவுகளுடன் அமெரிக்காவுக்கு வந்தடைந்தார். கிடாருடன் அமெரிக்கத் தெருக்களில் இசைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஐ.நாவில் பணிபுரியும் ஒரு பெண் இவரை ஐ.நா பாடகர் குழுவில் சேர்த்துவிட்டார். [1]

தொழில்[தொகு]

பின்னர் ஐசக் ஐ.நாவில் தகவல் கொண்டு சேர்ப்பவராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இருண்ட அறை தொழில்நுட்ப வல்லுநராகவும், இறுதியில் ஒளிப்பட பத்திரிகையாளராகவும் மாறினார். இவர் 20 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பை வகித்தார். 1998 இல் ஐ.நா.வில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒளிப்படப் பிரிவின் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.

2008 ஆம் ஆண்டில், காஷ்மீரின் மக்கள் மற்றும் நிலப்பரப்பு பற்றிய தி வேல் ஆஃப் காஷ்மீர் என்ற புத்தகத்தை இணைந்து எழுதினார். [2] 2009 ஆம் ஆண்டில், அவுட்டோர் ஃபோட்டோகிராஃபர் இதழ் இவரது புத்தகத்தைப் பற்றியும் இவரைப் பற்றியும் ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது, அதில் "குறிப்பாக பணி ஓய்வு பெற்ற ஒளிப்படக் கலைஞருக்கு இந்த புத்தகம் ஒரு கடினமான பணியாக இருந்திருக்கும்." என்றது. [3]

2002 ஆம் ஆண்டில், தி வாசிங்டன் போஸ்ட் ஆப்பிரிக்காவில் இவரால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை நாளிதழிலும் அதன் இணையதளத்திலும் வெளியிட்டது. [4]

மிக அண்மையில், ஆட்ரி ஹெப்பர்னின் வாழ்க்கையைப் பற்றிய 2021 ஆவணப்படத்தில் ஜான் தோன்றினார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. அஞ்சலி: ஜான் ஐசக் 1943 - 2023 உயிர் மலரும் கலை, இந்து தமிழ் திசை ஜெயக்குமார், 5, நவம்பர் 2023
  2. Amazon.com The Vale of Kashmir, book page
  3. Outdoor Photographer, "In the Valley of Kashmir," June 9, 2009
  4. Washington Post, "A Day in the Life of Africa," John Isaac
  5. Felperin, Leslie (2020-12-17). "'Audrey': Film Review" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.

வெளி இணைப்புகள்[தொகு]