ஜவஹர் நவோதயா வித்யாலயா, காரைக்கால்

ஆள்கூறுகள்: 10°58′20″N 79°49′37″E / 10.97222°N 79.82694°E / 10.97222; 79.82694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவஹர் நவோதயா வித்யாலயா, காரைக்கால்
ஜெ என் வி வரிச்சிக்குடி
அமைவிடம்
இந்தியாவில், ஜெ என் வி காரைக்கால் அமைவிடம்
இந்தியாவில், ஜெ என் வி காரைக்கால் அமைவிடம்
JNV Karaikal
இந்தியாவில், ஜெ என் வி காரைக்கால் அமைவிடம்
இந்தியாவில், ஜெ என் வி காரைக்கால் அமைவிடம்
JNV Karaikal
இராயனல்லயம், வரிச்சிக்குடி, காரைக்கால் மாவட்டம்
புதுச்சேரி ஒன்றியம், 609609
இந்தியா
அமைவிடம்10°58′20″N 79°49′37″E / 10.97222°N 79.82694°E / 10.97222; 79.82694
தகவல்
வகைபொது
குறிக்கோள்Pragyanam Brahma
(Consciousness is Brahman)
தொடக்கம்1986
அதிபர்பி. ஹெலன் மேரி
துணை முதல்வர்ஆர் கமலம்
பணிக்குழாம்17
பீடம்23
தரங்கள்VI - XII
மொத்த சேர்க்கை372 (2018)
Campus typeகிராமப்புறம்
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

ஜவஹர் நவோதயா வித்யாலயா, காரைக்கால் (Jawahar Navodaya Vidyalaya, Karaikal)அல்லது ஜெ என் வி வரிச்சிக்குடி என்பது இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இருபாலர் உறைவிடப் பள்ளியாகும். நவோதயா பள்ளிகள் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சினால் நிதியின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலயா ஸ்மிதியால் நிர்வகிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான திறமையான குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்குகின்றன.[1] காரைக்கால் மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் கடற்கரை சூழ்ந்த ஒன்றிய தலைமையகமான புதுச்சேரியிலிருந்து 132 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்த பள்ளியானது 1986-ல் நிறுவப்பட்டது. இது ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் ஒரு பகுதியாகும். இந்த பள்ளி நவோதயா வித்யாலயா ஸ்மிதியின் ஐதராபாத்து பிராந்திய அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.[2]

சேர்க்கை[தொகு]

ஆறாம் வகுப்பிலிருந்து ஜே.என்.வி காரைக்கால் பள்ளியில் மாணவர் சேர்க்கை நவோதயா வித்யாலயா ஸ்மிதி நடத்தும் நாடு தழுவிய போட்டித் தேர்வின் மூலம் நடைபெறுகிறது. இத்தேர்வு தொடர்பான அறிவிப்பு, ஜே.என்.வி காரைக்காலின் வித்யாலியா மேலாண்மைக் குழுவின் தலைவரான காரைகால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தால் மாவட்டத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது.

இணைப்பு[தொகு]

ஜே.என்.வி காரைக்கால் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைப்பு எண் 2940002 உடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Navodaya Vidyalaya Smiti". Navodaya Vidyalaya Smiti. பார்க்கப்பட்ட நாள் 1 Dec 2018.
  2. "NVS RO Hyderabad - JNVs in Union territorries". NVS RO Hyderabad. Archived from the original on 1 December 2018. பார்க்கப்பட்ட நாள் 25 Feb 2019.
  3. "CBSE affiliation details of JNV Karaikal". CBSE - Online School Affiliation & Monitoring System. Archived from the original on 1 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 Dec 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]