உள்ளடக்கத்துக்குச் செல்

ஜமிலுதீன் ஆலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவாப்சதா மிர்சா ஜமீலுதீன் அகமது கான் (Nawabzada Mirza Jamiluddin Ahmed Khan உருது: نوابزادہ مرزا جمیل الدین احمد خان‎ ) (20 ஜனவரி 1925 – 23 நவம்பர் 2015) பரவலாக ஜமீலுதீன் ஆலி என பரவலாக அறியப்படும் இவர் ஒரு முன்னாள் பாகிஸ்தானிய கவிஞர், விமர்சகர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கட்டுரையாளர், மற்றும் அறிஞர் ஆவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

நவாப்சதா மிர்சா ஜாமிலுதீன் அஹ்மத் கான் 20 ஜனவரி 1925 அன்று இந்தியாவின் டெல்லியில் ஒரு இலக்கியக் குடும்பத்தில் பிறந்தார்.[1] அவரது தந்தை அமிருதீன் அகமது கான் லாசருவின் நவாபாக இருந்தவர். மற்றும் அவரது தாயார் சையது ஜமீலா பேம் கவாஜா மீர் தர்த் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.[2] அலி 1944 ஆம் ஆண்டில் டெல்லியின் ஆங்கிலோ அரபு கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம். பெற்றார். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டில் அலி தனது குடும்பத்துடன் ஆகஸ்ட் 13, 1947 அன்று பாகிஸ்தானின் கராச்சிக்கு குடிபெயர்ந்தார் .அதன் பின்னர் இவர் வர்த்தக அமைச்சரவையில் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1951 ஆம் ஆண்டில் இவர் பாகிஸ்தானின் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பாகிஸ்தான் வரிவிதிப்பு துறையில் பணியில் சேர்ந்தார். 1959 முதல் 1963 வரை குடியரசுத் தலைவர் இல்லத்தில் இவர் சிறப்பு அதிகாரியாகவும் பணி புரிந்தார். ஆலி 1967 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் தேசிய வங்கியில் பணியில் சேர்ந்தார் .1988 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை அதன் துணைத் தலைவராக இருந்தார். 1971 ஆம் ஆண்டில், கராச்சி பல்கலைக்கழகத்தில் எஃப் இ எல் மற்றும் எல் எல் பி (சட்டம்) பட்டங்களைப் பெற்றார்.

பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். 1977ம் ஆண்டு பாகிஸ்தான் தேசிய சட்ட மன்றத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட வேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது. ஆனால் அந்தத் தெர்தலில் இவர் ஜமாத் -இ- இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த முன்னாவர் அசனிடம் இவர் தோல்வி கண்டார். 1997 ஆம் ஆண்டில், முத்தாஹிதா கவாமி இயக்கத்தின் ஆதரவோடு ஆலி ஆறு ஆண்டு காலத்திற்கு செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஜமிலுதீன் ஆலி 1944 இல் தய்பா பானோவை மணந்தார். அவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்.[1]

இறப்பு

[தொகு]

ஆலி நீரிழிவு மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 நவம்பர் 2015 அன்று கராச்சியில் மாரடைப்பால் இறந்தார்.[4][5] இவர் நவம்பர் 23, 2015 அன்று கராச்சியின் இராணுவ மயானமான பிசெர்டா லைன்ஸில் அடக்கம் செய்யப்பட்டார்.[6][7]

பயண இலக்கியம்

[தொகு]

துனியா மேரே ஆகியே, தமாஷா மேரே ஆகியே, ஐஸ்லாந்து ( ஐஸ்லாந்தின் பயணக் குறிப்பு) [8], ஹர்பே (நான்கு புத்தகங்கள்) ஆகிய பயண நூல்களை எழுதினார்.

விருதுகள்

[தொகு]

பாகிஸ்தான் குடியர்சுத் தலைவரிடம் இருந்து ஹிலால்-இ-இம்தியாஸ் விருதினை இவர் 2004 ஆம் ஆண்டில் பெற்றார்.[4][8]

1991 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் குடியரசுத் தலைவரிடம் செயல்திறன் பெருமை விருதும், 1960 இல் ஆடம்ஜி இலக்கிய விருது மேலும் 1963 இல் தாவூத் இலக்கிய விருதும் 1965 ஆம் ஆண்டில் யுனைடெட் வங்கி இலக்கிய விருதும், ஹபீப் வங்கி இலக்கிய விருதும் பெற்றார். 1988 இல் கனடிய உருது அகாடமி விருது , 1989 இல் சாந்த் கபீர் விருது - உருது மாநாடு டெல்லி ஆகிய விருதுகளைப் பெற்றார்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Hasanat, Abul (24 November 2015). "Jamiluddin Aali — a man in search of identity". The Express Tribune. பார்க்கப்பட்ட நாள் 24 August 2018.
  2. "Aali turns 90 today". DAWN. 20 January 2015. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  3. "DAWN - Features; June 05, 2008". DAWN. 5 June 2008. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  4. 4.0 4.1 "Poet Jamiluddin Aali passes away in Karachi". The Express Tribune. 23 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  5. Khwaja Daud (23 November 2015). "Renowned poet, columnist Jamiluddin Aali dies in Karachi". Daily Pakistan. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  6. "Jamiluddin Aali laid to rest in army graveyard". The News. 25 November 2015. Archived from the original on 26 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  7. "Aaliji laid to rest". DAWN. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  8. 8.0 8.1 "'Jeevay Jeevay, Pakistan': Poet of Pakistan — Jamiluddin Aali". Daily Times (Pakistan). 24 November 2015. Archived from the original on 25 November 2015. பார்க்கப்பட்ட நாள் 24 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமிலுதீன்_ஆலி&oldid=3572890" இலிருந்து மீள்விக்கப்பட்டது