உள்ளடக்கத்துக்குச் செல்

ஜப்பானிய நீர் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜப்பானிய நீர் மூஞ்சூறு
Japanese water shrew
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
யூலிப்போடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
இனம்:
சி. பிளாட்டிசெபாலசு
இருசொற் பெயரீடு
சிமரோகலே பிளாட்டிசெபாலசு
தெமினிக் 1842
ஜப்பானிய நீர் மூஞ்சூறு பரம்பல்

ஜப்பானிய நீர் மூஞ்சூறு (Japanese water shrew)(சிமரோகலே பிளாட்டிசெபாலசு), தட்டையான தலையுடைய நீர் மூஞ்சூறு என்றும் அழைக்கப்படுகிறது. இது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி இனமாகும். இது யப்பானில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.[1]

விளக்கம்[தொகு]

ஜப்பானிய நீர் மூஞ்சூறு சுமார் 11 முதல் 14 cm (4 முதல் 6 அங்) 8 முதல் 12 cm (3 முதல் 5 அங்) வால் நீளத்துடன் 25 முதல் 63 கிராம்கள் (0.88 முதல் 2.22 oz) எடையுடையது. மூஞ்சூறுக்களில் இது பெரிய அளவுடையது எனப்படுகிறது.[2] தலையின் பின்பகுதியில் அடர்த்தியான சிறு உரோமங்கள் காணப்படும். இவை சாம்பல்-கருப்பு நிறத்தில் காணப்படும். அடிப்பகுதியானது அழுக்கு வெள்ளை நிறத்தில் மேற்பரப்பில் நன்றாக அறியும் வண்ணம் வரையறுக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இவை துருப்பிடித்த பழுப்பு நிறத்தில் இருக்கும். எப்போதாவது முற்றிலும் அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணுக்குப் பின்னால் ஒரு வெள்ளைப் புள்ளி உள்ளது. மேலும் சிறிய, வட்டமான புள்ளி காதுக்கு அருகில் உள்ளது. இது உரோமத்தினுள் மறைந்திருக்கும். மூக்கு கறுப்பாகவும், மூஞ்சி நீளமாகவும், குறுகியும் காணப்படும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Iwasa, Masahiro A.. "Habitat characteristics of the Japanese water shrew, Chimarrogale platycephalus" Mammalia, vol. 83, no. 3, 2019, pp. 255-259. https://doi.org/10.1515/mammalia-2017-0151
  2. Abe, H., H. Saito and M. Motokawa. 2015. Chimarrogale platycephalus. In: (S.D. Ohdachi, Y. Ishibashi, M.A. Iwasa, D. Fukui and T. Saitoh, eds.) The Wild Mammals of Japan. Shoukadoh Book Sellers, Kyoto, pp. 16-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜப்பானிய_நீர்_மூஞ்சூறு&oldid=3140161" இலிருந்து மீள்விக்கப்பட்டது