உள்ளடக்கத்துக்குச் செல்

ஜக்மோகன் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜக்மோகன் கவுர்
இயற்பெயர்ਜਗਮੋਹਣ ਕੌਰ
இயற்பெயர்ਜਗਮੋਹਣ ਕੌਰ
பிற பெயர்கள்மை மோக்னா
பிறப்பு(1948-04-16)16 ஏப்ரல் 1948
பட்டான்கோட் பஞ்சாப், இந்தியா
இறப்பு6 திசம்பர் 1997(1997-12-06) (அகவை 49)
லூதியானா, பஞ்சாப், இந்தியா
இசை வடிவங்கள்நாட்டுப்புறப் பாட்டு, இணைந்து பாடுவது, நகைச்சுவை
தொழில்(கள்)பாடுதல், நடிகர், ஆசிரியர், நகைச்சுவை நடிகை
இணைந்த செயற்பாடுகள்
கே. தீப் (தி. 1971⁠–⁠1997)

ஜக்மோகன் கவுர் (Jagmohan Kaur) (பிறந்தது: 1948 ஏப்ரல் 16- இறந்தது: 1997 திம்பர் 16 இவர் ஓர் பஞ்சாபி பாடகராவார் [1] [2] பாபு வே ஆட் ஹுன்னி ஐன், காரா வஜ்ஜ்தா, கரோலி வஜ்ஜி போன்ற பாடல்களால் இவர் நன்கு அறியப்படுகிறார்.

தொழில்

[தொகு]

இவர் தனது கணவர், பாடகர் கே. தீப்புடன் இணைந்து பாடிவருகிறார். இந்த இணை நகைச்சுவை கதாபாத்திரங்களான மை மோஹ்னோ மற்றும் போஸ்டிக்கு நன்கு அறியப்பட்டவர்கள். இருவரின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் பூட்னா என்பதாகும். தாஜ் (1976), முட்டியார் (1979) மற்றும் துஷ்மணி டி ஆக் (1990) போன்ற சில பஞ்சாபி படங்களில் இவர் நடிதுள்ளார். சுகி பர்வார் (1980) மற்றும் தோ ஜட்டியன் உள்ளிட்ட பலருக்கும் இவர் பின்னணி பாடகியாக பாடியுள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

கவுர் 1948 ஏப்ரல் 16, அன்று பஞ்சாபின் பதான்கோட்டில் குர்பச்சன் சிங் காங் மற்றும் தாய் பிரகாஷ் கவுர் காங் ஆகியோருக்குப் பிறந்தார். [1] இவர் தனது சொந்த கிராமமான பூர் மஜ்ராவில் (இப்போது ரூப்நகர் மாவட்டம் ) வளர்ந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கிராமப் பள்ளியிலிருந்து பெற்றார். பின்னர் அவர் குரளி கல்சா உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மொகாலி, கரார் ஆர்யார் பயிற்சிப் பள்ளியிலும் சேர்ந்தார். சண்டிகருக்கு அருகிலுள்ள மணி மஜ்ராவில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

கன்வார் எஸ். மொஹிந்தர் சிங் பேடியிடமிருந்து இசையைக் கற்றுக் கொண்டார். [1] பின்னர், இவர் தனது வேலையை விட்டுவிட்டு பாடத் தொடங்கினார்.

கல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பாடகர் கே. தீப்பை சந்தித்தார். அவர்கள் 1971 பிப்ரவரி 2, அன்று திருமணம் செய்து கொண்டு தங்கள் சொந்த குழுவை உருவாக்கினர். [1] தம்பதியருக்கு "பில்லி" குர்பிரீத் கவுர் மடா என்ற மகள் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ਥੂਹੀ, ਹਰਦਿਆਲ (14 March 2015). "'ਬਾਪੂ ਵੇ ਅੱਡ ਹੁੰਨੀ ਆਂ' ਵਾਲੀ ਜਗਮੋਹਣ ਕੌਰ". Punjabi Tribune. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
  2. "K. Deep & Jagmohan Kaur". Last.fm. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்மோகன்_கவுர்&oldid=3028852" இலிருந்து மீள்விக்கப்பட்டது