சோனம் மாலிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனம் மாலிக்கு
Sonam Malik
Sonam Malik.jpg
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு15 ஏப்ரல் 2002
மதினா கிராமம், சோனிபத், அரியானா
விளையாட்டு
விளையாட்டுமல்யுத்தம்

சோனம் மாலிக்கு (Sonam Malik) இந்தியாவிலுள்ள அரியானா மாநிலத்தின் சோனிபட்டு நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண் மல்யுத்த வீரராவார் . தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். உலகப் படைப்பயிற்சி மல்யுத்த வெற்றியாளர் போட்டிகளில் இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்களை சோனம் வென்றுள்ளார். 2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

சோனம் மாலிக்கு 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 அன்று அரியானாவின் சோனிபட்டு நகரத்திற்கு அருகிலுள்ள மதீனா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையும் உறவினரும் மல்யுத்த வீரர்களாவர். இதன் காரணமாக சோனம் மல்யுத்த விளையாட்டைத் தேர்ந்தெடுத்தார். தனது கிராமத்தில் உள்ள நேதாச்சி சுபாசு சந்திரபோசு விளையாட்டு வளாகத்தில் பயிற்சியாளர் அச்மீர் மாலிக்கிடம் சோனம் பயிற்சிக்காகச் சேர்ந்தார். வசதிகள் போதுமானதாக இல்லை என்பதால் பயிற்சிப் பள்ளி வீரர்கள் தரையில் பயிற்சி பெற்றனர். மழை நாட்களில் மைதானம் சேறும் சகதியுமாக மாறும். இதனால் வீரர்கள் சாலைகளில் பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பயிற்சி பெற்றனர்.[1]

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு போட்டியில் இவர் தோளில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை சுமார் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்தது. மாலிக் தனது விளையாட்டு வாழ்க்கைக்கு மேலதிகமாக தற்போது தனது இளங்கலை பட்டத்தையும் படித்து வருகிறார் .[2]

விளையாட்டு வாழ்க்கை[தொகு]

மாலிக் 2016 இல் நடந்த தேசிய பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 2017 ஆம் ஆண்டில், படைப்பயிற்சியாளர்களுக்கான தேசிய வெற்றியாளர் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். உலக பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம், படைப்பயிற்சியாளர்களுக்கான ஆசிய மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் படைப்பயிற்சி உலக மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் தங்கப் பதக்கம் என பல பதகங்களை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டிலும் படைப் பயிற்சியாளர் ஆசிய மல்யுத்த வெற்றியாளர் போட்டியிலும் மற்றும் படைப்பயிற்சியாளர் உலக மல்யுத்த வெற்றியாளர் போட்டியிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2019 ஆம் ஆண்டு படைப்பயிற்சியாளர் உலக மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் சோனம் மாலிக் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார். [2]

2020 ஆம் ஆண்டில் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக்கை சோனம் இரண்டு முறை தோற்கடித்தார். முதலாவது வெற்றி சனவரி மாதம் ஆசிய வெற்றியாளர் போட்டியிலும் பின்னர் பிப்ரவரியில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் இரண்டாவது வெற்றியும் இவருக்குக் கிடைத்தன.[3] [4]

ஒலிம்பிக் கோல்ட் குவெசுட்டு அமைப்பு சோனம் மாலிக்கிற்கு ஆதரவு கொடுத்துள்ளது. இவ்வமைப்பு இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல உதவும் லாப நோக்கற்ற வேலையை செய்கிறது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "सोनम मलिक: ओलंपिक मेडल जीतने का सपना देखने वाली पहलवान" (in hi). BBC News हिंदी. https://www.bbc.com/hindi/sport-55696313. 
  2. 2.0 2.1 "Sonam Malik". WrestlingTV (ஆங்கிலம்). 2021-02-17 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sonam Malik stuns Sakshi Maliik in trials". The Times of India (ஆங்கிலம்). 2021-02-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Wrestlers Anshu Malik, Sonam Malik qualify for Tokyo Olympics; door shut on Sakshi Malik". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 April 2021. 8 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Sushil Sir inspires me to work harder: Sonam Malik". The Bridge (ஆங்கிலம்). 2019-08-06. 2021-02-17 அன்று பார்க்கப்பட்டது.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனம்_மாலிக்கு&oldid=3315563" இருந்து மீள்விக்கப்பட்டது